உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று (ஜூன் 06) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.திண்டுக்கல், திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று (ஜூன் 06) கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை (ஜூன் 07)

கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை (ஜூன் 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; அதிகபட்சம் 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்