உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெங்கு காய்ச்சலால் ஒன்பது பேர் பலி; என்ன காரணம்?

டெங்கு காய்ச்சலால் ஒன்பது பேர் பலி; என்ன காரணம்?

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெறாததால் தான் இறந்ததாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் அளித்த பேட்டி:

டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்' வகை கொசு நன்னீரில் வளரக்கூடியது. தற்போது மழைக்காலம் என்பதால், கூடுதலாக உற்பத்தியாகும். எனவே, வீடு மற்றும் சுற்றுப்புறங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும். தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புகள், 2012ம் ஆண்டில் 66 பேர்; 2017ல் 65 பேர் என பதிவாகி உள்ளது. இந்த இரண்டு ஆண்டுகள் தான் உயிரிழப்புகள் அதிகம். தற்போது, டெங்கு உயிரிழப்பு ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. இந்தாண்டில் இதுவரை, 16,546 பேர் பாதிக்கப்பட்டு, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும், 1,500க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்குவால் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் இதய நோயாளிகளாக உள்ளனர். அவர்கள் காய்ச்சல் பாதித்தபோது, மருத்துவமனைக்கு வராமல் வீட்டிலேயே இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அளவிலான காய்ச்சல் பாதிப்பு என்றாலும், உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரையில் மட்டுமே மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

சந்திரன்
அக் 28, 2025 17:31

சுகாதாரம் பற்றி நன்கு தெரிந்த ஒரு மருத்துவம் படித்தவர் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தால் இது போன்ற நேரங்களில் திறம்பட கையாள்வார்கள். என்ன சுப்ரமணியா ? கொரொனா எல்லாம் எப்படி போயிக்கிட்டு இருக்கு? என இவரோட தலைவர் இவரைக் போனில் கேட்க நல்லாப் போய்க்கிட்டு இருக்கு தலைவரே! அப்படின்னு இவர் பதில் சொல்ல அப்படி சுகாதாரத்துறை அமைச்சரானவர் நம்மோட சுகாதாரத் துறை அமைச்சர்.


ஆரூர் ரங்
அக் 28, 2025 14:45

யாரந்த சார்? சார் உதவியில் இன்பப் பயனாளி?


sankar
அக் 28, 2025 12:50

மோடிதான், ஒன்றிய அரசுதான் காரணம் என்று சொல்லுங்க சார்


அருண் பிரகாஷ் மதுரை
அக் 28, 2025 12:25

டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் எதற்காக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றார்கள். டெங்கு காய்ச்சல் பாதித்தவர்கள் ரத்தத்தட்டுகள் குறைவதால் இறந்து போவார்கள். நீங்கள் என்னமோ இதய நோயாளிகள் கதை விடுகிறீர்கள்.. மாரடைப்பு வந்து இறந்தார்களா. ஒரு சுகாதார மந்திரியாக நீங்கள் விளக்கம் கொடுக்கிறோம் என்ற பெயரில் உங்கள் இயலாமையை மறைக்காதீர்கள்..10 வருடம் ஆட்சியில் இல்லாமல் இருந்தீர்கள்..மக்கள் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார்கள்.. ஆனால் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.என்ன ஆட்சி நடத்துகிறீர்கள்..எந்த துறையும் சரியில்லை.. ஆனால் டாஸ்மாக்,பதிவுத்துறை, மணல் இப்படி வளம் கொழிக்கும் துறைகளில் எந்த பிரச்சினையும் இல்லை.


Vasan
அக் 28, 2025 12:05

பீகாரில் இருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்னைக்கு வந்த ஹிந்தி கொசுவே காரணம் என்று கூட கூறுவார்கள் இங்கே வெறுப்பு அரசியல் செய்பவர்கள்.


Sun
அக் 28, 2025 11:23

முன்பெல்லாம் இது போன்ற பருவமழை காலங்கள், காய்ச்சல் பரவும் காலங்களில் சுகாதாரத்துறை அலுவலர்கள் வீட்டுக்கு வீடு வந்து ஆய்வு மேற் கொள்வார்கள். ஆனால் மாரத்தான் அமைச்சர் காலத்தில் இது வெகுவாக குறைந்து விட்டது.


N S
அக் 28, 2025 11:21

மருத்துவ பயனாளிகள் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெறாததால் தான் இறந்ததாக நல்வாழ்வு துறை அமைச்சர் கூறினார். எனவே மக்கள், திராவிட மாடல் அரசு மருத்துவ மனையில் உரிய வசதிகள் இருக்கிறதா என்று அறிந்து பின்னரே பயனடையும் படி வேண்டிக்கொள்ள படுகிறார்கள்.


theruvasagan
அக் 28, 2025 11:19

சுக ஆதார மந்திரிக்கு தன் துறை பொறுப்புகளை விட தலைக்குமேல எம்புட்டு வேலை கிடக்குதுன்னு யாருக்காவது தெரியுமா. முதல்வரோட துணை முதல்வரோட மேயரோட இதர நிழ்ச்சிகளில் கலந்து கொள்வது தலையாய கடமை. முந்தாநேற்று அடையாறு முகத்துவார போட்டோ ஷூட்டில் கலந்துகொள்ள போகாம இருக்க முடியல.டெய்லி ஏதோ ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுககு போயே தீரவேண்டும். அவ்வளவு வேலைப்பளு. பாவம். என்னதான் பண்ணுவார். அதானா தனது துறையில் நிகழும் ஒவ்வொரு திடுக்கிடும் சம்பவத்துக்கும் மக்கள் பயப்படாத வண்ணம் ரொம்ப திறமையாக ஒரு சப்பை காரணத்தை கண்டுபிடித்து சொல்லிவிடுகிறார்.


jayaram
அக் 28, 2025 11:15

கொசு இன விருத்திக்கு ஒன்றிய அரசே காரணம் உடனே தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும்? தில் இருக்கா?


c.mohanraj raj
அக் 28, 2025 09:49

பழியை போடு ஒன்றிய அரசு மீது மோடி தான் காரணம் என்று


புதிய வீடியோ