உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழைய எதிரிகளாலும் முடியாது; புதிய எதிரிகளாலும் முடியாது: யாரைச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

பழைய எதிரிகளாலும் முடியாது; புதிய எதிரிகளாலும் முடியாது: யாரைச் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ''பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: வரும் செப்டம்பர் 17ம் தேதி கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது. நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லா கட்சி பணி தான். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக் குடும்பத்தினரும் சேர்ந்து, தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்கிறோம். பழைய எதிரிகள் - புதிய எதிரிகள்பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று சூளுரைக்கும் திருநாள், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் முப்பெரும் விழா திருநாள் ஆகும்.

புள்ளிவிவரங்கள்

பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நிலை, மருத்துவத்துறையில் மக்களின் நலன் காக்கு சிறந்த கட்டமைப்பு, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலம், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு நிலைக்கும் வழிவகுக்கும் மாநிலம் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தமிழகத்தின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அளவுக்குத் திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.அண்மையில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் நம் மாநிலத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தனர். உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாக திமுக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும். கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம். திமுகவின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

N S
செப் 16, 2025 23:56

"திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, " அப்பா, மகன், பேரன், கொள்ளு பேரன், எள்ளு பேரன், எனும் முறையை மற்ற "பழைய எதிரிகளாலும் முடியாது புதிய எதிரிகளாலும் முடியாது ...... திராவிட மாடல் எங்கெங்கும், என்றும் தொடரும் - கட்சியிலும், குடும்பத்திலும்.


venugopal s
செப் 14, 2025 07:32

இதிலென்ன சந்தேகம்? உங்களையும் உங்கள் கூட்டாளிகளையும் தான் சொன்னார்!


நிக்கோல்தாம்சன்
செப் 13, 2025 21:42

இங்கிலாந்து வழக்கமா போயிட்டு வரும்போது பழைய விக்கு போயி புதிய பளபளப்பு வருதே தலைவரே , அதனைத்தான் சொல்றீங்களா


Saravanan Babu
செப் 13, 2025 21:23

ஐயா திராவிட மடல் ஆட்சியாளரை.. ஸ்டாலின் மாமா கொஞ்சம் திருச்சி பார்த்தீங்களா? அரியலூர் போனீங்களா எப்படி இருந்தது கூட்டம்??? விடியல் ஆட்சி..இல்ல இல்ல விடியா ஆட்சி..2026tvk Tvk...


Rajasekar Jayaraman
செப் 13, 2025 21:05

எங்களைப் போல் கொள்ளை அடிக்க பழைய எதிரியாலும் முடியாது புதிய எதிரியாலும் முடியாது.


தஞ்சை மாமன்னர்
செப் 13, 2025 20:54

இளம் விதவைகள் பற்றி புரட்சி செய்த ஒரு தலையாட்டி அக்கா எங்க கொஞ்சம் நாளா ஆளையே காணோம்...


திகழ்ஓவியன்
செப் 13, 2025 19:13

பெரியவரே சும்மா உருட்டாதீங்கள் , 80 கோடி இடம் வாங்க SOURCE அதாங்க நம்மளை IT கேட்பானே WHERE FROM SOURCE ARRIVED ,அந்த சோர்ஸ் சொல்லுங்க பக்கம் பக்கமா அப்புறம் விளக்கலாம் , பாவ யாத்திரை சென்ற போது எழுந்த COLLECTION இது தான் , அடுத்தவனுக்கு என்ன என்ன ரூல்ஸ் போடுவர். இப்போ ஐவரும் மூன்றாம் தர அரசியல்வாதி தான்.


vivek
செப் 13, 2025 20:33

பாவம் திகழ்... அழையா விருந்தாளி போல.. என்ன ரகசியம்.


Rajasekar Jayaraman
செப் 13, 2025 21:07

அப்பனுக்கு புத்தி சொல்றியா.


Pandi Muni
செப் 13, 2025 18:01

திராவிட மூடலின் கடைசி அத்தியாயத்தை எழுதும் களவாணி


R.MURALIKRISHNAN
செப் 13, 2025 17:45

வரும் தேர்தலில் உமது களவாளி கோட்டையை பேர்த்து தூக்கி வீச மக்கள் ரெடி சர்வாதிகாரி.


தியாகு
செப் 13, 2025 16:53

மூர்க்க கும்பல் ஓட்டுக்கள், மதம் மாற்றும் கும்பல் ஓட்டுக்கள், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் மற்றும் அல்லக்கைகள் குடும்ப ஓட்டுக்கள், சுயநலம் மிக அதிகம் கொண்ட அரசு ஊழியர்களின் குடும்ப ஓட்டுக்கள், சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு மதத்தின் பெயரிலும் ஜாதியின் பெயரிலும் கட்சி நடத்தும் அரசியல் கட்சிகளின் ஓட்டுக்கள், கட்டுமர திருட்டு திமுகவிடம் பிச்சை எடுத்து பிழைப்பை ஓட்டும் உண்டியல் குலுக்கிகள், ஊசி போன சோறு சாரி ஓசி சோறு திக, பெட்டி மதிமுக, சிறுத்தை குட்டீஸின் குருமா போன்ற பதிமூன்று கட்சிகளின் ஓட்டுகள், தேர்தல்கள் வரும்போது வெறும் இருநூறு ரூபாய்க்கும், சாராய பாட்டிலுக்கும், பிரியாணிக்கும், குக்கருக்கும், வெள்ளி கொலுசுக்கும், ஸ்மார்ட் வாட்ச்சுக்கும், குடும்பத்திற்கு நாலாயிரம் ரூபாய் பணத்திற்கும் மதி மயங்கும் தற்குறி டுமிழக வாக்காளர்கள் இவை ஏழும் இல்லையென்றால் கட்டுமர திருட்டு திமுக என்ற கட்சியே டுமிழகத்தில் இருக்காது. தேர்தல்களில் மூர்க்க கும்பலும், மதம் மாற்றும் கும்பலும் மதம் பார்த்து வாக்களிப்பார்கள். அவர்கள் வழிபாடு தளங்களில் இவருக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று ஜெபம் செய்து அவர்கள் மத குருமார்கள் சொல்லும் ஆட்களுக்கு மட்டும் ஓட்டு போடுவார்கள் ஆனால் இளிச்சவாய இந்துக்கள் மட்டும் மத சார்பின்மை, நடுநிலை என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு கட்டுமர திருட்டு திமுக, ஊழல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள்.இது ஒரு கசப்பான உண்மை. ஆனால் யாரும் இதை பற்றி பெரிதாக பேசுவதில்லை. இனியும் பேசாமல் விட்டால்  எதிர்காலத்தில் அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணாவின் மூன்றாம் தலைமுறை கொள்ளுப்பேரன் கூட டுமிழக முதல்வராக வந்து டுமிழகத்தை ஊழல்களாலும் லஞ்சத்தாலும் கொள்ளை அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. யோசிங்க டுமிழர்களே.


முக்கிய வீடியோ