உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / களைகட்டும் பொங்கல் கொண்டாட்டாம்: சொந்த ஊருக்கு 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்

களைகட்டும் பொங்கல் கொண்டாட்டாம்: சொந்த ஊருக்கு 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் கடந்த 3 நாட்களில் மட்டும் 6.40 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை நேற்று முதல் துவங்கியது. பொங்கலுக்காக வரும் (ஜன)14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் முன்பதிவு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. நேற்று (ஜன.12) மட்டும் தமிழகம் முழுவதும், ஒரே நாளில் சிறப்பு பஸ்களில் 2,17,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். கடந்த 3 நாட்களில் ஒட்டுமொத்தமாக 6.40 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.வழக்கமாக பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க சொந்த ஊர் செல்வதை மக்கள் விரும்புகின்றனர். இதனால் சொந்த ஊர் சென்ற பயணிகள் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mediagoons
ஜன 13, 2025 15:32

தமிழர்கள் யாருக்கும் கும்ப மேளா செல்ல விருப்பம் இல்லையோ?


ponssasi
ஜன 13, 2025 11:37

செங்கல்பட்டு அடுத்த பரனூரில் ஒரு பேரூந்துநிலையம் அமைக்க வேண்டும், மெட்ரோ மற்றும் மின்சார ரயில் காலதாமதமில்லாமல் இயக்கவேண்டும், அப்போதுதான் நெரிசல் இன்றி மக்கள் பயணம் செய்யமுடியும். கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் என்றாலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் தாம்பரத்தில் கொண்டுவந்து இறங்குகிறார்கள், அங்கு மக்கள் நிற்கவே இடமில்லாத போது பேருந்துகள் எப்படி செல்லமுடியும். மேலும் பரனூர் to தாம்பரம் பேருந்துகள் வரவே தேவையில்லை நேரம் மற்றும் எரிபொருள் மிச்சமாகும்,


M Ramachandran
ஜன 13, 2025 10:19

போயிட்டங்க சரி. திரும்பும் போது தானே பிரச்னை. மூல காரணம் விடியல் அரசு. தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்திற்கு தடையாய் இருந்தது முன்பும் தற்போதும் இருப்பது திருட்டு விடியல் கட்சி. திரும்பும் மக்களுக்கு விழி பிதுங்கும் சாலை வசதி போதாது. செங்கல்பட்டிலிருந்து சென்னையை அடைய மாற்று வழியோ அல்லது பறக்கும் சாலையோ கிடையாது.


புதிய வீடியோ