திருமா அடிக்கடி கூறுவது சந்தேகத்தை எழுப்புகிறது
பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வந்து சென்றதையடுத்து, உலக அளவில் இந்த பகுதி பேசப்படுகிறது. திருக்குறளை 58 மொழிகளில் வெளியிட்டதும் மோடி அரசே. தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லுாரிகளை மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் 40,000 கோடி ரூபாய் மதிப்பில் கொண்டு வந்த திட்டங்களை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டு விட்டது. வரும் தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை, நம் நாட்டின் ஜனாதிபதியாக பா.ஜ., அமர வைத்துள்ளது. தி.மு.க., ஆட்சியில், பெரம்பலுார் பகுதியில், எஸ்.சி., - எஸ்.டி., தெருக்களில் மின்விளக்கு வசதி இல்லை. ஆனால், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமா வளவன் சமூக நீதி குறித்து பேசுகிறார். அவர், 'தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம்' என அடிக்கடி கூறுவது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. - நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,