உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்? கனிமொழிக்கு சீமான் கேள்வி

தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்? கனிமொழிக்கு சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ''பா.ஜ., தமிழகத்துக்கு என்ன செய்தது என்று கேள்வி கேட்கும் நீங்கள், தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்?'' என, கனிமொழியை நோக்கி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.திருச்சியில் அவர் அளித்த பேட்டி; தெருநாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். த.வெ.க., மாநாடு கட்சியின் மாநாடு. மாநாட்டுக்கு முந்தைய நாளே பலர் சென்றுள்ளனர். நாட்டில் வேலை, வெட்டி இல்லாமல் எவ்வளவு பேரு உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரும் விஷயத்தில், பா.ஜ., கொள்கையில் தி.மு.க., மாறுபடுகிறது என தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறியிருக்கிறார்.அதுமட்டுமல்ல, 'தமிழகத்துக்கு சி.பி.ராதா கிருஷ்ணன் செய்தது என்ன' என்றும் கேட்டுள்ளார். நான் கேட்கிறேன், 'கனிமொழியே தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்?' என கேட்பதற்கு எவ்வளவு நேரமாகும்.மத்திய அரசு நடத்திய 'ஆப்பரேஷன் சிந்துாரை' ஆதரித்து வெளிநாடுகளுக்கு இந்திய அரசு பிரதிநிதியாக சென்றபோது, 'தமிழுக்கும், தமிழருக்கும் பா.ஜ., என்ன செய்தது?' என ஏன் கேட்கவில்லை?திராவிடம் என்பது சமஸ்கிருத சொல். மாடல்என்பது ஆங்கில சொல். இது இரண்டையும் இணைத்து வைத்துதான்,பித்தலாட்டம் செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்துள்ளனர். அதற்காக சட்டம் கொண்டு வந்துள்ளனர். அதை மனதார வரவேற்கிறேன். தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு, தமிழக அரசு போதையை ஒழிப்பேன் என கூறினால், யாரும் அதை நம்ப வேண்டுமா?குடிசை ஒழிப்பு என்று கூறி, குடிசைகளை கொளுத்தி விடுவது மாதிரி, மது ஒழிப்பு எனக் கூறி, மதுவை குடித்து விட்டுத்தான் ஒழிக்க முடியுமா? இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

J. Vensuslaus
ஆக 23, 2025 18:15

இந்த கேள்வி சீமானுக்கு வேடிக்கையாக இல்லை?


joe
ஆக 23, 2025 17:50

திருடர்களின் கூடாரத்துக்கு இவர்தான் காவலாளி என்பது உங்களுக்கு தெரியாதா? 2G ஊழலில் திருடிய பணத்தை பாதுகாக்கவே அவருக்கு நேரம் போதவில்லையாம் . இதில் நீங்க வேற என்ன செய்தீர்கள் என்றால் அவரால் எப்படி உண்மையை சொல்லமுடியும் .ஊழல் பணத்தை காவல் காக்கும் ஊழல்வாதிதான் இந்த கனிமொழி...


Shivakumar
ஆக 23, 2025 12:34

என்ன செய்யவில்லை தமிழ்நாட்டுக்கு.. ஒவ்வொரு தெருவிற்கும் டாஸ்மாக் கடை திறந்து இருக்கு. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, கள்ளச்சாராயம் இவைகள் எல்லாம் கொடுத்தும் தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள் என்று நீங்கள் எப்படி கேட்கமுடியும்.


RAVINDRAN.G
ஆக 22, 2025 16:53

இதுவரை ஜெயித்தவர்கள் என்ன செய்தார்கள் இந்த நாட்டுக்கு. 2014 முதல் தமிழ்நாட்டில் இருந்து எம் பிக்கள் யாரும் செல்லவில்லை. ஏன்னா பிஜேபி மத்தியில் பெரும்பான்மையோட இருந்ததால் இவர்களின் தயவு தேவைப்படவில்லை. இப்போதும் இதே நிலைதான் நீடிக்கிறது. எனவே பிஜேபி தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது என்று கேட்கக்கூடாது.


RAVINDRAN.G
ஆக 22, 2025 16:49

குடித்திவிட்டு எல்லாரும் செத்துட்டான்னா எப்படி குடிகாரன் இனிமேல் கிடைப்பான் இல்ல மதுவை யாருக்காக தயாரிப்பான்? கூடிய விரைவில் மதுவால் மொத்தபேரும் மடிவார்கள். ஒருகாலத்தில் குடிப்பவன் ஊருக்கு ஒதுக்குப்புறமா இருப்பான் அவனை யாரும் மதிக்கமாட்டார்கள். இப்போது குடிக்காதவனை விரல்விட்டு எண்ணிவிடலாம் போல இருக்குது. காலக்கொடுமை.


joe
ஆக 22, 2025 15:56

கனிமொழி -தான் ஒரு ரவுடி என்று பகிங்கரமாக அறிவிக்கிறார் .இதுதான் இவர் தமிழகத்துக்கு செய்து கொண்டிருக்கிறார் .டெல்லி ஜெயில் அனுபவம் அவரை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது .வாழ்க தி மு க வின் ரவுடியிசம்.


V RAMASWAMY
ஆக 22, 2025 14:39

மதிக்காத கட்சியில் ஊரில் இருந்தால் எதற்கு வம்பு என்று அவர் பாட்டுக்கு டெல்லி செல்கிறார், கேன்டீனில் சாப்பிடுகிறார், ஊர் சுற்றுகிறார், எழுதிக்கொடுத்ததை பாராளுமன்றத்தில் படிக்கிறார் ஒய்வு எடுக்கிறார், பிறகு தூத்துக்குடி செல்கிறார், நேரமிருந்தால் சென்னை வருகிறார். ஏங்க ஏங்க அவரை வம்புக்கு இழுக்கிறீங்க, அப்புறம் அவருக்கு வேண்டியவர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.


raja
ஆக 22, 2025 14:18

திராவிட கலாச்சாரத்தை அதாங்க ஒருவனுக்கு பல மனைவி ஒருத்திக்கு பல கனவன் என்ன கலாச்சாரத்தை கொடுத்திருக்கிறோம் அதுவும் இல்லாமல் கள்ள உறவை திருமண பந்தம் தாண்டிய உறவு என்று அழகு படுத்தி இருக்கிறோம்


தமிழன்
ஆக 22, 2025 14:11

அதானே என்ன செய்தீர்கள்.. கொடுத்தது போதவில்லை.. .. கொடுங்கள்..


Barakat Ali
ஆக 22, 2025 13:18

கனிமொழி இருக்குற கட்சி உங்களுக்கு செலவு பண்ண பணம் கொடுத்து தமிழகத்தில் விளையாட அனுமதிச்சிருக்கே? அந்த ஒரு செயல் பத்தாதா??


சமீபத்திய செய்தி