உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? கமல் கொடுத்த வித்தியாச பதில் இதுதான்!

கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? கமல் கொடுத்த வித்தியாச பதில் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'நீங்கள் கட்சியில் சேருங்கள் நான் சொல்கிறேன்' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பதிலளித்தார்.சென்னையில் நிருபர்களிடம் கமல் கூறியதாவது: நூறாண்டுகள் மக்கள் நீதி மய்யம் செயல்பட வேண்டும் என்பதுதான் ஆசை. ஏன் ஆசைப்படக்கூடாது. உங்கள் பிள்ளை நூறு வருடங்கள் வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட மாட்டீர்களா? உங்க அப்பா ஆசைப்பட மாட்டாரா? அதே ஆசை தான் எனக்கும். கொண்டு செல்கிறவர்கள் பொறுப்பு என்ன என்பதை தான் நான் ஞாபகப்படுத்தினேன்.எனக்கு 70 வயது ஆகிவிட்டது. மக்கள் நீதி மய்யம் நூறு வருடம் வாழ வேண்டும் என்றால் யார் வேலை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கட்சியினர் கூறினர். சில சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கிறது. அதையெல்லாம் சரி செய்து விடுவோம் என்று நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வேன். கட்சியில் இருக்கும் அனைவருமே வேலை செய்கிறார்கள். யாருமே இங்க 24×7 அரசியல்வாதி கிடையாது. அவரவர்களுக்கு வேலை இருக்கிறது. அவர்கள் வேலையை செய்து கொண்டு கட்சிப் பணியையும் செய்கின்றனர். மீதமுள்ள இருக்கும் நேரத்தில் எல்லாம் அவர்கள் கட்சி வேலையை தான் செய்வார்கள். இவ்வாறு கமல் கூறினார்.

வித்தியாசமான பதில்!

கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'நீங்கள் கட்சியில் சேருங்கள் நான் சொல்கிறேன்' என கமல் பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

vadivelu
செப் 21, 2025 13:56

ஒன்று இரண்டிலாவது டிபாசிட் வாங்கி காட்டுவோம்.


Venkatesan Ramasamay
செப் 21, 2025 10:01

டால்மியா சிமெண்ட் வாங்கணும் ....


ராமகிருஷ்ணன்
செப் 21, 2025 05:34

காசுக்காக மரத்துக்கு மரம் குதிக்கும் கூத்தாடிபய. திமுகவின் பணத்துக்காக எங்கிருந்து வேண்டுமானாலும் குதிப்பான். தமிழக மக்களின் தலையெழுத்து, திமுக அழிந்தால் தான் இம்மாதிரியான ஆட்கள் ஒழிவான்கள்.


r ravichandran
செப் 21, 2025 01:29

கட்சி தான் ஏற்கனவே திமுகாவிடம் அடமானத்தில் இருக்கிறதே.


Sivasankaran Kannan
செப் 20, 2025 23:34

i am die hard fan of Kamalhassan as an actor. now also. but die hard hater of his politics and slavary with drividian mafia master family.


Srinivasan Narasimhan
செப் 20, 2025 22:17

வெட்கம் மானம் சூடு சொரணை...?


Suppan
செப் 20, 2025 21:59

இந்த மக்கள் நீதி மய்யம் மக்கள் பாதி மையமாகி மக்கள் மீதி மய்யமாகி இப்பொழுது திமுகவுடன் ஒன்றிணைந்து மக்கள் பேதி மையமாகி விட்டது. கமலைத் தவிர வேறு யாராவது இந்தக் கட்சியின் பெயரைச் சொல்கிறார்களா? அவரம் சில நாட்கள் கழித்து மவுனமாகி விடுவார்


Vasan
செப் 20, 2025 21:54

Well said Kamalhassan Sir. Every politician in India should have this much wisdom like you. Now that you have become Rajya Sabha MP, we expect you to carry the legacy and upheld Tamilnadus image in Rajya Sabha.


kr
செப் 20, 2025 21:50

After Vijay’s entry, master has reactivated this coolie to counter cinematic attraction. Innum ethanai Kaalam thaan ematruvaar intha naatile


R SRINIVASAN
செப் 20, 2025 21:25

He is trying ride two horses at the same time. At present both horses are limping


சமீபத்திய செய்தி