உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்; நயினார் நாகேந்திரன் சூசகம்!

2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம்; நயினார் நாகேந்திரன் சூசகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''வரும் ஜூன் 22ம் தேதி முருகரை கையில் எடுக்க இருக்கிறோம். 2026ம் ஆண்டு தமிழகத்தையே கையில் எடுப்போம்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.மதுரையில் ஜூன் 22ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கான பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார். பின்னர், அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நாங்கள் வலிமையோடு இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டு, எங்களது கூட்டணியை தி.மு.க.,வினர் குறை சொல்கின்றனர். அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் வி.சி.க.,வுக்கு உள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருவதாக இருக்கிறது. இன்னும் உறுதியாகவில்லை. மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்கிறார்; அதற்காக அவர் விரதம் இருக்கிறார். முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு அல்ல. எந்த அரசியல் கருத்துக்களும் மாநாட்டில் பேச மாட்டோம். மதச்சார்பின்றி அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கிறோம். திருப்பரங்குன்றத்தில் எந்த பதற்றமான சூழலும் இல்லை. வரும் ஜூன் 22ம் தேதி முருகரை கையில் எடுக்க இருக்கிறோம். 2026ம் ஆண்டு தமிழகத்தையே கையில் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

புரொடஸ்டர்
ஜூன் 18, 2025 09:01

கையில் எடுக்க தமிழகம் காகித தாள் இல்லை


pmsamy
ஜூன் 18, 2025 08:02

அரசியலுக்கு முன்னால் மாநகராட்சியில் வேலை செய்து கொண்டு இருந்தாரா


venugopal s
ஜூன் 17, 2025 21:19

தமிழகத்தை கொண்டு போக விட மாட்டோம்!


Narayanan Muthu
ஜூன் 17, 2025 20:23

கூரை ஏறி கோழி பிடிக்க துப்பில்லாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம் என்கிற கதையாய் இருக்கிறது நாயனாரின் பேச்சு. முதலில் கவுன்சிலர் தேர்தலில் தமிழகத்தை கையில் எடுங்கள். பிறகு பாக்கலாம்


Jayaraman Sekar
ஜூன் 17, 2025 18:43

2026ல் தமிழகத்தை கையில் எடுப்போம் நயினார் நாகேந்திரன் சூசகம் சொல்லாதது == எடுத்து சாஃப்ட் டிராவிட் மாடலு அடீம்கா கிட்டே குடுத்துட்டு ... நாங்கோ நடுத்தெருவிலே நிப்பம்


J.Isaac
ஜூன் 17, 2025 18:09

கல்லை, கம்புவை பொம்மையை கையில் எடுக்கலாம். ஆனால் ..........


Rajasekar Jayaraman
ஜூன் 17, 2025 17:28

இது ஒரு காமெடி பீஸ்


Oviya Vijay
ஜூன் 17, 2025 17:27

என் பெயரில் சில போலியான பதிவுகள் விஷமக் கருத்துக்களோடு ஆங்காங்கே (இந்த பதிவிலும் கூட) சில விஷமிகளால் பதிவிடப்படுவதைக் காண முடிகிறது. என் பெயரைக் கெடுப்பதாக எண்ணும் அவர்களுக்கு அதில் ஒரு அல்ப சந்தோஷம்... அது ஏனென்று தெரியவில்லை... பிரியாணி அண்டா திருட்டுக் கும்பலின் கைங்கர்யம் அது என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது... ஆனால் என் கருத்தில் நான் காட்டும் துணிவும் என் கருத்தின் நேரத்தியும் இதுவரை என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் அன்பர்களுக்கு எளிதாகப் புரியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...


vivek
ஜூன் 18, 2025 08:02

கொடுமை.


Priyan Vadanad
ஜூன் 17, 2025 15:43

கடைசியில் பூனை வெளிவந்துவிட்டது. அரசியல் லாபத்துக்காக தமிழ்கடவுளையும் அவரது வேலையும், அவரது வீடுகளையும் கையிலெடுத்தாகிவிட்டது. கடவுள்களையும் தங்கள் சூழ்ச்சிகளில் சிக்க வைத்துவிடுவார்கள் இந்த பாவக்கவினர்.


Priyan Vadanad
ஜூன் 17, 2025 15:39

வடநாட்டில் ராமர் முகமூடி. தமிழ்நாட்டில் முருகர் முகமூடி. கேரளத்தில் ஐயப்பன் முகமூடி. ஆந்திராவில் வெங்கடாசலபதி முகமூடி.


புதிய வீடியோ