உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்

கன்னியாகுமரி: 'அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும்' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்து உள்ளார்.கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள கண்ணாடி பாலம் , விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூர் சிலை ஆகியவற்றை தனது குடும்பத்துடன் தனிப்படகில் சென்று இஸ்ரோ தலைவர் நாராயணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 10 ஆயிரத்து 360 கோடி ரூபாய் செலவில் ஜூலை மாதத்தில் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து synthetic aperture radar தொழில் நுட்பத்தில் உருவான செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. இதன் மூலம் 365 நாளும் துல்லியமாக செயல்பட்டு 12 நாளுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து கண்காணித்து பேரிடர் , கால நிலை போன்ற தகவல்கள் அனுப்ப முடியும். இது இந்திய மக்களுக்கு பெருமிதமான தருணம். இன்னும் 60 நாட்களில் இந்த செயற்கை கோள் அனுப்பும் தகவல்கள் பொதுமக்கள் பயன்படும் விதத்தில் அனைவருக்கும் வழங்கப்படும்.இந்திய மக்களை பாதுகாக்கவும் இஸ்ரோ உதவி வருகிறது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது 25 செயற்கைக்கோள் சிறப்பாக துல்லியமாக செயல்பட்டன. தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதால் கூடுதல் தகவல்கள் கூற முடியாது. 1000 கோடி ரூபாய் செலவில் நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளம் விரைவில் அமைய உள்ளது. 2300 ஏக்கர் நிலத்தை தமிழக அரசின் உதவியோடு இஸ்ரோ பெற்றுள்ளது.அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும். கண்ணாடி பாலம் வித்தியாசமாக நன்றாக உள்ளது. தமிழக அரசுக்கு பாராட்டுகள். இவ்வாறு நாராயணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Suresh
செப் 15, 2025 00:30

சார் கேரளா அல்லது கர்நாடகாவில் இடம் கிடைக்கவில்லையா ? தமிழகம் என்றுமே மத்திய அரசு திட்டங்களை தாமதம் செய்யும். திமுக ஆயினும் சரி அதிமுக ஆயினும் சரி. ஆமை புகுந்த வீடு


Tamilan
செப் 14, 2025 23:43

ஒரு சிலருக்கு அடிவருடி வேலை செய்வதற்கு எங்கிருந்து ஏவினால் என்ன ?


ManiMurugan Murugan
செப் 14, 2025 21:55

இஸ்ரோ தலைவருக்கு வாழ்த்துக்கள் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது நன்று இருப்பினும் ஆவனங்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு க கூட்டணி ஒரு பித்தலாட்ட ஊழல் கூட்டம் எச்சரிக்கை


ஆரூர் ரங்
செப் 14, 2025 20:13

மிஷனரிவிஷநரி பர்மிஷன் வாங்கியாச்சா.? இல்லாட்டி 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் போல் ஆகும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 19:56

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? அடுத்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஏவப்படும் .........


சமீபத்திய செய்தி