வாசகர்கள் கருத்துகள் ( 92 )
உண்மையான பதிவு. ஒழுக்கமாக இருக்க கற்றுத்தர வேண்டும். ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். ஆசிரியர்கள் வேறுபணிக்கு செல்வதுதடுக்க வேண்டும்
தினமும் தமிழ் உரையாடல் வகுப்பும், ஆங்கில உரையாடல் வகுப்பும் Tamil / English Conversation Classes +2 வரை கட்டாயம் நடத்தபபட வேண்டும். ஏனோதானோவென்று பெயருக்கு நடத்தக்கூடாது. முதலில் ஆசிரியர்களுக்கு தமிழ் / ஆங்கில உரையாடல் வகுப்பு பற்றி தகுதியானவர்களால் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். அதன் மூலம் ஆசிரியர்களை உரையாடல் வகுப்புகளை நன்கு நடத்தும்படி திறமையானவர்களாக மாற்றவேண்டும். அப்போதுதான் Conversation Classes மாணவர்களுக்கு உண்மையான பயன் தரும். அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
1 ஆசிரியர்கள் தகுதி ஆனவர்களா, நன்னடத்தை உள்ளவர்களா என்று ஆராய்ந்து அவர்களை நன்னடத்தை ஒழுக்கம் பற்றிய வகுப்புகளை நடத்த நியமிக்க வேண்டும். 2 அவ்வையின் அறிவுரைகளை ஆரம்ப கல்வி பாடங்களில் சேர்க்க வேண்டும். 3 வாரம் 3 வகுப்புகள் நெறிகளை போதிக்க வேண்டும். 4 ராமாயணம் மகாபாரதம் போன்ற கதைகளை போதிக்க வேண்டும்
தினமலர் வாங்கி படிக்கணும்
பள்ளி மாணவர்கள் +2 படிப்பை முடிக்கும் வரை சமூக வளையதளங்களை பயன்படுத்துவதை சட்டபூர்வமாக தடைசெய்யவேண்டும். வீட்டிலும், வகுப்பறையிலும் மாணவர்கள் மகிழ்ச்சியாக கற்கும் ஒரு சூழலை பெற்றோரும்-பள்ளி நிர்வாகமும் அமைத்து தர வேண்டும்.
அனைத்து பள்ளிகள் கலோரிகள் ஆசிரியர்கள் , ஆசிரியைகள் , முதல்வர்கள் , அனைவருக்கும் , ஒரே யூனிபார்ம் , கொண்டு வரவேண்டும் , டாக்டர்கள் , வக்கீல்கள் , போலீஸ் , ராணுவம் , போல , அனைத்து ஆசிரியர்களுக்கும் , ஒரு காக்கி காலர் கோட் , ஷூ , அணிவது கட்டாயமாக்க வேண்டும் , அவர்கள் என்ன வகை ஆடை அணிந்துவந்தாலும் பள்ளிகளில் இருக்கும் போது அந்த ஓவர்கோட் , கேன்வாஸ் ஷூ , அணிவது கட்டாயமாக்க வேண்டும் , அப்போதுதான் தான் ஆசிரியர்களுக்கு ஒரு டிக்னிடி வரும் , மாணவர்களிடமும் , ஒரு வித பயம் கலந்த மரியாதை வரும் . . .
தமிழக கல்வித்துறையை மத்திய பட்டியலுக்கு மாற்றவேண்டும் மும்மொழி கொள்கையை கொண்டுவர வேண்டும் நவோதயா பள்ளிகள் இங்கு வரவேண்டும் விளையாட்டுக்கான நேரம் கண்டிப்பாக ஒதுக்கவேண்டும்
கற்க கசடற கற்றபின் நிற்க அதற்கு தக என்ற வாசகம் மறந்து போன நிலையில், பணத்தை அடிப்படையாக கொண்ட கல்வியில் நன்னெறி, ஒழுக்கம் மற்றும் விளையாட்டு கல்வி தவிர்க்கப்பட்டு, ஆசிரியர் தகுதி இன்றி செயல்படுவதால் கல்வி கற்றுத் தரும் தன்மை முற்றிலும் மாறி அழிவை நோக்கி செல்வதால், 10 சதவீத மாணவர் வெற்றிக்கு உரிமை கொண்டாடுவதை விட்டு, எல்லாருக்கும் எல்லாம் சமம் எனும் போது கல்வி சீர்திருத்தம் அவசியம் தேவை. ஒழுக்கம் மற்றும் விளையாட்டு மிக அவசியம்.
குழந்தைகளின் மன விருப்பத்தின் பேரிலேயே வாசிப்பில் நாட்டம் ஏற்படுகிறது. டாக்டர் என்ஜினீயர் ஆசிரியர் என பெற்றோர் விருப்பத்தை த் திணிக்கக்ககூடாது. மாணவருக்கும் மறைந்து கிடைக்கும் திறமைகள் ஆவல் போன்றவற்றைக் கண்டுபிடிக்க பெற்றோர் ,ஆசிரியார் மனோத்தத்துவ நிபுணர்களின் கூர்நோக்கில் மாணவரின் interst பாஸ்பேட் கேரியர் அமையவேண்டும்..வேறுமனே டாக்டர் அல்லது என்ஜினீயர் படிப்பில் விருப்பமற்ற ஒருவரை இது போன்று பாடங்களை திணிக்கக்கூடாது. ஒழுக்கம் தற்கால கட்டாயம்.அதற்க்கு ஆசிரியர் மற்றும் பெற்றோர் முன்மாதிரியாக திகழ்ந்து அறநெறி சார்ந்த கதைகளை மட்டும் சொல்லவேண்டும்.கைபேசி பயன்பாடு வீட்டிற்கும் வெளியிலும் வரயரை க்குள் கொண்டுவரவேண்டும். சோசியல் மீடியாக்களை இப்பிரிவினருக்கு விலக்கு அளிக்க வேண்டும். வளர் பருவத்தினருக்கு பாலினக் கல்வியும் உடல் சார்ந்த அறிவும் புகட்டப்பட வேண்டும்.
தாய் மொழி மூலம் 10வது வரை படித்தல் மிகவும் முக்கியம் .