உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோஷம் உச்சகட்டத்தை எட்டும்போது கூட்டணியே உடையலாம்: சிவசங்கர்

கோஷம் உச்சகட்டத்தை எட்டும்போது கூட்டணியே உடையலாம்: சிவசங்கர்

அரியலுார் : அரியலுார் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் ஆடித் திருவாதிரை திருவிழா, அரசு சார்பில் நாளை முதல் கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா, நாளை முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. பிரதமர் மோடி வருகை குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்கு மட்டும் தான் தகவல் கிடைத்துள்ளது. மாநில அரசுக்கு, இதுவரை தகவல் இல்லை. இரவு நேரங்களில், தொலைதுார அரசு பஸ்களில், பெயர் பலகையின் முகப்பு விளக்குகளை சரி செய்யுமாறு, போக்குவரத்து மேலாண் இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'ஆட்சியில் பங்கு தர, நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல' என பழனிசாமியும், அதற்கு எதிர் கருத்தை அண்ணாமலையும் மாறி மாறி கூறி வருகின்றனர். அவர் களுக்குள் பங்கு பிரிப்பதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அதனால், இந்த நாடகத்தை நடத்தி வருகின்றனர். நாடகம், விரைவில் உச்ச கட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணியே இல்லாமல் போகலாம். வெற்றி பெறுவதற்கு முன்பாகவே ஆட்சியில் பங்கு கோஷத்தை உயர்த்திப் பிடிப்பதால், அ.தி.மு.க., கூட்டணியே கலகலத்துக் கிடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ