உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலையுண்ட கவின் உடன் என்ன உறவு: தோழி வீடியோ வெளியீடு

கொலையுண்ட கவின் உடன் என்ன உறவு: தோழி வீடியோ வெளியீடு

திருநெல்வேலி: ''எனக்கும், கவினுக்கும் என்ன நடந்தது என்று எனக்கும், அவனுக்கும் மட்டும் தான் தெரியும்'' என்று கொலை செய்யப்பட்ட கவினின் தோழி வீடியோ வெளியிட்டுள்ளார்.நெல்லையில் இளைஞர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்த வாலிபர் சுர்ஜித்தின் அக்காவும், கவினின் தோழியுமான சித்த மருத்துவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l0tyk58y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். எனக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அப்பாகிட்ட சுர்ஜித் இந்த தகவலை சொல்லிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டார். காதலிக்கிறாயா என அப்பா கேட்டார். அப்போது இல்லை என கூறிவிட்டேன்.ஏனெனில் கவின் என்னிடம் நேரம் கேட்டிருந்தான். அதனால் அப்பாவிடம் காதல் குறித்த தகவலை சொல்லவில்லை.இதற்கிடையில் கவினுக்கும், சுர்ஜித்துக்கும் என்ன உரையாடல் நடந்தது என எனக்கு தெரியவில்லை. சுர்ஜித் கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வாருங்கள். உங்கள் திருமணம் முடிந்தால் தான் எனது வாழ்க்கை குறித்து திட்டமிட முடியும். 27ம் தேதி என்ன நடந்தது என்றால் அன்று கவின் வருவது எனக்கு தெரியாது. 28ம் தேதி மாலையில் தான் அவனை வரச் சொல்லி இருந்தேன்.27ம் தேதி மதியம் கேடிசி நகருக்கு வந்த பிறகு தான் எனக்கு தெரியும். எனது மருத்துவமனைக்குள் வந்தான். அவனின் அம்மா மற்றும் பாட்டியிடம் தான் நான் பேசிக் கொண்டிருந்தேன். இருவரும் கிளம்பும்போதுதான் கவின் எங்கே என்று நாங்கள் யோசித்தோம். அவர்களின் சிகிச்சை குறித்து நான் கூறிக் கொண்டிருந்தேன். அதற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது.எனக்கும், கவினுக்கும் என்ன நடந்தது என்று எனக்கும், அவனுக்கும் மட்டும் தான் தெரியும்.எங்களது ரிலேஷன் ஷிப் பற்றியும், எங்களது இரண்டு பேரை பற்றியும் இனி யாரும் தப்பாக பேச வேண்டாம். யாருக்குமே ஏதும் தெரியாது. உண்மை தெரியாமல் யாரும் நிறைய பேச வேண்டாம். எனது அப்பா, அம்மாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது.அவங்களை பனிஷ் (தண்டிக்க) பண்ண வேண்டும் என்று நினைப்பது தவறு, அவங்களை விட்டுருங்கள். இவ்வளவு சிச்சுவேஷனில், எல்லாரும் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எல்லாமே பேசி விட்டீர்கள். தயவு செய்து இனி யாரும் இதைப் பற்றி பேச வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

TamilArasan
ஆக 02, 2025 12:31

சரியான கருத்து பாய் ஆனால் மதம் வேண்டாம் என்று சொன்னிங்க என்றால் 72 கன்னி பெண்கள் கனவில் வாழ்ந்து வரும் பாய்கள் உங்களுக்கு குண்டு பார்ஸல் செய்து விடுவாங்க ....


மூர்க்கன்
ஆக 04, 2025 17:22

கிறுக்கு ?? அறிவை பயன்படுத்து.


rasaa
ஆக 01, 2025 13:08

இவள் கூறுவது முழுவதும் பொய். அம்மா, அப்பா இருவரும் பணி புரிவது காவல்துறையில். அதுவும் தமிழக காவல்துறையில். எங்கு, எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன? எல்லாவற்றையும் மேலொருவன் பார்ப்பதுமட்டும் இல்லை. உங்கள் குற்ற மனசாட்சியே உங்களை தண்டிக்கும்.


Natchimuthu Chithiraisamy
ஆக 01, 2025 10:21

யாரும் தப்பாக பேசப்போவதில்லை ஏனெனில் உன்நடத்தை அப்படி. சுதந்திரமாக வாழ்ந்துவிட்டாய் ஏனெனில் உன் தாய் தந்தை இருவரும் அரசு பணம் வாங்குபவர்கள். பணம் அளவுக்கு அதிகம் ஆகும் போது சிந்தும். இனி கோர்ட் கேஸ் உன் கல்யாணம் என நிறைய செலவு உள்ளது. உன் தாய் தந்தைக்கு அரசு வேலை இல்ல்லை என்றால் உங்கள் அனைவர் வாழ்க்கையும் சிறப்பாக இருந்து இருக்கும். இது கடவுள் மற்றவர்களுக்கு பாடம் செல்ல நல்ல உதாரணங்கள் குடுத்து உள்ளார்


Azar Mufeen
ஆக 01, 2025 08:18

தன் மதமோ, ஜாதியோ சேர்ந்தவர்கள் கற்பழிப்பு, போதை, போன்ற கொடுஞ்ச்செயலில் ஈடுபடும்போது வராத கொலை வெறி காதலிக்கும் போது மட்டும் வருதா? ஜாதியும் மதமும் தேவையற்ற ...


Jack
ஆக 01, 2025 17:09

83 பிரிவுகள் உங்கள் மார்கத்தில் ...சையது தான் ஒஸ்தி என்று சொல்லுவாங்க ...


Azar Mufeen
ஆக 01, 2025 19:05

அய்யா நான் கூறுவது அனைத்து மதத்தினருக்கும்தான், தனிப்பட்ட மதத்தினை அல்ல


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2025 22:53

ஆணவக்கொலையா அல்லது நாடக கொலையா என்று தெரியவில்லை.


Haja Kuthubdeen
ஜூலை 31, 2025 19:52

அவரவர் அவர்சார்ந்த இனத்தில் திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டால் உயிரிழப்பு ஏற்படாது...இது ரொம்பவும் உணர்வுபூர்வமான விசயம்.நாம் பேச்சிற்கு முற்போக்கு ஜாதி மறுப்புனு பேசிட்டு கடந்துவிடலாம்.உள் மனதில் ஒவ்வொரு மணிதனுக்கும் இந்த ஜாதி மத உணர்வு நிச்சயமா ஒளிந்து கிடக்கு.இல்லை என்று யாரும் மறுக்க முடியுமா...


Jack
ஆக 01, 2025 08:09

இனம் என்றால் மனித இனம் மட்டும் தானே?


Jagan (Proud Sangi )
ஜூலை 31, 2025 18:12

காதல் கத்திரிக்காய் என்று குட்டையை குழப்பி உன் அப்பன்/ஆத்தா/சகோதரன் எல்லாரையும் மாட்டிவிட்டு அவர்கள் வாழ்க்யை பழக்கியதே இவள் தான். வீட்டுக்குள் consultation வேணும்.


SJRR
ஜூலை 31, 2025 17:37

எழுதிவைத்து நன்றாக பேசுகிறார். தன் தந்தையிடம் கவினை காதலிக்கவில்லை என்று கூறியதன் விளைவாக இருக்கலாம். மகள் காதலிக்கவில்லை அவன் தான் வலியவந்து காதலிக்கிறான் என்று கருதியிருப்பார்கள். உண்மையாக காதலித்திருந்தால் தைரியமாக காதலிக்கிறேன் என்று கூறியிருக்கலாமே?


Anand
ஜூலை 31, 2025 17:27

வெங்காய உறவு.. தன் குடும்ப மானத்தை கப்பலேற்றி குழிதோண்டி புதைத்துவிட்டு பேசுகிறாய்....


Hemanth
ஆக 01, 2025 12:11

உன்ன மாதிரி ஆளுங்கள நலத்தை அவங்க அந்த குடும்பம் பாழகுது .


Sri Ra
ஜூலை 31, 2025 17:15

உன்னை பொய் காதலித்தான் அந்த ஏமாந்த சோணகிரி .பாவம்


புதிய வீடியோ