உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவண்ணாமலையில் சட்ட விரோத கட்டடங்கள் அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன: ஐகோர்ட்

திருவண்ணாமலையில் சட்ட விரோத கட்டடங்கள் அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவண்ணாமலை மலையில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலின் மலை பாதையில் உள்ள சட்ட விரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எந்த அனுமதியும் பெறாமல், 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளன. அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதிகள், 'திருவண்ணாமலை மலை பாதையில் 1,535 சட்ட விரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து, மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வரும் 20ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு?

இதேபோல், திருவண்ணாமலையில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கும் நேற்று, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, 'நில நிர்வாக ஆணையர் தரப்பு அளித்த அறிக்கையில், நீர் நிலைகள் என மனுதாரர் குறிப்பிட்டுள்ள 170 இடங்களில், 84 மட்டுமே நீர் நிலைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, 'வகைப்படுத்தப்பட்டு உள்ள 84 நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா; அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
ஜூன் 07, 2025 12:40

ஒரு நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்தின் பேச்சை மதிப்பதில்லை.


rama adhavan
ஜூன் 07, 2025 10:34

இப்படி அறிக்கை மேல் அறிக்கை கேட்டே வழக்கை இன்னும் 25 வருடங்கள் இழுக்கலாம். இதற்கு பின் அப்பீலில் மேலும் 50 வருடங்கள் தள்ளலாம். அதற்குள் ஓரு இலச்சம் ஆக்கிரமிப்புகள் உருவாகும். ஏன் சட்டு புட்டுன்னு முடிக்க சட்டம் இல்லையோ?


கல்யாணராமன்
ஜூன் 07, 2025 12:30

நீங்கள் சொன்ன கருத்தையே ஆயிரம் பேர் சொல்ல நினைத்திருப்பார்கள் நான் உள்பட.


Amar Akbar Antony
ஜூன் 07, 2025 08:48

ஐயா ரொம்பவே உங்களை உங்கள் பதவி கட்டுபடுத்துகிறது போல. தங்களுக்கே தெரியும் இப்படி அஸ்த்திவாரம் போட்டு கட்டிடங்கள் எழும்பியது எப்படியென்றும் எதற்க்காக உ பி கள் இறைவன் பெயரை சொல்லி கொள்ளையடிக்கிறானென்றும் தெரியும் அன்றோ? எங்கு கீவில்கள் இருந்தாலும் ஸ்பெஷல் பக்தி தீய மு க வினர்க்கு வந்துவிடும். லாட்ஜ் கட்டி வியாபாரம் செய்து கொள்ளையடிக்கும் இவர்கள் கூட்டத்தை ஒழித்தாலே இந்துக்கள் என்னும் நேர்மையான பக்தர்களுக்கு விடியல்தான் .


V Venkatachalam
ஜூன் 07, 2025 08:01

சட்ட விரோதமாக கட்டுமானம்? ரௌடி சேகர் பாபுவுக்கு தெரியாதா? இதற்கு மூல காரணமே எத்தன் எ வாவ் வேலு தான். எத்தன் எ வாவ் வேலுவை பப்ளிக் கில் வைத்து நாலு சாத்து சாத்தினாலே போதும். சட்ட விரோத கட்டுமானங்கள தானாகவே காலி பண்ணிடுவானுங்க. கலெக்டர் அறிக்கை தேவையே இல்லை. கிரிவல பாதையில் முளைத்திருக்கும் அசைவ கடைகளை காணாமல் அடிக்கணும். திருட்டு தீய முக காரனுக்கு பண்ணும் அராஜகத்துக்கு அளவே இல்லை.


கல்யாணராமன்
ஜூன் 07, 2025 12:32

இந்த கைங்கர்யத்தை கிரிவலம் செல்லும் பக்தர்கள் செய்தால் ஒன்றும் செய்ய முடியாது.


GMM
ஜூன் 07, 2025 07:27

சட்ட விரோத கட்டுமானம், நீர் நிலை ஆக்கிரமிப்பு என்றால் அரசு ஆவணம் இல்லாதது. ஆக்கிரமித்தவர் உரிமையாளர் அல்ல. சண்டை உருவாகும். இருக்கும் நபரை வெளியேற்றி, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு பகுதியில் மின் இணைப்பு வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவை வழங்க கூடாது. சட்டபடி முடியாது என்றால், இருப்பிட முகவரி அந்த பகுதி c / o கிராம நிர்வாக அலுவலகம் என்று இருக்க வேண்டும்.


Raja k
ஜூன் 07, 2025 07:26

திருவண்ணாமலை மலைமேல் மற்றும் மலையை சுற்றி உள்ள அனைத்து வகையான கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டும், இதில் பாரபட்சமோ, தயுவு தாட்சன்யமோ காட்டக்கூடாது


Svs Yaadum oore
ஜூன் 07, 2025 06:49

அண்ணாமலையார் கோவிலில் ஏகப்பட்ட புகார்கள் பிரச்சனைகள் ....இதற்கு விடியல் ஆட்சியில் ஹிந்து அற நிலையத்துறை என்ன நடவடிக்கை?? ...இந்த கோவிலுக்கு வெளி மாவட்டங்கள் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை ...இவர்களிடம் காசு வாங்கி இடைத்தரகர்கள் ஆதிக்கம் ...பொது தரிசன பாதை மற்றும் கட்டண தரிசன பாதையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலையில், காசு வாங்கி விரைவாக சுவாமி தரிசனம் செய்ய வைத்து ஆதாயம்.....இதனால் வரிசையில் காத்திருப்போர் இடையே அடிதடி ....உள்ளூர் மக்களால் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலைமை ...சுவாமிக்கு அணிவித்த மாலைகளை வெளியே எடுத்து வந்து கொடுத்து பணமாக்குகின்றனர்.....


rama adhavan
ஜூன் 07, 2025 10:39

அரசே கோவிலில் விரைவு தரிசனம் என 100, 200 வாங்கும்போது ஏஜென்ட் என்னும் தனி நபர் ஏன் வாங்கக்கூடாது? கோன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழியே.


Svs Yaadum oore
ஜூன் 07, 2025 06:35

எந்த அனுமதியும் பெறாமல், 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளனவாம் ??..84 நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்??....இதெல்லாம் விடியலுக்கு தெரியாமல்தான் கட்டினார்களா ??...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை