மேலும் செய்திகள்
ராமநாதபுரம் டு காஞ்சி வரை கனமழை பெய்யும்
03-Oct-2024
சென்னை: 'வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் ஒரே சமயத்தில் மூன்று இடங்களில், வளி மண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய அரபிக் கடல் பகுதியில் நிலவிய, வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், அங்கு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.புயல் வலுவாக வாய்ப்பு
இது, தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவுகிறது. அடுத்து வரும் நாட்களில், இது புயலாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதற்கு அடுத்த படியாக, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.ஒரே சமயத்தில் மூன்று நிகழ்வுகள் இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், நாமக்கல், அரியலுார், பெரம்பலுார், கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.மேகமூட்டம்
கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டியது. இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை விவரம், மில்லி மீட்டரில்;மாக்கினாம்பட்டி, கோவை- 120,மாதவரம்- 86.7நிலக்கோட்டை - 72பொள்ளாச்சி 72அடையார் 66.3ஆனந்தபுரம்,விழுப்புரம் 66புழல் 60பாலார் அணை 60.2சூலுார் 59.1சோலையார் 57கொளத்துார் 55.2நாமக்கல் 55சேலம் 54.6தொண்டையார்பேட்டை 53.4பெருங்காலுார் 53ஆவடி 53மணலி 52.8பில்லுார் அணை 49செங்குன்றம் 49சத்திரப்பட்டி 47.2ஆனைமலை 46வானகரம் 44.4துவாக்குடி திருச்சி 43சோழிங்கநல்லுார் 42.2வாரப்பட்டி கோவை 42பாம்பார் அணை 42முகலிவாக்கம் 42கேளம்பாக்கம் 42ஆற்காடு 40.6அம்பத்துார் 40.5மீனம்பாக்கம் 40.2சின்கோனா 40ஊத்துக்கோட்டை 40கும்மிடிப்பூண்டி 40சின்னக்கல்லார் 38பெருங்குடி 37.8உப்பார் அணை 37எழுமலை 36பார்வுட்,நீலகிரி 35உசிலம்பட்டி 33திண்டுக்கல் 32கந்தர்வக்கோட்டை 31குண்டடம் 31ஒட்டப்பிடாரம் 30மடத்துக்குளம் 30ஆலந்துார் 28.8மஞ்சளாறு தேனி 27தொண்டாமுத்துார் 26ஆயிகுடி 20சிவகிரி 20மாதவரம் 86.7அடையார் 66.3புழல் 60பாலார் அணை 60.2கொளத்துார் 55.2நாமக்கல் 55தொண்டையார்பேட்டை 53.4மணலி 52.8வானகரம் 44.4துவாக்குடி திருச்சி 43சோழிங்கநல்லுார் 42.2பாம்பார் அணை 42முகலிவாக்கம் 42கேளம்பாக்கம் 42ஆற்காடு 40.6அம்பத்துார் 40.5மீனம்பாக்கம் 40.2பெருங்குடி 37.8ஆலந்துார் 28.8
03-Oct-2024