உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு: திருப்பிக் கேட்கிறார் திருமா!

அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு: திருப்பிக் கேட்கிறார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: 'வரும் 2026ம் ஆண்டு தி.மு.க., கூட்டணியில் வி.சி.க., தொடருமா' என்று நிருபர் எழுப்பிய கேள்விக்கு, 'அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்' என திருமாவளவன் பதில் அளித்தார்.புதுச்சேரியில் நிருபர்கள் சந்திப்பில், திருமாவளவன் கூறியதாவது: தமிழத்தில் மழை, புயல், வெள்ளம் பாதிப்பு இல்லை. இப்போது விமர்சனம் செய்வதற்கு ஏதுமில்லை. மழையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அரசு மீது வேண்டுமென்று திட்டமிட்டு திரும்ப திரும்ப விமர்சனம் என்ற பெயரால், களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. அன்பு சகோதரர் விஜய் அவர்கள் கட்சி துவங்கி, முதல் முயற்சியாக மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறார். அந்த மாநாடு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். மாநாட்டிற்கு அழைப்பு வரவில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

RAMESH
அக் 26, 2024 06:14

அரசியல் வியாபாரம் செய்யும் மனிதன்.....விஜய்யிடம் அழைப்பு எதற்கு...... எலும்பு துண்டுக்கா


ராமகிருஷ்ணன்
அக் 24, 2024 18:51

ஓவர் பில்டப் கட்சியை கரைத்து விடும். குருமாவுக்கு பட்டால்தான் புரியும்.


Dhurvesh
அக் 24, 2024 23:24

எப்படி பிஜேபி யோட சேர்ந்து admk என்ன கதி ஆச்சு , dmk உடன் சேர்ந்து 2 MP MLA இப்ப பார்லிமென்ட் ல் திருமா பேச்சு , சீமான் அண்ணாமலை street ஸ்பீச்


vijai
அக் 24, 2024 18:48

திமுகவை விட்டா வேற நாதியில்ல


நிக்கோல்தாம்சன்
அக் 24, 2024 18:47

ஒரு பிரியாணி பார்சல்


nagendhiran
அக் 24, 2024 18:30

தோழமை சுடாம பார்த்துகொள்வதிலும்? தன் இருப்பை காட்டிகொல்வதிலும்? காங்கிரஸ் கட்சிகாரர்களைவிட எங்க அண்ணண்தான் சிறந்தவர்??


rama adhavan
அக் 24, 2024 21:18

அடிக்கடி தோழமை சுட்டு என்று ஆடினால் கூட்டணி வெட்டு வேட்டு தான். அப்புறம் கட்சி கரைப்பு /கலைப்பு நிகழ்வு ஆரம்பிக்கும். களைப்பு தான் மீறும்.


Bala
அக் 24, 2024 18:17

மிகவும் சாமர்த்தியமான பதில். உங்களுக்கு என்ன சந்தேகம் என்று தான் கேட்டறுக்கிறார். இதை பின்னர் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் எப்படி வேண்டுமானாலும் சமாளித்து கொள்ளலாம். நம்ம திருமா போல வருமா.....


Sundar R
அக் 24, 2024 15:54

ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் தன்னுடைய தன்னம்பிக்கையை முதலீடாக வைத்து அரசியல் செய்தார். டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தன்னுடைய கல்வியை மூலதனமாக வைத்து அரசியல் செய்கிறார். ஜான் பாண்டியன் அவர்கள் தன்னுடைய கடின உழைப்பை மூலதனமாக வைத்து அரசியல் செய்கிறார். ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீடியா மூலம் அரசியல் செய்கிறார். மேலே குறிப்பிட்ட தலித் தலைவர்கள் தங்கள் தனித்தன்மையை இழக்காமல் கௌரவமாக அரசியல் செய்து, மக்களிடம் பேசுபொருளாக இருக்கிறார்கள். ஆனால் திருமாவளவன் அரசியலில் திராவிட துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், 2026-லும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் கூறுவதால் திராவிட துர்நாற்றம் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டது.


sridhar
அக் 24, 2024 15:50

வேறு போக்கிடம் இல்லாதவர்


theruvasagan
அக் 24, 2024 15:50

டீம்கா தந்த சேர்ல உட்க்கார்ந்தபடியே பக்கதுல புதுசா போட்டுருக்கிற வெமுக சேருக்கும் இப்பவே ஒரு துண்டுபோட்டு வச்சாச்சு. இங்க எதினாச்சும் ஆச்சுன்னா பக்கத்து சேருக்கு ஈஸியா தாவிடலாம் இல்ல. எங்கியாவது எப்பிடியாவது பசை உள்ள எடத்துல போய் ஒட்டிக்கணும். தனியா நின்னா எவனும் சீந்தமாட்டான்.


Anantharaman Srinivasan
அக் 24, 2024 15:00

யாருக்கும் தன்மானமோ சொரணையோ கிடையாது. பணத்தை வாரியிறைத்தால் ஓட்டு. ஓட்டு கிடைத்தால் அதிகாரம். அதிகாரம் வந்தால் பதவிஆணவம். பதவி வந்தால் தலைகால் புரியாது.


முக்கிய வீடியோ