உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த பக்கம் இருந்தால் நல்லது…. ஓபிஎஸ் தான் முடிவு எடுக்கணும்: நயினார் நாகேந்திரன்

எந்த பக்கம் இருந்தால் நல்லது…. ஓபிஎஸ் தான் முடிவு எடுக்கணும்: நயினார் நாகேந்திரன்

திருச்சி: நாங்கள் ஓபிஎஸ் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறோம். எந்த பக்கம் இருந்தால் நல்லது என்பது பற்றி ஓபிஎஸ்தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.திருச்சியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அடுத்தது இபிஎஸ் தான் முதல்வராக வருவார். தேஜ கூட்டணி வெற்றி பெறும், 5 வருடமாக சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. கையில் புத்தகத்தை எடுக்க வேண்டிய குழந்தைகள் கையில் கஞ்சாவை எடுத்து இருக்கிறார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o3nhd8ls&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கொங்கு பகுதியில் வயதானவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். காரணம் கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது. 33 லாக் அப் மரணங்கள் நிகழந்துள்ளது. புழல் சிறையில் கைதிகள் இறந்து போகும் நிலை நீடிக்கிறது. திமுக ஆட்சியால் மக்களுக்கு நல்லாட்சியை தர முடியவில்லை.வெறும் பணத்தை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள். பணப்பெட்டியை வாங்கி கொண்டு தான் கூட்டணியில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் கூட்டணி வலுவடைந்து உள்ளது. அவர்களது கூட்டணி வலுவிழந்துள்ளது. மக்கள் தேஜ கூட்டணி பக்கம் இருக்கிறார்கள். பிரதமர் மோடி இந்தியாவை உலக நாடுகளில் மிக சிறந்த நாடாக மாற்றி கொண்டு இருக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றைக்கு பிரதமர் மோடியை பார்த்து இறங்கி வந்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் புதிய ஒப்பந்தம் போட்டு, புதிய முதலீடுகள் இன்றைக்கு இந்தியாவுக்கு வந்துள்ளது.நாங்கள் நிச்சயமாக 200 இடங்களில் வெல்வோம். ஓபிஎஸ் எந்த நிலையில் முதல்வரை சென்று பார்த்தார் என்று நமக்கு தெரியவில்லை. நாங்கள் ஓபிஎஸ் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறோம். எந்த பக்கம் இருந்தால் நல்லது என்பதை பற்றி ஓபிஎஸ்தான் முடிவெடுக்க வேண்டும். நான் கூட முதல்வர் ஸ்டாலினை சட்டசபையில் சந்தித்தேன். அப்போது இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். எந்த கோணத்தில் அவர் பார்த்தார் என்று தெரியவில்லை. திமுக அமைச்சர்கள் மீது நிறைய வழக்குகள் இருக்கிறது.எல்லோரும் பெயரிலும் ஈடி வழக்கு இருக்கிறது. நீதிமன்ற கருத்து குறித்து நாம் எதும் சொல்ல முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

D Natarajan
பிப் 21, 2026 21:48

அரசியல் சன்யாசம் தான் சரியான முடிவு.


Ramesh Sargam
பிப் 21, 2026 20:40

ஒருவழியாக ஓ பி எஸ்க்கு, அந்த கோபாலபுரம் வீட்டு காவலர் வேலை கிடைத்தது.


SATHIK BASHA
பிப் 21, 2026 17:24

நல்ல மரியாதை ஓபிஎஸ் மீது வைத்திருந்தால் ஏன் அவர் போனை எடுக்கவில்லை. மெசேஜ் கூட பார்க்கவில்லையாமே மிஸ்டர் நயினார் ?


SUBRAMANIAN P
பிப் 21, 2026 16:54

எப்பவுமே சிரிச்சிகிட்டு இருக்காரு பார்ட்டி


Thirumal Kumaresan
பிப் 21, 2026 16:45

இவரு பேசாமல் பிஜேபியுடன் இணையலாம் எதிர்காலம் இருக்கும் இல்லாவிட்ட்தால் திமுக வால் அவமானப்பட்டு இருக்கும் இடம் தெரியாமல் போக போகிறார்.


Haja Kuthubdeen
பிப் 21, 2026 15:56

இன்னுமா நயினாருக்கு ஓ பி எஸ்ஸின் புத்தி புரியல...அவர் அஇஅதிமுகவில் சேரணும்னதே அந்த கட்சியை இல்லாம செய்யனும் என்பதற்குதான். எடப்பாடிக்கு நல்லாவே தெரியும்.


Raja k
பிப் 21, 2026 14:25

,இவ்ளோநாளா நீங்க சொல்வதை கேட்டுகிட்டுதானே ஓபிஎஸ் இருந்தார், எத்தனைமுறை டெல்லி வந்திருப்பார், டெல்லி தலைகள் தமிழகம் வரும்போது எத்தனை முறை அனுமதிகேட்டு காத்திருப்பார், ஆனால் அவருக்கு நீங்கள் என்ன நல்லது செய்துவிட்டீர்கள், ஏமாற்றம், ஏமாற்றம், ஒன்றுதான், இவ்வளவுநாளா உங்களை நம்பி இருந்ததுக்கு இன்று தனிமரமா நிற்க வைத்ததுடன், அவர் அரசியல் வாழ்க்கையையே முடித்துவிட்டீர்கள், இதுதான் அவருக்கு நீங்கள் செய்த நல்லதா?


Kannan
பிப் 21, 2026 13:54

Mr nayinar Nagendran u dont advise to ops. First u speak correctly and decently about others. Because of your bad speech before 2 days about actress Trisha will never forgive by anyone..no vote for mr nayinar


duruvasar
பிப் 21, 2026 13:48

அவர் ஏற்க்கனவே முட்டு சந்தில் நிற்கிறார். வெளியில் தெரிகிற பாழும் கின்றில் விழுவதைவிட வேறு மார்க்கமும் கிடையாது. பண்ருட்யியாரும் கதவை பட்டுனு சாதி 3 நாள் ஆயிடுச்சி. ஓ வென்று அழுவதை தவிர பன்னீர்செல்வதிற்கு உள்ள ஒரே படுக்கும் இடம் அறிவாலயம் வாசல்தான்.


ஆகுயர்த்தோன்
பிப் 21, 2026 14:28

முட்டு சந்தியில் நிறுத்திய கூட்டம் அலறுது


Sun
பிப் 21, 2026 13:32

அண்ணே! வேலியில போற ஓணானை கூப்பிட்டு மறுபடியும் மடியில கொண்டு வந்து விட்டுறாங்கண்ணே! உங்களுக்கு புண்ணியாமப் போகும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை