உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை கரையை கடந்து வலுவிழந்தது. எனினும், இன்று ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் மேற்குவங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை 4:30மணிக்கு சென்னை அருகே கரையை கடந்தது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. அதே சமயத்தில், தமிழகத்தில் வட மாவட்டங்களின் மேல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்திய வானிலை துறை அறிக்கை: வட கிழக்கு பருவ காற்று காரணமாக, வங்கக் கடலில் அடுத்தடுத்த நிகழ்வுகள் உருவாவதற்கான சூழல் நிலவுகிறது. இது, கடலோர மாவட்டங்களுக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில், வரும் 20ல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் 22ல் உருவாக வாய்ப்புள்ளது. இது வலுவடைந்து, வட மேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

pradesh pradesh
அக் 18, 2024 17:30

நோட் ட்ரைனிங் சும்மா தகவல் சொல்லாதீங்க எங்கே நியூஸ் உயர்கி யாரும் கண்டு புடிக்க முடியது அமெரிக்கா வாணியல்ல கண்டியப்பா முடியம் சென்னை வெதேர் வெஸ்ட்


BALACHANDRAN
அக் 18, 2024 08:30

தொடர்ந்து ஆராய்ச்சி ராக்கெட் விண்வெளி கண்டுபிடிப்பு இதனால் இயற்கை மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா. யாராவது தெரிந்தால் தெரியப்படுத்தலாம்


Lion Drsekar
அக் 18, 2024 06:26

இனி வான் மண்டலத்தை பொறுத்தவரையில் நாம் நமது மீனவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், அவர்கள் கணிப்பு கச்சிதமாக இருக்கும், இது உண்மை, நம் மக்களுக்கு ஒன்று ஓய்வு கொடுக்கலாம் அல்லது உண்மையிலேயே மக்களுக்கு சேவைசெய்ய பணியில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ளது போல் சரியான கருவிகளை வழங்கவேண்டும், இங்கு நாம் கண்டிப்பாக குறிப்பிடவேண்டியது, எல்லா துறைகளைப்போலவும் இவர்களும் உண்மையைக் கூறமுடியாது என்று முன்னாள் அதிகாரி திரு அம்மன்னன் கூறியிருக்கிறார், அதாவது எந்த செய்தியாக இருந்தாலும் உண்மையை கூறமுடியாத நிலை என்று பல முறை கூறியிருக்கிறார் அதுவும் ஊடகங்கள் வாயிலாக, இதில் என்ன என்று அவர்களுக்குத்தான் தெரியும், மக்களுக்காக ஜனநாயகம், ஆனால் முடியாட்சியில் எல்லாமே தலைகீழ் , வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை