உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த செடியை எங்கே வைப்பது? ஆலோசனை சொல்ல ரூ.1 கோடி!

எந்த செடியை எங்கே வைப்பது? ஆலோசனை சொல்ல ரூ.1 கோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் நிலத் தில் தோட்டக்கலை பூங்கா அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு, நான்கு நிறுவனங் கள் தகுதி பெற்றுள்ளன. எந்த இடத்தில் எந்த செடியை நடலாம் என, ஆலோசனை பெற, ஒரு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.சென்னை கிண்டியில் உள்ள 160 ஏக்கர் நிலம், ரேஸ் கோர்ஸ் கிளப்பிடம், 99 ஆண்டுகளுக்கு குத்தகை வழங்கப்பட்டு இருந்தது. ஒப்பந்த விதிகளை மீறிய தாக கூறி, குத்தகையை தமிழக அரசு ரத்து செய்து, நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு, 4,832 கோடி ரூபாய். இங்குள்ள 118 ஏக்கர் நிலத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக, வருவாய்த்துறையிடம் இருந்த நிலம், தோட்டக்கலைத்துறைக்கு வகை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.மீதமுள்ள நிலம் சென்னை மாநகராட்சி யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அங்கு, நீரை தேக்கும் வகையில், குளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்கு தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகளை, ஜூன் மாதம் தோட்டக்கலைத்துறை துவங்கியது. தற்போது, நான்கு நிறுவனங்கள், இதற்கான தகுதியை பெற்றுள்ளன. நிலம் கையகப்படுத்தியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை தொடர்கிறது.வழக்கில் சாதகமாக தீர்ப்பு கிடைக்கப் பெற்றதும், அதில் ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து, தோட்டக்கலை பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக, ஆலோசனை நிறுவனத்திற்கு கட்டணமாக, ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. பூங்கா அமைப்பதற்கு எங்கு செடிகளை நடலாம், மரக்கன்றுகள் நடலாம் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது.இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேனாம்பேட்டையில் தோட்டக்கலைத்துறை வாயிலாக, சர்வதேச தரத்தில் நுாற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. அதைவிட பிரமாண்டமான பூங்காவை அமைக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.அமெரிக்காவின் மேஜிக் கிங்டம், ஜப்பானின் டோக்கியோ டிஸ்னி லேண்ட், டென்மார்க்கின் டிவோலிகார்டன்ஸ், ஆஸ்திரியாவின் வுர்ஸ்டெல்பிரேட்டர் ஆகியவற்றிற்கு இணையாக இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.பெங்களூருவில் உள்ள ஒண்டர்லா, லக்னோவில் உள்ள ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்காவை மிஞ்சும் அளவிற்கு நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவாக இது உருவாகும். நீதிமன்ற தீர்ப்புக்காக ஆயத்த நிலையில் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

N Sasikumar Yadhav
செப் 20, 2025 04:39

குத்தகை முடிந்தும் இந்துமத கோயிலின் நிலத்தை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கிருத்துவ நிறுவனம் லயோலாவை எப்போது அப்புறப்படுத்த போகிறது இந்த திராவிட மாடல் அரசு


இந்தியன்
செப் 20, 2025 03:39

சிங்கப்பூரில் பொது போக்குவரத்திற்கு ( சாலைகள், மெட்ரோ ரயில்) முக்கியத்துவம் வழங்கியது போன்று, சென்னையில் பூங்காவிற்கு பல கோடி ரூபாய் செலவழிப்பதற்கு பதிலாக பொது போக்குவரத்திற்கு ( சாலைகள், மெட்ரோ ரயில்) செலவழிக்கலாம்


Saai Sundharamurthy AVK
செப் 19, 2025 17:25

ஆலோசனை என்றால் வாயால் சொல்வது அல்ல. உடனே செடி, கோடி, மரங்களை அங்கே வை, இங்கே வை என்று சொல்லி , அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பது அல்ல. இந்த விஷயம் வேறு மாதிரி. நம் வீட்டில் உள்ள சிறிய தோட்டம் என்றால் அதை நாமே அல்லது ஆளை வைத்து நம் மூளைக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து விடலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் போது மக்கள் பயன்படுத்தும் படியான ஒரு அழகிய பப்ளிக் பார்க் அல்லது தோட்டம் அமைக்க வேண்டுமெனில் அதற்கு திட்டமிடல் மிக அவசியம். அந்த திட்டமிடலில் முதன்மையான விஷயம் நிலத்தின் தன்மை, மேடு, பள்ளம் போன்றவற்றை கருவிகளை வைத்து சர்வே செய்து , அதை ஒரு வரை படமாக தயாரிக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில் ஒரு வடிவைப்பு வரை படம் அதாவது பிளான் ஒன்றை தயாரிக்க வேண்டும். அந்த பிளானில் எங்கு புல்வெளிகள், தண்ணீர் குளங்கள், அழகிய நடமாடும் பாதைகள், உட்காரும் இடங்கள், பிள்ளைகள் விளையாடும் இடங்கள், உபகரணங்கள், ஜாகிங் பாதைகள், மரங்கள், செடிகள், கொடிகள் நடும் இடங்கள், அவைகளை பற்றிய விபரங்கள், அதற்கு குழாய்கள் மூலம், தண்ணீர் பாய்ச்சும் வரைபங்கள், மின்சார வலைப்பின்னல்கள், அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் வகையிலான வரை படங்கள் என்று பல வகையான வரைபடங்கள் சரியான அளவு கோளில் ( measurement ) தயாரித்து அளிக்க வேண்டும். வரைபடம், வடிவம் தயாரிக்கும் வடிவமைப்பாளர் ( Landscape Architect ), சிவில், இரிகேஷன் என்ஜினீயர், தோட்டக்கலை வல்லுநர்கள் என பல விதமானவர்கள் அந்த திட்டத்தில் பங்கு கொண்டு ஒரு ப்ரொஜெக்ட் மாதிரி செய்ய வேண்டும். பிறகு அதை டெண்டர் விட்டு இவர்கள் வரைபடங்கள் மூலம் கொடுக்கும் விஷயங்களை படித்து ,புரிந்து கொண்டு, கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து அப்படியே கட்டி தரக் கூடிய வல்லுநர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ஒரு வருட காலம் கூட நேரம் எடுக்கும். இவ்வளவு வேலைகள் இருப்பதால் தான் அவர்கள் அவ்வளவு தொகையை Desigining Fees என்று வாங்குகிறார்கள். Hard Landscaping சிவில் கட்டுமான வேலைகளை குறிப்பது, Soft Landscaping என்பது மரம், செடி, கொடி, புல்வெளி ஆகியவைகளைக் குறிக்கிறது. இப்போதைக்கு ஒன்றும் தெரியாதவர்களுக்கு இந்த சிறிய விபரங்கள் போதும்.


ஆரூர் ரங்
செப் 19, 2025 14:17

அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் செடியை மாடு மேய்ந்து விட்டது. மாட்டை முதலை சாப்பிட்டு விட்டு கூவத்திற்குள்ளே போய் விட்டது. கூவம் கடற்கரைக்குப் போய் தயிர் வடை படையல் சாப்பிட்டு விட்டதுன்னு செடியோவியம் படியுங்க.


Vasan
செப் 19, 2025 11:21

தயவு செய்து கஞ்சா போன்ற போதை செடிகளை வளர்க்காதீர்கள்.


ஆரூர் ரங்
செப் 19, 2025 11:09

செடி வைக்க ஆலோசனை கேட்டு காதுல பூ. அடுத்து மேம்பாலத்தை தரைக்கு மேலே கட்டலாமா மண்ணுக்கு கீழே கட்டலாமான்னு ஆலோசனைக்கு ஒரு டெண்டர் விடுங்க.


Ramalingam Shanmugam
செப் 19, 2025 10:32

பெத்த ராசுவுக்கு கொடுக்கவா


ஜெய்ஹிந்த்புரம்
செப் 19, 2025 10:05

காவிரி காலிங் ன்னு சொல்லி கோடிக்கணக்கில் மரம் நடுவதாக பக்கி சத்துரு ஆட்டையை போட்ட பணம் ரூ.10,000 கோடி. அவன் கிட்டே கோவிலை கொடுக்க சொல்லி வேற போராட்டம் நடத்த சொல்லுதான் உங்கள கூவுற கூட்டம் அங்கே போயி கணக்கு கேக்கலாமுல்லே?


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 19, 2025 10:03

இது என்ன பிரமாதம்? அடுத்து இதைவிட சூப்பரா செய்வோமில்ல. ஒவ்வொரு செடியின் விலை 5 லட்சம், உண்டும் செலவு 5 லட்சம், வளர்க்கும் செலவு மாதம் 1 லட்சம், தண்ணீர் வாடகை, உரம் இடும் செலவு தனியாக செடிக்கு ஆண்டுக்கு 5 லட்சம், வளராத செடிகளை மற்றும் செலவு செடிக்கு 5 லட்சம். மொத்தமாக 1 லட்சம் செடிகள் வளர்க்க திட்டம். இப்போது கணக்கு போட்டு பாருங்கள். ஊட்டியையே விலைக்கு வாங்கும் அளவுக்கு லாபம் கிடைக்கும். திராவிட மாடல்.


Vasan
செப் 19, 2025 09:52

செய்யுங்கள், தாராளமாய் செலவு செய்யுங்கள். CAG Audit will find the corruption to file cases.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை