10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்ன ஆனது?
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தேர்வுகளுக்கு, திறமையான விண்ணப்பதாரர்கள் இல்லை; இளைஞர்களுக்கு அனுபவம் இல்லை எனக் கூறி, ஓய்வூதியம் பெறுவோரை, மறு சுழற்சி முறையில் பணி அமர்த்தி இருப்பது, கண்டனத்துக்கு உரியது. 10 லட்சம் இளைஞர்களுக்கு, அரசு வேலை தருவோம் என்பது போன்ற, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. முதல்வரின் வாக்குறுதியை நம்பி, லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள், அரசு வேலைக்காக காத்திருக்கும்போது, ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அரசுப் பணிகளில் அமர்த்துவது, ஏற்றுக்கொள்ள முடியாது.