உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணியில் இருந்து வெளியேற்றினாலும் கவலைப்பட மாட்டோம்: திருமாவளவன்

கூட்டணியில் இருந்து வெளியேற்றினாலும் கவலைப்பட மாட்டோம்: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : ''தி.மு.க., கூட்டணியில் இருந்து, வி.சி.,யை வெளியேற்றினாலும், நாங்கள் கவலைப்பட மாட்டோம்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார். மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் எதிர்த்து போராட பல விஷயங்கள் உள்ளன. ஆனால் பா.ஜ.,வினர், திருப்பரங்குன்ற விவகாரத்தை மட்டுமே கையில் எடுத்துள்ளனர். அயோத்தி போல் திருப்பரங்குன்றத்தில், பா.ஜ.,வால் எதுவும் செய்ய முடியாது. ஓட்டுக்காக பொது வாழ்க்கைக்கு வரவில்லை. இப்படி பேசினால், தி.மு.க., எங்களை கூட்டணியில் வைத்திருக்குமா, வைத்திருக்காதா என்பது குறித்தெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். திருமாவளவனை கூட்டணியில் வைத்திருப்பதால் சிக்கல் வரும் என, தி.மு.க., நினைத்தால், அதற்காக ஒரு நாளும் கவலைப்பட மாட்டோம். நாங்கள் மத நல்லிணக்கத்தை விரும்புகிறோம். சிறுபான்மையின மக்கள் எனக் கூறுபவர்கள், யாரும் அன்னிய நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை; எங்கள் ரத்த சொந்தங்கள். அவர்களை அன்னியர்களாக சித்தரிக்க பார்க்கின்றனர்.நான் தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வரவில்லை என்பது தான், தமிழிசை போன்ற பா.ஜ.,வினரின் கவலை. தி.மு.க.,வுடன் சேர்ந்து, சனாதானிகளை எதிர்க்கிறோம். எங்களுக்கு இடம் தான் அதிகம் வேண்டுமென்றால், ஒரு பக்கம் பா.ஜ.,விடமும், அ.தி.மு.க.,வுடனும், த.வெ.க.,வுடனும் பேச முடியும். எல்லாரிடமும் நம்மால் பேச முடியும் என, தி.மு.க.,வுக்கும் நம்மால் காட்ட முடியும். அதெல்லாம் நமக்கு பொருட்டே இல்லை. ஆனால், எல்லா கதவையும் மூடிவிட்டு நிற்கிறேன் என்றால், நான் என்ன முட்டாளா, விபரம் தெரியாதவனா?எல்லோரும் சொல்வது மாதிரி, நான் ஏன் நான்கு சீட்டுக்கும், ஆறு சீட்டுக்கும் இங்கே நிற்க வேண்டும்; ஏன் நிற்கிறேன் என்றால், நான் அம்பேத்கரின் மாணவன், ஈ.வெ.ரா.,வின் பிள்ளை. அரசியல்வாதிகள் யாரும் எல்லா கதவையும் அடைத்து விட்டு அரசியல் செய்ய மாட்டர். ஆனால், நான் எல்லா கதவையும் அடைத்து விட்டு அரசியல் செய்கிறேன். பா.ம.க.,வுடன் உறவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். பா.ம.க., இரண்டாக உடைந்து விட்டது. உடைந்ததில் ஒன்று இங்கே வந்தால், ஏற்பீர்களா என கேட்கின்றனர். ஆனால், நாங்கள் ஏற்க மாட்டோம். ஜாதியவாத, மதவாத சக்திகளுடன் சில இடங்களுக்காக, நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். தி.மு.க.,வுடன் கூட்டணியில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை, தொகுதி பங்கீட்டில் நாங்கள் இறுதி செய்து கொள்கிறோம். அந்த இடங்கள் போதுமா, போதாதா என்பதை, கட்சி தலைமை குழு முடிவெடுக்கும். பா.ஜ.,வை ஆதரித்தால், சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். எல்.முருகன் போன்று, எனக்கும் தனிப்பட்ட முறையில் பதவிகள் கிடைக்கலாம். ஆனால், எனது சொந்தங்களிடம் உறவாவடி, சமூக நீதியை பேச முடியாது. பதவி இருக்கிறதோ, இல்லையோ, இறுதி மூச்சு வரை அம்பேத்கர் மாணவனாக, ஈ.வெ.ரா., பிள்ளையாக வாழ்ந்து இறந்தான் என்பது தான், திருமாவளவன் குறித்த செய்தியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சிட்டுக்குருவி
டிச 23, 2025 22:23

நான் அம்பேத்கார் மாணவர் என்று சொல்கின்றார் ஆனல் அவர் எழுதியபாடத்தை சரியாக படிக்காத அல்லது படித்தும் அறிந்துகொள்ளாத மாணவராக இருக்கின்றார் .அம்பேத்கார் இப்போது இருந்திருந்திருந்தால் இவருக்கு பெயில் மார்க் போட்டிருப்பார் .நடுசாலையில் ஒருவரை சட்ட இடையூறு இல்லாமல் தாக்கலாம் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை என்று அம்பேத்கார் பாடம் எழுதவில்லை .தான் கூட்டணியில் இருந்தால் தான் எழுதிய சட்டத்தை அரசு மீறும்போது அதைப்பற்றி விமரிசிக்காமல் அதை பாராட்டலாம் என்றும் அம்பேத்கார் பாடம் எழுதவில்லை .உங்கள் பொய்ப்புறட்டுக்கெல்லாம் அம்பேத்கார் பெயரைக்கூறி அவரை அவமானப்படுத்தாதீர்கள் .அதுவே நீங்கள் அம்பேத்காருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் .அம்பேத்கார் வாரிசுகள் யாராவது இருந்தால் அவருடைய பெயரை சட்டமீறல்களில் ஈடுபடும் திருமாவளவன் போன்றோர் அவருடைய பெயரை எங்குமே எதிலும் உபயோகிகிக்கக்கூடாது என்று நீதிமன்றம் தடைபெறவேண்டும் .


Vasan
டிச 23, 2025 22:23

திருமாவளவன் போல் ஒருவர் கிடைக்க தமிழ்நாடு புண்ணியம் செய்து இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவர் போன்ற அரிய தலைவர்களை அரசியலில் பார்க்க முடிகிறது.


panneer selvam
டிச 23, 2025 22:16

Thiruma ji , do you know the difference of opinions of Ambedkar with Periyar ? it is too vast . Both leaders are totally different . So do not fool the people just quoting Ambedkar and Periyar simultaneously


V K
டிச 23, 2025 22:08

என்ன அய்யா இந்த மாதம் சம்பளம் போடவில்லையா?


Sun
டிச 23, 2025 21:30

என்னைய அடிக்கிற மாதிரி நீ முதல்ல நடி! நடிப்புன்னு தெரியக் கூடாத அளவுக்கு ஓவரா அடிக்கனும் ஓகே ! ஓகே பாஸ்! அப்புறம் உன்னைய அடிக்கிறது மாதிரி நான் நடிப்பேன் !அப்புறம்? அதை அப்புறம் சொல்றேன்! ஓகே! ஓகே! பாஸ்!


Rajah
டிச 23, 2025 21:29

ஜாதி, மதம் இந்த இரண்டையும் வைத்து அரசியல் செய்வதில் முதலிடம் விசிக்கவுக்கே. இந்த லட்சனத்தில் இவர் பாமக பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. இவர் இன்னும் நாம் தமிழர் காட்சியைச் சேர்ந்த ஒருவர் ராமசாமி பற்றி விவாதத்தில் பேசியதை கேட்கவில்லை போலும். அதற்கெல்லாம் இவர் பதில் சொல்ல மாட்டார்.


sankaranarayanan
டிச 23, 2025 21:27

இறுதி மூச்சு வரை அம்பேத்கர் மாணவனாக, ஈ.வெ.ரா., பிள்ளையாக வாழ்ந்து இறந்தான் என்பது தான், திருமாவளவன் கூறியுள்ளாரே அப்படி என்றால் அவர்களைப்போல் இவரும் ஆட்சியில் பங்கு கொள்ளாமல் இருப்பாரா அல்லது திமுக செயல்களை வெறுப்பாரா


Narasimhan
டிச 23, 2025 21:04

விஜய் கிட்ட சேந்துருவோம்


Palanisamy Sekar
டிச 23, 2025 21:04

சாதி என்கிற ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்வதை தவிர என்னத்த உங்களை சொல்ல. பதவி இல்லாமல் இருக்க முடியாத நீங்கள் உங்களின் தொண்டர்களுக்கு அதனை விட்டுக்கொடுக்க மனமில்லையே. நீங்களும் மிக மிக சாதாரணமான திமுக தொண்டனை போலவேதான் தெரிகின்ரீர்கள்


mindum vasantham
டிச 23, 2025 20:57

பிஜேபி யினர் நிலை படு பாதாளத்துக்கு சென்றுள்ளது என்றே அதிமுக அளிக்கும் சீட் இல் இருந்து தெரிகிறது


சமீபத்திய செய்தி