உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? சென்னை ஐகோர்ட் கேள்வி

இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: '' நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா ? '' என போலீசாருக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் கூறுகையில், நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை போலீசார் அருவருக்கத்தக்க வகையில், அலட்சியமாக நடத்துகின்றனர். சட்டத்தில் உள்ளதை செய்ய மறுத்து போலீசார் தெனவாட்டாடாக செயல்படுகின்றனர் ' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Muruga saranam
ஜூலை 03, 2025 21:44

காட்டு விலங்குகளை விட மனித விலங்குகள்தான் மக்களுக்கு ஆபத்தாக உள்ளது


Sundaran
ஜூலை 03, 2025 21:05

இதே நீதிமன்றம் தான் நேற்று தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு பத்திரம் வழங்கியது மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு பரவாயில்லை என்றது.இன்று குறை கூறுகிறது .நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதோடு நிறுத்தி கொள்ளவேண்டும் பாராட்டு பத்திரம் வழங்குவது அதன் வேலை இல்லை. சட்டம் ஒழுங்கு லஞ்சம் கொலை கொள்ளை கனிம வளம் கொள்ளை கொடிகட்டி பறக்கிறது.இதில் பாராட்டு வேறா


Ramesh Sargam
ஜூலை 03, 2025 20:35

காவல்துறையினர் முதல்வரை மதிப்பதுபோல தெரியவில்லை. முதல்வரே இப்பொழுது காவல்துறையினரை கண்டு அஞ்சுகிறார் போல தெரிகிறது. எப்படி பாகிஸ்தான் அரசு அவர்கள் நாட்டு பயங்கரவாதிகளை கண்டு அஞ்சுகிறதோ, அதே நிலை தமிழகத்தில் இன்று. இதை இப்பொழுதே சரிசெய்யவேண்டும். ஆம் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி உடனே அமுல்படுத்தப்படவேண்டும் நிலைமை கைமீறிப்போவதற்கு முன்பு.


sridhar
ஜூலை 03, 2025 20:05

எங்க ஊரு வியாபாரிகள் சொன்னது - அதிமுக ஆட்சியில் போலீஸ் கொஞ்சம் நியாயமா நடந்துகிட்டாங்க .


G Mahalingam
ஜூலை 03, 2025 19:41

பணம் கொடுத்து வேலையில் சேர்ந்தால் அப்படிதான் வேலை இருக்கும்.


Kasimani Baskaran
ஜூலை 03, 2025 19:19

டோப்பப்பாவின் தலைமையில் இயங்கும் காவல்துறை அப்படிதான் இருக்கும். ஓட்டுப்போடுவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டும்.


Oviya Vijay
ஜூலை 03, 2025 19:06

குற்றம் சுமத்தப் பட்டவரை போலீஸ் தண்டிக்க எந்த உரிமையும் கிடையாது... போலீஸ் அடித்தால் திருப்பி அடிக்கலாம் என பொது மக்களுக்கு கோர்ட் அனுமதி தரவேண்டும்... பின்னர் பாருங்கள்... போலீஸின் கொட்டம் தானாக அடங்கி விடும்... சட்டத்தை மக்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஒருபக்கம் கூறுகிறீர்கள்... அதே வேளையில் மறுபக்கம் ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக்கூடாது என்கிறீர்கள்... ஆனால் இங்கே நிரபராதிகள் மட்டுமே தண்டிக்கப் படுகிறார்கள்... இங்கே பதவியிலிருக்கும் 99% சதவீத போலீஸார்கள் அயோக்கியர்களே... அதிகாரம் செய்தால் எதிர்தரப்பினர் அடங்கிச் செல்கின்றனர் என்ற அதிகார போதையில் உள்ளனர்... போலீஸை அணுகவே மக்கள் பயப்படும் இன்றைய சூழலில் மக்களுக்கும் எதிர்த்து கேட்க அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்...


rama adhavan
ஜூலை 03, 2025 20:26

வாய்ப்பு இல்லை. மக்களின் எழுச்சி மட்டுமே மருந்து. அது இங்கு நடக்காது.


vivek
ஜூலை 03, 2025 20:48

இப்போ எதுக்கு பம்முறீங்க ஓவிய விஜய்......


theruvasagan
ஜூலை 03, 2025 22:19

நான் கூட என்னடா இது ஓவியர் யுடர்ன் போடற மாதிரி வர்றாரேன்னு நினைத்தேன். முழு கருத்தையும் படித்த பிறகுதான் புரிந்தது. போலீசை குறை சொல்ற மாதிரியும் இருக்கணும். அதே நேரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களை அதுக்குள்ள இழுக்கக்கூடாது. எவ்வளவு பக்குவமாக பதவிசாக பல்லு படாம ரொம்ப நேக்கா கருத்து போடுகிறார் பாருங்களேன்.


Anantharaman Srinivasan
ஜூலை 03, 2025 18:54

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் போலீஸ் செயல்படுவதற்கு திராவிட மாடல் ஆட்சியாளர்களின் பக்கபலமே காரணம். காவல் நிலையங்களுக்கு செல்லும் பொதுஜனங்களை போலீஸ் மதிப்பதுமில்லை. செவிமடுத்து புகார்களை கேட்பதுமில்லை. கட்ட பஞ்சாயத்துக்குத்தான் முக்கியத்வம் தருகிறார்கள்.


Sudha
ஜூலை 03, 2025 18:51

ஜட்ஜ் ஐயா ஊருக்கு புதுசா?


Padmasridharan
ஜூலை 03, 2025 18:50

இவங்கள்ல பலரும் இப்படித்தான் நடந்துக்கறாங்க சாமி. ஒருமையில் அசிங்கமா பேசி மன உளைச்சலை தருவதே இவர்கள்தான் அதை பணமாக்க தங்களின் காக்கிச்சட்டை, வண்டியை பயன்படுத்தி அதிகாரம் செலுத்தி பிச்சையெடுக்கின்றனர். ரோந்து வருபவர்கள் குடித்தும் காணப்படுகின்றனர். கண்டவர்களை ஃபோட்டோ எடுத்தும் அடித்தும் பயமுறுத்திகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை