மேலும் செய்திகள்
'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்ததாக ரூ.1 கோடி சுருட்டல்
31-Oct-2024
சென்னை:'செஸ் சாம்பியன்' விஸ்வநாதன் ஆனந்த் உறவினரை, 'டிஜிட்டல் கைது' செய்து, சைபர் குற்றவாளிகள் பணம் பறிக்க முயன்றது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த், 81. இவர், உலக செஸ் போட்டிகளில் சாதனைகள் படைத்த விஸ்வநாதன் ஆனந்தின் உறவினர். இவரின் மொபைல் போன் எண்ணுக்கு, 'வாட்ஸாப்' அழைப்பில் மர்ம நபர் தொடர்பு கொண்டு உள்ளார். தன்னை கர்நாடக மாநில போலீஸ் என அறிமுகம் செய்த அந்த நபர், 'உங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஒருவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். அந்த கார் விபத்தில் சிக்கி உள்ளது. உங்களிடம் விசாரிக்க வேண்டும்' என்று, கூறியுள்ளார். மேலும், 'விபத்து தொடர்பாக உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 'உங்களை ஆன்லைன் வாயிலாக, டிஜிட்டல் கைது செய்துள்ளோம். வாட்ஸாப் அழைப்பை துண்டித்தால், அதிகாலையில் உங்கள் வீடு தேடி வந்து கைது செய்வோம்' என்று, மிரட்டல் விடுத்து உள்ளார். தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்வதை அறிந்த ஆனந்த், அந்த வாட்ஸாப் அழைப்பை துண்டித்துள்ளார். www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சைபர் குற்றவாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
31-Oct-2024