உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் அந்த சார்? கேள்விக்கு தீர்ப்பில் கிடைத்த விடை

யார் அந்த சார்? கேள்விக்கு தீர்ப்பில் கிடைத்த விடை

அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன், யாரோ ஒருவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'சார்' என குறிப்பிட்டு பேசியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, 'யார் அந்த சார்?' என்ற கேள்வி, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

ஞானசேகரன் தன்னிடம் சிக்கிய மாணவியிடம், தான் பல்கலை ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, ஏமாற்றும் நோக்கத்திலும், மாணவியை நம்ப வைத்து திசை திருப்பி மிரட்டவும், 'சார்' என்ற வார்த்தையை பயன்படுத்திஉள்ளார் என்பது, அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் வாயிலாக தெரிகிறது.இந்த வழக்கில், ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி. மற்றவர்களுக்கு தொடர்பு இல்லை என்ற அரசு தரப்பு வாதம் மற்றும் அதுதொடர்பான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை, இந்த நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது. அண்ணா பல்கலை நீண்ட நெடிய வரலாறு உடையது.இந்த வளாகத்தில் செயல்படும் பொறியியல் கல்லுாரிக்கு உலகளவில் நற்பெயர் உள்ளது.இங்கு படிக்கும் மாணவர்களில், 97 சதவீதம் பேர் முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெறுகின்றனர்.பல்வேறு கனவுகளுடன் வந்த மாணவியை, ஞானசேகரன் சீரழித்துள்ளார். இதன் வாயிலாக, பல்கலை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும், ஞானசேகரன் தன் செயலால் அவமதித்துள்ளார். இதுபோன்ற அநீதியை ஒரு போதும் ஏற்கவும், அனுமதிக்கவும் முடியாது. குற்றவாளி ஞானசேகரன், 2010 முதல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.அவர் மீதான, 37 வழக்குகளில், ஐந்து வழக்குகளில் தண்டிக்கப்பட்டு உள்ளார்; ஒரு சில வழக்குகளில் விடுவிக்கப்பட்டு உள்ளார்; மீதமுள்ள வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு, எந்த கருணையும் காட்ட முடியாது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு

தீர்ப்புக்கு பின், சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.பி.மேரி ஜெயந்தி அளித்த பேட்டி:ஞானசேகரன் தவிர வேறு யாருக்கும் இந்த வழக்கில் தொடர்பில்லை. ஞானசேகரன் பின்னணியில் யாரும் இல்லை. பெண்கள் படிக்கும் கல்லுாரியில் உச்சபட்ச அநியாயம் நடந்துள்ளது.சம்பவம் நடந்த நேரத்தில், தன் மொபைல் போன் வாயிலாக, ஞானசேகரன் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவரது மொபைல் போன், 'பிளைட் மோடில்' இருந்தது. இது, ஞானசேகரன் பயன்படுத்திய மொபைல் போன் நிறுவனத்தின் அதிகாரி வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, அதை தெரிவித்துள்ளார். ஞானசேகரனின் மொபைல் போன் முழுமையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, தரவுகள் சேகரிக்கப்பட்டன. அதை நீதிமன்றமும் ஏற்றுள்ளது. வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்பது நிரூபணமாகி உள்ளது. 'சார்' விவகாரத்தை, நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளதால், இனிமேல் இதுதொடர்பாக யாரேனும் திரித்து பேசினால், அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேல்முறையீடு செய்வோம்

ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர் கோதண்டராமன் கூறும் போது, ''வழக்கில் இரண்டு சந்தேகங்களை எழுப்பி இருந்தோம். அதில் உரிய பதில் கிடைக்கவில்லை. 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். தற்போதைய தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Padmasridharan
ஜூன் 09, 2025 16:54

உண்மையிலேயே இந்த பல்கலைக்கழகம் வரலாறு உடையது ஆனால் இந்த பல்கலையயை சேர்ந்த விரிவுரையாளர்கள் மீது ஏற்கனவே 2 புகார்கள் வந்துள்ளன. ஒன்று கல்லூரி மாணவி கொடுத்தது. இன்னொன்று பல இடத்திலும் வேலை பார்க்கிறார்களென்று. இப்பொழுது இதுவும் சேர்ந்துள்ளது. ஃபோனை ஃபிளைட்ல போறவங்க மட்டுமே flight mode உபயோகிப்பதுண்டு இல்லையெனில் switch off செய்வார்கள். மத்தவங்க எளிதில் இதை opt பண்ணமாட்டார்கள் இந்த optionஐ கொடுத்தவர்கள் நிஜமாகவே கிரிமினல் மூளையுடன் செயல்பட்டிருக்கிறார்கள்.


Parthasarathy Badrinarayanan
ஜூன் 07, 2025 11:20

தில்லுமுல்லு மாடலுக்கு நீதி தடை போகிறது. அந்த பொம்பளை பொறுக்கி சார் என்ற யாரும் நீதிமன்றத்திடம் கேட்கவில்லை


Keshavan.J
ஜூன் 04, 2025 14:45

கல்லுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு மிக பெரிய தொடர்பு இருக்கு என்று நினைக்கிறன். எப்போ பார்த்தலாம் கல் எறிந்து கொண்டாயே இருக்கிறார்கள்.


D Natarajan
ஜூன் 04, 2025 07:52

bharathi airtel க்கு கலிகாலம். மொபைல் போனில் flight mode . ரொம்ப பேருக்கு தெரியாத ஒன்று


venugopal s
ஜூன் 03, 2025 14:57

இந்த விஷயத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று இப்படி மிகுந்த ஆவலுடன் இருந்த பலர் முகத்தில் கரி பூசி விட்டதே உயர் நீதிமன்றம்?


Rangarajan Cv
ஜூன் 03, 2025 13:23

Hope phone records at that point of time can be validated?


Keshavan.J
ஜூன் 04, 2025 14:05

உங்க வீட்டு கல் கறிதான்..


seshadri
ஜூன் 03, 2025 11:18

யாரை காப்பாற்ற வேண்டுமோ அதற்கு தகுந்தாற் போல் விசாரணை செய்து நீதி மன்றத்தில் தாக்கல் செய்து அந்த சாரை காப்பாற்றி விட்டார்கள். நீதிமன்றமும் சூழ்நிலை சாட்சிகள் பற்றி கவலை படாமல் தீர்ப்பு வழங்கி உள்ளது. airplane mode வைத்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுப்ப படவில்லை. நல்ல தீர்ப்பு . என்ன செய்வது விசாரணை அதிகாரிகள். தடவியல் அதிகாரிகள் எல்லோரும் மாநில அரசின் அதிகாரிகள்தானே. மாற்று கருத்து கொடுத்தால் அவர்கள் கதி என்ன ஆவது.


அருண், சென்னை
ஜூன் 03, 2025 07:21

3 நாள்ல அவன் வெளிலிருப்பான் ?.. பாருங்க இன்னும் 10 மாதம். என்ன என்ன கொடுமைகளை அனுபவிக்கணுமோ தெரியல... வெளியில் இருக்கும் சார் கைகொடுப்பார்... பெரிய நெட்வர்க்கா இருக்கும் பொலிய


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 03, 2025 05:13

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் மீது சுமத்தப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு தமிழகத்தில் நடந்தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவார் என்று கர்நாடகாவிற்கு மாற்றினார் மறைந்த பேராசிரியர் அன்பழகன்..... அதன்படி விசாரித்து தீர்ப்பு கூறப்பட்டது....இப்பொழுது திமுகவின் மகளீரணி, வக்கீல்கள் ஆணி இருப்பது போல் நீதிபதிகள் அணி என்று உருவாகி உள்ளது போல் தோன்றுகிறது..... ஆகையால் இனிவரும் காலங்களில் வழக்குகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றினால் தான் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் போல் உள்ளது.....!!!


Kasimani Baskaran
ஜூன் 03, 2025 04:02

பிளைட் மோடு என்று ஒன்று இருப்பதை தெரியும் அளவுக்கு ஒரு அறிவாளி ஞான சேகரன் என்பது நம்பும்படியாக இல்லை. உயர் காவல்துறை அதிகாரிகள் பல வழக்குகள் இருந்தும் கூட எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்பதற்கு நம்பும் படியான பதில் இல்லை. அண்ணாமலை இது போன்ற தகவல்களை வெளியிடுவார் என்றுதான் நினைக்கிறேன்.


சமீபத்திய செய்தி