உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் என்ன தயக்கம்: முதல்வருக்கு எல்.முருகன் கேள்வி!

இன்னும் என்ன தயக்கம்: முதல்வருக்கு எல்.முருகன் கேள்வி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எல்.முருகன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நரகாசுரனை அழித்துவிட்டு கொண்டாட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். இதேபோன்று திமுக என்ற நரகாசுரனை 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டு,ஒரு சிறந்த தீபாவளியை நாம் கொண்டாடுவோம். நாம் அனைவரும் தயாராகுவோம். நம்புவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல உதயநிதி வாய் திறந்து இருக்கிறார். தீபாவளிக்கு இத்தனை நாட்களாக வாய் திறக்காதவர்கள், இன்று வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயும் தீபாவளி வாழ்த்து சொல்லி இருக்கிறார். நாட்டு மக்களின் முதல்வராக இருக்கிறீர்கள். நாட்டில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம்? வாழ்த்து சொல்வதற்கு உங்களை யார் தடுக்கிறார்கள்? முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன். அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

அப்பாவி
நவ 01, 2024 18:29

மந்திரியா ஏதாவது செஞ்சிருக்கீங்களா?


hari
நவ 01, 2024 10:51

ஓசி 200 கொத்தடிமை


KUMARAN TRADERS
நவ 01, 2024 09:12

இதையும் வேணுமானாலும் நீங்க செய்வீர்கள் இதையும் நீங்கள் மேலே உள்ளவன் சொன்னால் அதையும் செய்வீர்கள்


Dhurvesh
அக் 31, 2024 22:04

இவர் பிச்சை கேட்பது போல உள்ளது , அவர் வாழ்த்து சொல்லிவிட்டால் அப்ப என்ன சொல்லுவார்


வைகுண்டேஸ்வரன்
அக் 31, 2024 21:54

நரகாசுரன் யாரு? பூமாதேவிக்கும் வராகமூர்த்தி க்கும் பிறந்தவன். பெற்றோர் இருவரும் தேவகுலம். இவன் மட்டும் எப்படி அசுரன் ஆனான்? இந்த முருகன் ஒரு MLA ஆக முடியல, மக்கள் தோற்கடித்து தூரத்தினார்கள். MP ஆக ட்ரை பண்ணி அதிலும் தோல்வி. நீயெல்லாம் 2026 பற்றி பேசலாமா? போய் இட்லி மீன் குழம்பு சாப்பிட்டு விட்டு தூங்கு போ. இன்றுவரை இரண்டு அவைகளிலும் தமிழ் நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக ஒரு நிமிடம் கூட பேசவில்லை.


வைகுண்டேஸ்வரன்
அக் 31, 2024 21:46

முதல்வரின் வாழ்த்துக் காக ஏங்கித் தவமிருப்பவர்களைப் பார்த்தால் மகிழ்ச்சி யா இருக்கு. கெஞ்சுங்கடா, அய்யா வாழ்த்து சொல்லுங்க, அம்மா வாழ்த்து சொல்லுங்க ன்னு கெஞ்சுங்க. செம ஜாலியா இருக்கு.


வைகுண்டேஸ்வரன்
அக் 31, 2024 21:45

கண்ராவி, வெக்கமா இல்ல? எங்க boss கூடத் தான் யாருக்கும் வாழ்த்து சொல்லல. அவருக்கு ஏதோ கோபம். அவர் கிட்ட நாங்க யாரும், அவர் வாழ்த்து சொல்லல ன்னு புலம்பவில்லை. ஏன்னா எங்களுக்கு தன்மானம் இருக்கு. வாழ்த்துக்கள் சொல்லலியா, போ, சொல்லாதே, அவ்வளவு தான். ஆனா இங்க முதல்வரின் வாழ்த்துக் காக ஏங்கித் தவமிருப்பவர்களைப் பார்த்தால் மகிழ்ச்சி யா இருக்கு. கெஞ்சுங்கடா, அய்யா வாழ்த்து சொல்லுங்க, அம்மா வாழ்த்து சொல்லுங்க ன்னு கெஞ்சுங்க. செம ஜாலியா இருக்கு.


Rajan A
அக் 31, 2024 20:49

அட விடுங்க சார். நல்ல நாட்களில் இதை ஏன் ஞாபகப்படுத்தனும்


அருணாசலம்
அக் 31, 2024 19:35

வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஏன் இந்த ஆள் இப்படி கெஞ்சுகிறார்? சொல்லாததால் யாருக்கும் ஒரு கஷ்டமும் இல்லை.


Palanisamy T
அக் 31, 2024 19:28

நீங்கள் நரகாசுரனைப் பற்றி பேசியதே முதல் தவறு. தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் எந்த தொடர்புமில்லை. தமிழர்களை பொறுத்தமட்டில் தீபாவளி சைவ சமய பண்டிகை. இங்கே மதுவுக்கும் மாமிசத்திற்கும் இடமில்லை. தீபாவளி ஐப்பசி மாதம். நவராத்திரி தொடங்கி தை மாதம் வரை எல்லா நாட்களிலும் தமிழர்கள் கொண்டாடும் சைவ சமய விழாக்கள். சைவ சமய விழாக்களில் மதுவுக்கும் மாமிசத்திற்கும் இடமில்லை. தீபாவளிப் பண்டிகைப் பற்றி சுவாமி கிருபானந்த வாரியார் அவர்கள் தன் நூலிலும் எழுதியுள்ளார், சொற் பொழிவிலும் நிறையப் பேசியுள்ளார. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் இத் திருநாளை கொண்டாடட்டும் . நம் சைவ சமய சைவ முறைப்படிதான் நாம் இந்த நாளைக் கொண்டாட வேண்டும். வரும் காலங்களில் நல்ல மாற்றங்கள் மலரும் என நம்புவோம் . கட்டாயம் மலரவேண்டும். மற்றபடி மது மாமிசம் அவரவர் சொந்த உரிமை விவகாரம். தலையிட விரும்பவில்லை. .