உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எப்ப தேர்தல் வந்தாலும் தி.மு.க., படுதோல்வி அடையும்: ராமதாஸ்

எப்ப தேர்தல் வந்தாலும் தி.மு.க., படுதோல்வி அடையும்: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம்: தைலாபுரத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: தமிழக காவல்துறை முடங்கியுள்ளது. தமிழக காவல்துயைின் கை, கால்கள் கட்டப்பட்டுள்ளதால், எப்படி ஓடுவர். தமிழகத்தில் பல வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்த இரண்டு பேர் உயிரிழந்தனர். சயனைடு கலந்து மதுவை குடித்ததால், இறப்பு ஏற்பட்டது என்று தெரிந்தது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை பிடிக்கவில்லை.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் கடந்த மே 4ம் தேதி கொலை செய்யப்பட்டார். ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை கொலையாளிகளை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும், குற்றவாளிகளை பிடிக்கவில்லை.சமீபத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள திம்மபுரத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கிலும், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழக காவல்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது.

சந்து கடையை மூட போராட்டம்

தமிழகத்தில் மொத்தம், 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு அருகில் 4 அல்லது 5 சந்து மதுக்கடைகள், 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. சந்து கடைகளை மூட வேண்டும். இல்லையென்றால் பா.ம.க., சார்பில் சந்துகடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.தமிழகத்தில் தற்போது மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த போதை மருந்தை வீடுகளில் ஆய்வகம் அமைத்து தயாரிக்கின்றனர்.சில நாட்களுக்கு முன் சென்னை மாதவரத்தில், 16 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது. இந்த போதை பொருள் அருப்புக்கோட்டையிலுள்ள ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் தி.மு.க., அரசு தோல்வியடைந்துவிட்டது. அதை மக்கள் அறிந்து கொண்டால், வரும் தேர்தலில் தி.மு.க,.வை மக்கள் படுதோல்வி அடைய செய்வர் என்பதால், எதிர்கட்சிகளை அடக்குகின்றனர்.திராவிட மாடல் அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. எப்போது தேர்தல் நடந்தாலும், தி.மு.க., படுதோல்வியடையும். பங்களிப்பு என்ற பெயரில் அரசு பள்ளிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன், கிராமப்புற உள்ளாட்சிகளை தமிழக அரசு இணைக்கக் கூடாது. இவ்வாறு இணைத்தால் கிராமப்புறங்களில் சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துவிடும்.பா.ம.க., தலைவர் அன்புமணிக்கும் எனக்கும், எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. பா.ம.க., மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தன், அந்த பொறுப்பில் நீடிக்கிறார். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

நினைவுகூர்ந்த ராமதாஸ்

ராமதாஸ் மேலும் கூறியதாவது:தி.மு.க., உடன் பா.ம.க., கூட்டணி இருந்தபோது, கருணநிதியிடம், 'ராமதாஸ் உங்களை பற்றி விமர்சனம் செய்கிறாரே' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு கருணாநிதி, 'தலைவலிக்கு தைலாபுரத்திலிருந்து தைலம் வந்திருக்கிறது' என, கருணாநிதி என்னை பற்றி நாகரிகமாக, நளினமாக கூறினார். சென்னையில் நடந்த சர்வகட்சி கூட்டத்தில், நான் தான் கருணாநிதியிடம், 'உங்களால் அதிக பாரம் சுமக்க முடியாது; ஸ்டாலினை துணை முதல்வராக்குங்கள்' என்று கூறினேன். அவரும் ஸ்டாலினை துணை முதல்வராக்கினார்.தி.மு.க., உடன் கூட்டணி இல்லாமல், அ.தி.மு.க., உடன் கூட்டணி வைத்திருந்த போது, ஜெ.,வால் கருணாநிதி கைது செய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நான் அவரை சிறையில் சந்திக்க சென்றபோது, என்னை சிறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.உடனே நான் காரில் கொண்டு வந்த நாற்காலியை போட்டு, உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று கூறிய பின், அனுமதித்தனர். நான் உள்ளே சென்ற உடன் கருணாநிதி என்னை பார்த்து, 'உங்களால் தான் நான் சிறையில் இருக்கிறேன்' என்று கூறினார். இதற்கு காரணம், நான் தி.மு.க., உடன் கூட்டணி வைக்காமல், அ.தி.மு.க., உடன் கூட்டணி வைத்ததால் தான், அவர் கைது செய்யப்பட்டார் என்ற அர்த்தத்தில் கருணாநிதி கூறினார். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மறைந்த முதல்வர் கருணாநிதியை பற்றி நினைவுகூர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Nagarajan D
ஜன 04, 2025 16:32

enga கூட கூட்டணி வச்சுக்கோங்க இல்லனா நான் அப்படி தான் சாபமிடுவேன் இப்படிக்கு தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் பச்சோந்தி அரசியல் .... ராமதாஸ்


nisar ahmad
ஜன 03, 2025 13:22

அப்படின்னா நிம்மதியா தோட்டத்துல ரெஸ்ட் எடுங்க சும்மா வாய்க்கு வந்ததை அறிக்கைன்ற பேர்ல வாத்ததியெடுக்காம.


Duruvesan
ஜன 03, 2025 11:33

நாம நோட்டாவை தாண்டுவோமா?


Nallavan
ஜன 03, 2025 10:26

நம்மளே உள்கட்சியில் பிரச்சனையாகி சின்ன மங்கா பெரிய மங்கா யாருக்கு ஒட்டு குழம்பி இருக்கும் நிலையில், இவர் என்ன கடவுளா? சிவனேன்னு மரம் வெட்டி பிழைக்கலாம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 03, 2025 10:23

நான் தான் கருணாநிதியிடம், உங்களால் அதிக பாரம் சுமக்க முடியாது ஸ்டாலினை துணை முதல்வராக்குங்கள் என்று கூறினேன்.. இதை நீங்க அடிக்கடி சொல்லிட்டே இருக்கீங்க.. அதே ஆலோசனையைப் பின்பற்றித்தான் உதயநிதியையும் து மு ஆக்கியிருக்காரு ஸ்டாலின்... அதாவது எள் என்று சொல்வதற்கு முன்பாகவே எண்ணெய் கொண்டு வந்துள்ளார்.. இதில் என்ன தப்பு? இதை வெச்சுத்தான் அன்புமணி "ஏன், துரைமுருகனை ஆக்கலை ஆக்கல?" ன்னு கேட்டிருக்காரு .... வாரிசு அடிப்படையில் து மு வை நியமிக்கலாம் ன்னு பரிந்துரைத்துவிட்டு சமூகப்பாசம் காரணமாக துரைமுருகனை பரிந்துரைத்தால் அவங்களுக்கு கோபம் வராதா ????


raj
ஜன 03, 2025 10:19

No 1 Broker in Politics, No 2 Nithish Kumar. Do you have Vote bank ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 03, 2025 10:18

2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நாங்களும் பாமகவும் கணவன் மனைவி மாதிரி ன்னு கருணாநிதி சொன்னதை மறந்துட்டீங்களா ????


baala
ஜன 03, 2025 09:23

தலைவர் பெட்டிக்கு துண்டு விரித்து இடம் பிடிக்கிறார்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 03, 2025 09:21

ராமதாசுக்கு என்னவோ ஆயிடுச்சு. இருக்கிற கொஞ்சநஞ்ச வன்னியர்கள் ஆதரவையும் காலி பண்ணிட்டார். வன்னியர் பசங்க பாவம் டீ கடைக்குக் கூட வரமுடியவில்லை. இந்த முறை ஸ்டாலின் அவர்களின் ஆட்சி வேற லெவல். கலைஞரை விட very dangerous. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியின் highlights : பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி மகளிர் மாத உதவித்தொகை மகளிர் இலவசப் பேருந்துகள் 1400 க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு விழாக்கள் திருமுருகன் மாநாடு சிவகங்கையில் 18 ஆண்டுகள் நடக்காத தேர்த்திருவிழாவை நடத்தியது - எல்லா கட்சிக்காரர்களும் விமர்சிக்க முடியாமல் அதிர்ந்த திட்டங்கள். இவற்றால் திமுக வின் 20% வாக்குகள் இப்போது 27% டாக உயர்ந்திருக்கிறது. திமுக காரனை கொத்தடிமை ன்னோ, உ பி ன்னோ சொல்லிக்கோங்க. தேர்தல் வேலை ன்னா திமுக காரன் வெள்ளைக்காரன். கூட்டணி யும் ஸ்ட்ராங். இப்போ விடுதலைப் பூனை திருமா வெளிய போறார். இடது கம்யூனிஸ்ட் டும் போயிடும் போல. இவர்களுக்கு ஒதுக்கவேண்டிய தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டு 200 வெற்றிகளை எளிதில் பெற்றுவிடும்.


Svs Yaadum oore
ஜன 03, 2025 07:44

தி மு க வுக்கு 20 விழுக்காடு வாக்கு என்பது சிறுபான்மை.. அது என்னிக்கும் தி மு க வுக்குத்தான் அது மாறாது.. அதற்காக மற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைக்க முடியாது.. அப்படி கூட்டணி வைத்தாலும் அது செயற்கையாக இருக்கும். பிறகு அந்த கூட்டணி சிதைந்து போகும். நான்கு முனை போட்டி பிறகு அதனால் சிறுபான்மை வோட்டுகளுடன் தி மு க மீண்டும் ஜெயிக்கும் என்றால், பிறகு அப்படியே தி மு க ஜெயிக்கட்டும் .... தி மு க ஆட்சிக்கு வந்து மீண்டும் அடிபட்டால்தான் இங்குள்ளவன் திருந்துவான் ..இல்லையென்றால் திருந்த மாட்டான் .... சென்னையில் எந்த தி மு க தொண்டனும் இந்த ஆட்சி நல்ல ஆட்சி என்று இப்போது சொல்வது கிடையாது ....ஆனால் தேர்தல் என்று வரும்போது அவன் யாருக்கு வோட்டு போடுவான் என்பது தெரியாது ...


vadivelu
ஜன 03, 2025 08:35

காசுக்கு ஒட்டு போடுவான்


முக்கிய வீடியோ