உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் சொல்வது கேலிக்கூத்தானது

ஸ்டாலின் சொல்வது கேலிக்கூத்தானது

தமிழகத்தில், தி.மு.க.,வைச் சேர்ந்தோர், கடந்த நான்கரை ஆண்டுகளாக, வடமாநிலத்தவரை, பீஹாரைச் சேர்ந்தவர்களை தரம் தாழ்த்தி பேசி வருகின்றனர். தி.மு.க., - எம்.பி., தயாநிதி, 'கக்கூஸ் சுத்தம் செய்பவர்கள்' என்றார். அமைச்சர் நேரு, ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் உள்ளிட்டோர், 'வட மாநிலத்தவரை பானிபூரி விற்பவர்கள்; மூளை இல்லாதவர்கள்' என்றெல்லாம் பேசினர். முதல்வர் ஸ்டாலின், பீஹாரை சேர்ந்தவர்களை, 'கூலித் தொழிலாளிகள், படிப்பறிவு இல்லாதவர்கள்' என்றார். இப்படி பீஹாரிகளைப்பற்றி, தி.மு.க.,வினர் பேசியது, பெரிய பட்டியலே இருக்கிறது. இதைத்தான், பிரதமர் மோடி, பீஹாரில் பேசுகையில், 'தமிழகத்தில், தி.மு.க.,வினர், பீஹார் மக்களை அவமதிக்கின்றனர்' என்ற உண்மையை சொன்னார். அதை திரித்து, பகை ஏற்படுத்தும் முயற்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது கேலிக்கூத்து. - நாராயணன் திருப்பதி தலைமை செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி