உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிச., 15ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

டிச., 15ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 15 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் பல மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, நாகை மாவட்டம் கோடியக்கரையில் 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நான்கு இடங்களில் மிக கனமழையும் 72 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அடுத்து இரண்டு நாட்களுக்கு தமிழகம் புதுவை காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம்வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரைஅக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பதிவாக வேண்டிய இயல்பான மழை அளவு 40 செ.மீ.,பதிவான அளவு 47 செ.மீ.,இது 16 சதவீதம் அதிகமாகும்இன்று காலை முதல் மதியம் 2 மணி வரை பதிவான மழை அளவு:மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு -11 செ.மீ., நெற்குன்றம் 10 செ.மீ., மீனம்பாக்கம் 8 செ.மீ., அண்ணாபல்கலை , தரமணி தலா 7செ.மீ., பூந்தமல்லி, நந்தனம் தலா 6 செ.மீ., கொளப்பாக்கம், பூந்தமல்லி ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி தலா 5 செ.மீ.,அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 15 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

விட்டு விட்டு மழை ஏன்

காற்றழுத்த தாழ்வு மெதுவாக நகர்வதால் மேகக்கூட்டம் தமிழக முழுவதும் பரவி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி இயல்பு காரணமாக விட்டு விட்டு மழை பெய்கிறது. பகல் நேரம் இரவு நேர மாறுபாடும் ஒரு காரணமாகும்.

கணிப்புகள் தவறுவது ஏன்

வானிலையியல் முழுமையாக அறிந்து கொள்ளப்பட்ட அறிவியல் கிடையாது. இன்று 100 சதவீதம் கணிக்கக்கூடிய அளவு இது இல்லை. வானிலை நிகழ்வு பல விஷயங்களினால் நடக்கும். பல நேரங்களில் அனைத்தும் ஒருங்கிணைந்து சரியாக நடக்கும் போது கணிப்புகள் சரியாக இருக்கும். ஆனால், எதிரெதிர் திசையில் நகரும் போது கணிப்புகள் தவறாக வாய்ப்பு உள்ளது. இது அறிவியல் நிலை. அறிவியல் தொழில்நுட்பம் வளரும் போது எதிர்பார்க்கக்கூடிய கணிப்பு கிடைக்கும். புயல் உருவாகும் போது காற்று நேர் திசையில் செல்லும். புயல் சுழலும் போது காற்றும் சுழலும். அப்போது திசைமாறும் புயல், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறுகிறது. இதற்கு பிறகு சக்தி பரிமாற்றம் உள்ளது. இது முழுமையாக அறியப்பட வேண்டும். இன்றைய நிலையில் முழுமையாக அறியப்படவில்லை. முழுமையாக அறிவியல் அறியப்பட வேண்டும். அது தொழில்நுட்பத்தில் இணைய வேண்டும். தொழில்நுட்பம் மட்டும் போதாது. அறிவியல்பூர்வமான ஆய்வுகளும் அவசியம்.

உலகம் முழுதும்

அட்லாண்டிக் பகுதியிலும் புயலின் போது கணி்ப்புகள் தவறின. தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே நிலைதான். அட்லாண்டிக் பகுதியில் புயலின் போது 112 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றனர். ஆனால் புயல் கரையை கடந்த போது 260 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயலுக்குள் விமானத்தை செலுத்தி அட்லாண்டிக் பகுதியில் விவரங்களை சேகரிக்கின்றனர்.இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராமகிருஷ்ணன்
டிச 13, 2024 07:26

வருகிற புயல் சென்னையை கவனிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.


கனோஜ் ஆங்ரே
டிச 12, 2024 17:51

வானிலையியலை முழுமையாக அறிந்து கொள்ளவே முடியாது...? ஏனெனில், அது இறைவன் அல்லது இயற்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது அற்ப மனிதப் பதர்களால் அறிந்து கொள்ள முடியாத “நதி மூலம்”. படிச்சவன் நாட்டை கெடுத்தான்...னு சொல்ற மாதிரி... ஒருத்தன் படிச்சிட்டதாலயே அறிவியல், தொழில்நுட்பத்தை வைத்து இயற்கையை அளக்க நினைத்தால்... அல்லது.. மூலத்தை அறிய நினைத்தால்... அதன் வழியை அறிய நினைத்தால்...? அதுபோன்ற ஒரு அறிவீலித்தனம் ஏதுமில்லை. “எல்லாம் எமக்குத் தெரியும்” என்ற எண்ணமே தலைக்கணத்தின், திமிரின், ஆணவத்தின் முதற்படி... இவ்வளவு பேசும் அறிவியல் தொழில்நுட்பவியலாளர்கள், தாங்கள் தனது அன்னையில் வயிற்றில் கருவாய் எப்படி உருவானார்கள் என்று சொல்ல முடியுமா...? தன்னை படைத்த இயற்கையையே அறிய நினைத்தால்... அந்த மனித இனம் அழிந்துவிடும்... அதன் ட்ரையல்தான்... ட்ரைலர்தான் 2000ஆம் ஆண்டிலிருந்து உலகின் பல்வேறு மூலை முடுக்கெல்லாம் நடைபெற்ற சுனாமி, பூகம்பம், பெருவெள்ளம், பெரும்புயல், சூறாவளி, கொரோனா போன்றவை... “ஆடாதடா, ஆடாதடா மனிதா... ஆட்டம் போட்டா அடங்கிடும்டா இயற்கை”


முக்கிய வீடியோ