உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னதான் நடக்குது? : ரூ.30 கோடி கொட்டியும் முகத்துவாரத்தில் அடைப்பு: முதல்வர் அப்செட்; தீர்வு காண இரண்டு நாள் கெடு

என்னதான் நடக்குது? : ரூ.30 கோடி கொட்டியும் முகத்துவாரத்தில் அடைப்பு: முதல்வர் அப்செட்; தீர்வு காண இரண்டு நாள் கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மழை வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக, 30 கோடி ரூபாய் ஒதுக்கியும், அடையாறு முகத்துவாரத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாட்களில் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு கெடு விதித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இம்மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களில், வடகிழக்கு பருவமழை துவங்கும்முன், வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகளுக்கு, நடப்பாண்டு நீர்வளத்துறைக்கு, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r450oytg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தாமதம்

இதில், அடையாறு முகத்துவாரம் அமைந்துள்ள சீனிவாசபுரத்தில், 150 மீட்டர் அகலத்திற்கு துார்வாரும் பணிகளை மேற்கொள்ள, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள், கடந்த ஜூனில் ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் முறையாக செய்யவில்லை. முகத்துவாரத்தில் மணல் மேடு அதிகரித்ததால், சமீபத்திய மழையால் அடையாறு ஆற்றின் வெள்ளநீர் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்டுள்ள உபரிநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெருமழை கொட்டினால், அடையாறு கரையோர பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.இது குறித்து, ஒப்பந்த நிறுவனத்திடம், சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.செலவு அதிகமாகிவிட்டால், ஒதுக்கிய நிதியில் இவ்வளவு பணிதான் செய்ய முடியும் என, ஒப்பந்த நிறுவனம் கூறி வருகிறது. இதையடுத்து, நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி நிதித்துறையிடம் கோரப்பட்டு உள்ளது. இந்த தகவல் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது.

இரண்டு நாள் கெடு

இதையடுத்து, கடந்த 24ம் தேதி, சீனிவாசபுரத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், முகத்துவாரத்தை அகலப்படுத்த உத்தரவிட்டார். அதன்பிறகும், பணிகள் ஆமைவேகத்தில் ஒப்புக்கு நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் அங்கு சென்ற முதல்வர், பணிகள் முறையாக நடக்காததை கவனித்து, சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்துள்ளார். இரண்டு நாட்களில் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பொதுப்பணி திலகம், செயற்பொறியாளர் அருண்மொழி ஆகியோர் உடன் இருந்தனர். சென்னை மட்டுமின்றி நான்கு மாவட்டங்களிலும், வெள்ள தடுப்பு பணிகள் முறையாக நடந்து முடிந்துள்ளதா என ஆய்வு செய்யவும், ஏதேனும் பகுதிகளில் அரைகுறையாக இருந்தால் பணிகளை விரைந்து முடிக்கவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

sasikumaren
அக் 28, 2025 05:22

முப்பது கோடி இருபத்தைந்து கோடி கொள்ளை அடித்து விட்டான் பாலியல் குற்றவாளி கு.சு பிறகு எப்படிடா வேலை நடக்கும் ஊழல்நிதிக்கு துபாய் திருட்டு பயண செலவு வேறு அடிக்கடி இருக்கிறது ஊழல் செய்தால் தானே இதெல்லாம் முடியும்


ராஜ்
அக் 27, 2025 22:59

அப்படியே அதிகாரி சொல்லறதை புரிஞ்சிக்கிட்டு அறுத்து தள்ளுடிவார்


Sivak
அக் 27, 2025 20:54

தலைவர் கையில என்ன மந்திரக்கோலா? மந்திரம் எல்லாம் போடுவாரா?


theruvasagan
அக் 27, 2025 18:54

கப்பல் போக்குவரத்துக்கு நடுக் கடலில் தூர்வார 10000 கோடிகளை காணமல் போக செய்தவர்களுக்கு 30 கோடி எல்லாம் பிச்சைகாசு.


ஆரூர் ரங்
அக் 27, 2025 17:09

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் சென்னை ஆறுகளில் தூர்வாரி சுத்தப்படுத்த 1500 கோடி வீதம் பலமுறை ஒதுக்கீடு அறிவிப்பு. இன்னொரு பக்கம் மேயர் 4500 கோடி பேக்கேஜ் செலவு என்கிறார். இவ்வளவு நிதியைக் கொட்டியும் எல்லா நிதியையும் விழுங்குவது ஆறா? நிதிக் குடும்பமா?


vbs manian
அக் 27, 2025 15:48

கடல் சாப்பிட்டு விட்டது.


ஆரூர் ரங்
அக் 27, 2025 14:49

ஏற்கனவே நிறைய ஒதுக்கிவிட்டதால் வேலை முடியல. எனவே மேலும் ஒதுக்க வசதியாக இன்னும் ஒதுக்க கோரிக்கை. கடைசியில் கூவத்தில் முதலை வந்த கதை விடப்படும்.


மனிதன்
அக் 27, 2025 14:39

இப்பதானே தெரியுது, "200" உபி, "200" உபி என கதறம் பூராப்பயலுகளும், 50க்கும் 100க்கும் கூவிக்கொண்டிருக்கும் தற்குறிங்கன்னு... தங்களைப்போலவே மற்றவர்களும் துட்டு வாங்கிக்கொண்டுதான் கூவுகிறார்கள் என நினைத்துவிட்டார்கள் அதான் இப்படி... மற்ற IT விங்குகளுக்கும், பாஜகவின் IT விங்குகளுக்கும் ஒரே வித்தியாசம்தான் மற்றவர்கள் நல்லதைக்கண்டால் பாராட்டுவார்கள் அல்லது மெளனமாக இருப்பார்கள் ஆனால் பாஜகவினர் நல்லதேயானாலும் குற்றம் பார்ப்பார்கள் மேலும் சம்பந்தமில்லாத செய்திகளிலெல்லாம்கூட, உதாரணமாக அமெரிக்க,ரஷ்யா போன்ற செய்திகளில்கூட திமுகவை வசைபாடுவார்கள்..., இப்படிப்பட்ட தற்குறிங்கள வச்சுக்கிட்டுதான் பாஜக தமிழகத்தில் "தாமரை மல்லாந்தே தீரும்"னு கிச்சுகிச்சு மூட்டிகிட்டு இருக்கு...


என்றும் இந்தியன்
அக் 27, 2025 17:18

மனிதன் என்பவன் பெயருக்கும் செயலுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்


vivek
அக் 27, 2025 17:51

மனிதன்....உனக்கு எப்பவும் ஒட்டகம் தான் தலைவிதி....என்ன செய்ய


D Natarajan
அக் 27, 2025 13:52

இது அல்லாவோ திராவிட மாடெல் . 100 கோடி கொட்டினாலும் இதே நிலைமை தான் இருக்கும்.


raju
அக் 27, 2025 13:33

I like deputy CM costume ..wow vera level


சமீபத்திய செய்தி