வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எலேய சென்னை ய விட்டு வெளிய வாங்க ஆபிஸ்ர் ஏற்கனவே நிரம்பி வழிந்தது
Underground dealing போல?
சென்னை:சென்னையில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு 2.28 லட்சம் வீல்கள் தயாரிப்பதற்கான ஆலையை நிறுவ இருப்பதாக ராமகிருஷ்ணா போர்ஜிங் நிறுவனம் அறிவித்து உள்ளது. கொல்கட்டாவை தலைமையிடமாகக் கொண்ட ராமகிருஷ்ணா போர்ஜிங், வாகனம், ரயில் மற்றும் கட்டுமானத்துறை உள்பட பல்வேறு துறைகளுக்கான உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் நரேஷ் ஜலன் கூறியதாவது:சென்னையில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். வரும் 2026--27ம் நிதியாண்டுக்குள் 40,000 வீல்கள் என்ற அளவில் உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ளோம். வரும் 2027--28ம் ஆண்டுக்குள், உற்பத்தி திறன் 1 லட்சம் வீல்களாக உயர்த்தப்படும். இந்த ஆலை, எங்கள் நிறுவனத்தின் மிக முக்கியமான வளர்ச்சி காரணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
எலேய சென்னை ய விட்டு வெளிய வாங்க ஆபிஸ்ர் ஏற்கனவே நிரம்பி வழிந்தது
Underground dealing போல?