உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் அந்த சார்? நேர்மையான விசாரணை தேவை; அரசுக்கு திருமா வலியுறுத்தல்!

யார் அந்த சார்? நேர்மையான விசாரணை தேவை; அரசுக்கு திருமா வலியுறுத்தல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வழக்கில், யார் அந்த சார்? என்பது குறித்து நேர்மையான விசாரணை தேவை என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மலேசியா பினாங்கு பகுதியில் ஜனவரி 4,5ம் தேதிகளில் உலக தமிழர் வம்சாவளி மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு நான் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறேன். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைக் கட்சி தமிழக அரசிற்கு, சுட்டிக்காட்டி இருக்கிறோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=95cfrvhk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், அண்ணா பல்கலை., வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய, குற்றவாளி கைது செய்யப்பட்டு இருந்தாலும் கூட, அந்த குற்றச்செயல் அதிர்ச்சியையும், பெரும் வேதனையையும் உருவாக்கி இருக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை., வளாகம் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பிணை வழங்காதீங்க

இந்த வழக்கை பொறுத்தவரையில், கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி, ஒரு சிலர் அதிலே ஈடுபட்டு இருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே அரசு, குறிப்பாக போலீசார் நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்க கூடாது. அவரை சிறையில் அடைத்த படியே, புலன் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து வழக்கு விசாரணையையும் முடித்து தண்டனை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.யார் அந்த சார்? என்பது குறித்து நிருபர்கள் எழுப்பி கேள்விக்கு, 'நேர்மையான விசாரணை தேவை. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்' என திருமாவளவன் பதில் அளித்தார்.

வாய்ப்பு வழங்கணும்!

போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'பல்வேறு இயக்கங்களுக்கு அனுமதி வழங்கி போராட்டங்கள் நடந்திருக்கின்றன. முழுவதுமாக அனுமதி மறுக்கப்படவில்லை. இதே பிரச்னைக்கு பலர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று சிலர் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என அரசு முற்றுப்புள்ளி வைப்பதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு போராடுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தை வேண்டுகோள். இவ்வாறு திருமாவளவன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

ram
ஜன 03, 2025 04:58

உங்களோட களவானித்தனம் நாடரிந்தது தானே...


V வைகுண்டேஸ்வரன்
ஜன 02, 2025 22:05

கம்யூனிஸ்ட்டும், விடுதலைப் பூனையும் வெளியேறி விட்டால், அந்த தொகுதிகளிலும் திமுக வே போட்டியிட்டு ஜெயிக்கும். அதனால் தான் 200 தொகுதிகள் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னாரோ?


V வைகுண்டேஸ்வரன்
ஜன 02, 2025 22:05

வாழ்த்துக்கள்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 02, 2025 22:04

பாஜக விற்கு முறைவாசல் செய்து காவடி எடுப்பதில் இப்போது கடும் போட்டி. போட்டியில் இருப்பவர்கள் திருமா, விஜய், சீமான், இப்போது பாலகிருஷ்ணன். விரைவில் அன்புமணியும், பிரேமலதா வும் வருவார்கள். ம ந கூ மாதிரி ஒன்று அமைந்து, திமுக வை மீண்டும் அரியணையில் அமரவைக்கும். வாழ்த்துக்கள். கம்யூனிஸ்ட் டும், விடுதலைப் பூனை யும் வெளியேறி விட்டால், அந்த தொகுதிகளிலும் திமுக வே போட்டியிட்டு ஜெயிக்கும். அதனால் தான் 200 தொகுதிகள் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னாரோ?


V வைகுண்டேஸ்வரன்
ஜன 02, 2025 21:58

இந்த திருமா தான் 2024 ன் கடைசி துரோகி.


ராமகிருஷ்ணன்
ஜன 02, 2025 21:43

மலேசிய தமிழர்களிடம் பெட்டிகளை வாங்க போறாங்க ஐயா.


MN JANAKIRAMAN
ஜன 02, 2025 20:51

நாளைக்கு யாரும் இவரை கேள்வி கேட்டுடக்கூடாது ???..அதுக்குத்தான் நானும் ரவுடி ..நானும் ரவுடி ...


sankaranarayanan
ஜன 02, 2025 20:47

அரசு விழாக்களில் அதிகமாக பணக்கற்றவர் சார் இப்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லையே சார் அவர் தான் சார் இன்னுமா அந்த சார் யாரென்று தெரியவில்லையா சார்


vijai
ஜன 02, 2025 20:33

எக்ஸ்ட்ராவா ரெண்டு பிளாஸ்டிக் சேர் ரெடி


பேசும் தமிழன்
ஜன 02, 2025 19:01

பாரு.... தெருமா கூவுவதை..... ஒரு வேளை தெரியாமல் உப்பு போட்டு சாப்பிட்டு இருப்பாரோ ???


முக்கிய வீடியோ