உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ரூ.5,000 எங்கடா? போஸ்டரால் பரபரப்பு!

 ரூ.5,000 எங்கடா? போஸ்டரால் பரபரப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, 'பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்' என, அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், 'நாங்கள் 5,000 ரூபாய் கொடுங்கள் என்கிறோம். கொரோனா காலத்தில் முன்பு 1,000 ரூபாய் கொடுத்தீர்கள். இப்போது கொடுக்கும் 2,500 ரூபாயுடன் சேர்த்தால், 3,500 ரூபாய் ஆகிறது. மீதமுள்ள 1,500 ரூபாயையும் சேர்த்து கொடுங்கள்' என்றார். அவரது பேச்சு 'எடிட்' செய்யப்பட்டு, 2,500 ரூபாயுடன், 1,500 ரூபாயை சேர்த்து, 5,000 ரூபாய் வழங்கும்படி கூறியதாக அ.தி.மு.க., தரப்பில் கிண்டலடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்புடன் 3,000 ரூபாய் வழங்கி உள்ளார். அ.தி.மு.க., தரப்பில், 'எதிர்க்கட்சியாக இருந்தபோது நீங்கள் கேட்ட 5,000 ரூபாயை கொடுங்கள்' என வலியுறுத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில், அ.தி.மு.க., செங்கல் பட்டு மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், 'அந்த 2,500 + 1,500 = ரூ.5,000 எங்கடா' என்ற வாசகத்துடன் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜன 14, 2026 17:47

ஒத்துமையா 15 லட்சம் கேட்டுப்பாருங்க...


Palanisamy Sekar
ஜன 14, 2026 08:52

எதை சொல்லி சிரிப்பது? 2500+1500= 5000 தானே என்று ப்ரசாத்தில் கேட்டதை சொல்வதா? இந்த கணக்கு லட்சணத்தில் ஆளும் திறமையில் இப்படி எவ்வளவு கோட்டை விட்டாரோ தெரியல. கணித மேதையையே கூட கலங்கி போயிருப்பார். அடிப்படை கணித அறிவு கூட இல்லாதவரை முதல்வராக தேர்வு செய்த மக்களை குறை சொல்வதா? இப்படித்தான் ஆட்சிக்கு வந்த பிறகு நான்கரை லட்சம் கோடியில் எவ்வளவு சிந்தியதோ சிதறியதோ தெரியல்ல. ஆனாலும் சரியான நேரத்தில் செம்ம பஞ்ச் போஸ்டர் இது. பலரையும் சிரிக்க செய்த போஸ்டரில் இப்படி கணக்கு சொன்னவரை மனதுக்குள் பாராட்டி சென்றிருப்பார்கள்..இதனை பார்த்து கடந்து போனவர்கள்


D.Ambujavalli
ஜன 14, 2026 05:41

இதற்குத்தான் சொல்வது, பள்ளிக்காலத்தில் கணக்கு நேரத்தில் ஒழுங்காக attendance கொடுக்க வேண்டுமென்று தான் வைத்த பொறியில் தானே சிக்கிக்கொண்ட நிலை


vivek
ஜன 14, 2026 08:19

2,500 + 1,500 = 4,000 தான் 5,000 இல்லை.- போஸ்டர் அடிச்சி ஓட்டினத்துக்கு அப்புறமும் தெரிஞ்சிருக்காது. . ஆடீம்கா கொத்தடிமைகளுக்கு அறிவு கம்மி.


பேசும் தமிழன்
ஜன 14, 2026 09:35

அந்த கணக்கு உங்கள் தலைவர் எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னது தான்.


வாய்மையே வெல்லும்
ஜன 14, 2026 09:50

உங்களுக்கும் கணக்குபாடத்துக்கும் எட்டாம் பொருத்தம். உங்க துண்டுசீட்டு அரசியலை குப்பையில் போடுங்க. இன்னிக்கு போகி . கொளுத்தி விட வசதியாக இருக்கும் .. வரானுங்க பாரு திருடனுக்கு முட்டு கொடுத்துட்டு. வெட்கமா இல்ல உங்களுக்கு ? திராவிடம் ஒழிய பாடுபடுவோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை