உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி., யார்? சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழக அரசு!

தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி., யார்? சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழக அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரம் ஆகிய உள்ளன. புதிதாக தேர்வு செய்யப்படும் டி.ஜி.பி., அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கும்போது பதவியில் இருப்பார் என்பதால் இந்த தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது.தமிழக டி.ஜி.பி.,யாக உள்ள சங்கர் ஜிவால், ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனால், புதிய டி.ஜி.பி., யார் என்ற கேள்வி இருந்து வருகிறது. டி.ஜி.பி.,கள் நியமனம் தொடர்பாக புதிய வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அதிகாரிகளின் தேர்வும் இருக்கும். புதிய விதியின்படி, நிலை-16 ஊதிய விகிதப்படி டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மட்டுமே தகுதியுடையவர்கள். முன்னதாக, 30 ஆண்டுகள் சேவையை முடித்த அனைத்து ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் பட்டியலில் சேர்க்க உரிமை பெற்றிருந்தனர். இப்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.டி.ஜி.பி., பதவிக்கான அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்யும் பணியில் தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. சீனியாரிட்டி அடிப்படையில் , டி.ஜி.பி.,கள் சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூவரும் முதலிடத்தில் உள்ளனர். இந்த மூன்று அதிகாரிகளும் மத்திய அரசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.டி.ஜி.பி.,கள் பிரமோத் குமார் மற்றும் அபய் குமார் சிங் ஆகியோரின் பணிக்காலம் ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருப்பதால் அவர்களைக் கருத்தில் கொள்ள முடியாது. தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பட்டியல் இந்த வாரம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பதால், புதிய டி.ஜி.பி., நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.காவல் துறை, லாக்அப் டெத் அல்லது சித்திரவதை தொடர்பான பல சம்பவங்களுக்காக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. தேர்தல் காலத்தில் போலீசார் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கவே, செய்யும். அதை சமாளித்து போலீஸ் துறையை திறம்பட நிர்வகிப்பது, புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரிக்கும் பெரும் சவாலாக இருக்கும்.உள்துறை அமைச்சகம் தனது திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் நிர்ணயித்துள்ள அளவுகோல்களில் ஒன்று, உயர் பதவிக்கு பரிசீலிக்கப்படும். ஒரு அதிகாரி, சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு, பொருளாதார குற்றப் பிரிவு, சைபர் குற்றப் பிரிவு, அரசு ரயில்வே காவல்துறை, ஊழல் தடுப்பு, விஜிலென்ஸ், உளவுத்துறை, சிறப்புப் பிரிவு, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு, மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். இதன் அடிப்படையில், புதிய டி.ஜி.பி., நியமனம் செய்யப்படுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

S.jayaram
ஜூலை 23, 2025 05:56

இப்போ புரிகிறதா ஒரு மாநிலத்தின் காவல் துறை தலைவரை நியமிக்கக் கூட மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டும் அப்புறம் எங்கே மாநில சுயாட்சி, மாநில உரிமை, எல்லாம் மத்திய அரசின் கண்காணிப்பில் தான் நடக்கணும் அது கம்யூனிஸ்ட் , திமுக, காங்கிரஸ், மம்தா ஆட்சியான்னாலும், சரி


Padmasridharan
ஜூலை 22, 2025 08:52

தொல்லைகள் கொடுக்கும் காவலர்களின் மேல் சாதாரண மக்கள் புகாரளிக்க toll free எண் தேவை சாமி. இவர்கள் மஹா நடிகர்களாக தைர்யசாலிகளாக நடித்துக்கொண்டு கோழைகளாக பணம்/பொருள் மட்டுமே பஞ்சாயத்து என்கிற பெயரில் நிறய குற்றங்களை மறைத்தும் நல்லவர்களை sections சொல்லி பயமுறுத்தியும் அதிகார பிச்சை எடுக்கின்றனர். ஒரு சிலரே வாங்கும் சம்பளத்துக்கு மனசாட்சியுடன் வேலை செய்கின்றனர்.


Rajasekar Jayaraman
ஜூலை 21, 2025 19:33

யாராக இருந்தாலும் திருட்டு திராவிட அரசுக்கு கீழ் படிந்துதான் ஆகவேண்டும் இதுக்கு சீனியாரிட்டி வேறா.


என்றும் இந்தியன்
ஜூலை 21, 2025 17:42

சீனியாரிட்டி இப்படி தயாரிக்கப்படும். இந்த பதவிக்கு யார் ரூ 50 லட்சம் தருகின்றார்களோ அவர்கள் பெயர் நம்பர் 1 என்று இருக்கும் மற்றவர்கள் தன் பின்னே வரும் பணத்தின் அளவைப்பொறுத்து


HoneyBee
ஜூலை 21, 2025 12:27

யார் வந்தாலும்... ஜோலி முடிஞ்சு


ஆரூர் ரங்
ஜூலை 21, 2025 10:42

யாராக இருந்தாலும் டேவிட்சன்னுக்கு கீழ் தான்? அவர்களால் அமைந்த ஆட்சி?


sekar ng
ஜூலை 21, 2025 10:16

யார் அதிக கொள்ளையாடிக்கிறார்களோ அவர்களுக்கு ஒதுக்கிடு


rasaa
ஜூலை 21, 2025 10:10

ஓ.... இப்போது இருக்கும் டி.ஜி.பி. இவர்தானா?


பெரிய குத்தூசி
ஜூலை 21, 2025 09:58

ஹ்ம்ம், யார் வந்தாலும் அந்த மாநில டிஜிபி காவல்துறை தலைவர் போஸ்ட் டம்மி தான். திரைமறைவு திமுக மற்றும் கிறிஸ்துவ மிழினரி ஆதரவு பெற்றுள்ள கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் தான் நமது திமுக இளவரசர் உதயநிதி துணையோடு தமிழக காவல் துறையை இயக்குபவர். இதில் எதுவும் மாறப்போவதில்லை.


rasaa
ஜூலை 21, 2025 10:10

உண்மை


sekar ng
ஜூலை 21, 2025 10:16

மிகவும் சரியாக சொன்னீர்கள்


Srinivasan Krishnamoorthi
ஜூலை 21, 2025 09:46

ஆக டிராபிக் ஸ்பெசலிஸ்ட் நீட்டிக்க பட வில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை