உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பது 100 விழுக்காடு தவறானது; சொல்கிறார் திருமா!

ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பது 100 விழுக்காடு தவறானது; சொல்கிறார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, மன்னராட்சி என்று விமர்சிப்பதை ஏற்க இயலாது. ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பது 100 விழுக்காடு தவறானது' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.சென்னை நந்தம்பாக்கத்தில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ' தமிழகத்தில் மன்னராட்சி நிலவுகிறது. 2026ல் அந்த மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்' என பேசியது அரசியல் வட்டாரங்களில் புயலை கிளப்பியது.இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில், 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று கடந்த முறை, ஆதவ் அர்ஜூனா பேசிய போது, 'விளக்கம் கேட்போம், நடவடிக்கை எடுப்போம்' என கூறினீர்கள். ஆனால் எந்த வீதமான நடவடிக்கையும் எடுத்த மாதிரி இல்லை. இந்த முறை நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பலர் கூறி வருகின்றனர்' என நிருபர் எழுப்பிய கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில்:கடந்த முறை உயர்நிலை குழு கூடி பேசினோம். அவர் சில விளக்கங்களை தந்தார். கூட்டணி குறித்து எந்த கருத்தையும் நான் சொல்லவில்லை. யாருடனும் நீங்க கூட்டணியை வைக்கலாம். அது தலைமை எடுக்கின்ற முடிவு. அதற்கு நான் கட்டுப்படுவேன். ஆனால், எளிய மக்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நான் பேசுவதற்கு சுதந்திரம் இல்லையா? ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது ஏற்கனவே விடுதலை சிறுத்தைக் கட்சி பேசிய கருத்து தானே. அதை இப்போது நான் கூறியிருக்கிறேன் என ஆதவ் அர்ஜூனா விளக்கத்தை தந்தார்.

100% தவறு

இந்த விளக்கத்தை, உயர்நிலை குழு ஏற்றுக்கொண்டது. தற்போது அவர் பேசியிருக்கும் கருத்து 100 விழுக்காடு தவறானது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, மன்னராட்சி என்று விமர்சிப்பதை ஏற்க இயலாது. உயர்நிலை குழுவில் இது குறித்து நிச்சயம் கலந்து ஆலோசித்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கத்தை கேட்போம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

நிக்கோல்தாம்சன்
டிச 07, 2024 20:55

வாரிசு அரசியல் ஒழிக்கப்படவேண்டும் தமிழகம் அதற்க்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்...


sankaran
டிச 07, 2024 19:48

அது என்ன விழுக்காடு ... பெர்ஸண்டஜ் என்று சொல்லுங்கப்பா ...


HoneyBee
டிச 07, 2024 18:20

பாவம் இப்படி சொல்லா விட்டால் அறிவாலய வாசலில் பிச்சை எடுக்க விடமாட்டார்கள்... ஒரு பெட்டி கூட கிடைக்காது


Jay
டிச 07, 2024 18:15

மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்படவேண்டும். இது யார் பேசினாலும் சரியே. பல நூற்றாண்டுகள் மன்னராட்சி முறையில் இருந்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஜனநாயகம் கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தின் மாபெரும் பெரிய எதிரி இந்த பரம்பரை பரம்பரையாக மன்னர் ஆட்சி நடத்துவது தான். மன்னராட்சி நடந்த காலத்தில் கூட மன்னர்கள் போர் பயிற்சி பெற்று தங்கள் நாட்டுக்காக இன்னுயிரை கூட கொடுத்தார்கள். இன்று நான்கு வார்த்தைகள் சேர்த்து பேச முடியாத ஒருவர் மன்னராட்சி முறையில் முதலமைச்சராவது ஒத்துக்க முடியாது தான். திறமையானவர்களுக்கு ஓட்டு போட்டால் தான் ஜனநாயகம் செழிக்கும் மக்களுக்கு நன்மை நடக்கும். காலம் காலமாக இருந்த மன்னர் ஆட்சி, ஜாதி பிரிவு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு திறமையானவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஓட்டு போட வேண்டும்.


ramesh
டிச 07, 2024 17:52

dmk வில் திருமா வெளி ஏறுவதை தான் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள். எல்லாரையும் விட ராமதாஸ் தான் அதிக எதிர் பார்ப்புடன் இருக்கிறார்


Rajan
டிச 07, 2024 17:18

கட்சி உண்டியல் சாரி சூட்கேஸ் தான்


Rajasekar Jayaraman
டிச 07, 2024 15:10

அப்போ கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கி அறிக்கை விட்டால் ஆண் பிள்ளை.


பாலா
டிச 07, 2024 15:09

ராஜபக்சா உடன் சாப்பிட்டது ?


ஆரூர் ரங்
டிச 07, 2024 14:51

குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்க்குமாம்.


Sankare Eswar
டிச 07, 2024 14:22

லொள் லொள்... ரொட்டி போடுங்க எசமான்.


சமீபத்திய செய்தி