உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

இதில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 100 நாட்கள் வேலைத்திட்டம் தொடர்பான புதிய மசோதா குறித்து எதிர்க்கட்சி அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் 100 நாட்கள் வேலைத்திட்டம் தொடர்பான புதிய மசோதா குறித்து எதிர்க்கட்சி அதிமுகவின் நிலைப்பாடு என்ன? 3 விவசாய சட்டங்கள், சிஏஏ போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா பழனிசாமி?100 நாட்கள் வேலைத் திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற அண்ணாதுரை பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்? திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில், நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? ஜெயலலிதா இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா? வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்று போகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்? இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, அதிமுகஎன்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை, தமிழக மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mariadoss E
டிச 19, 2025 06:11

அதிமுக நிலை என்னவா? அது எப்பவும் போல அடிமை சூழ்நிலைக் கைதி தான்....


MARUTHU PANDIAR
டிச 17, 2025 19:02

இந்த மொழி , பேரு இது தாம்பா பத்தி எரியும் பிரச்சினை. உண்மையான மக்கள் பிரச்சினையே இல்லப்பா அப்படீன்னு மக்கள்பேசுவதை கேட்டதுண்டு.


Svs Yaadum oore
டிச 17, 2025 17:52

வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்களாம் .....ஹிந்திக்கு பதிலாக உருது மொழியில் பெயர் வைத்திருந்தால் அப்ப மட்டும் விடியலுக்கு மத சார்பின்மையாக இனிக்குமே ....


Svs Yaadum oore
டிச 17, 2025 17:50

தேசத்தந்தை காந்தியடிகளின் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்களாம் .....இதை சொல்றது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பிறகு வெளியே வந்தவனை மாலை போட்டு வரவேற்றவர் ..


அயோக்கிய திருட்டு திராவிடன்
டிச 17, 2025 16:24

நான் கேட்கவில்லை மக்கள் கேட்கிறார்கள்.


sivaram
டிச 17, 2025 16:08

100 நாட்கள் வேலை திட்டம் 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி ஆனால் நீங்கள் 100% அரசு பணம் தரவேண்டும் , நாங்கள் 40% ஏற்று கொள்ள வேண்டும் என்றால் திட்டத்தை எதிர்ப்போம் , நானும் என் மகனும் மற்றும் அடிமை கூட்டமும் அடங்க மறு , அத்து மீறு கொள்கையை ஏற்பவர்கள்


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
டிச 17, 2025 16:08

ஒருவருக்கு கூட காந்தி மீது மரியாதையும் மதிப்போ கிடையாது.


vivek
டிச 17, 2025 17:07

உனக்கு சித்தம் எப்போது தெளியும் பூபதி


Haja Kuthubdeen
டிச 17, 2025 15:55

பெயர்தான் 100நாள் வேலை திட்டம்.ஆனால் என்ன வேலை செய்கிறார்கள் என்பது அதை நேரில் கவணிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்...


Sri Kumaran kvp
டிச 17, 2025 15:38

விவசாயத்தை அழிக்கும் இந்த 100 நாள் வேலைதிட்டம் வேண்டாம்


V K
டிச 17, 2025 15:22

தண்ட செலவு திமுக அதிமுக கூட்டு கொள்ள திட்டம் மக்களை சோம்பேரி ஆக்கும் திட்டம்


என்னத்த சொல்ல
டிச 17, 2025 18:08

இது மத்திய அரசு திட்டம். இது கூட தெரியாம.....


முக்கிய வீடியோ