உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வங்கதேச மாணவர் தலைவர் ஹாதியை கொன்றது யார்? குற்றஞ்சாட்டப்பட்டவர் வீடியோ வாக்குமூலம்

 வங்கதேச மாணவர் தலைவர் ஹாதியை கொன்றது யார்? குற்றஞ்சாட்டப்பட்டவர் வீடியோ வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான ஓஸ்மான் ஹாதியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பைசல் கரீம் மசூத், தற்போது துபாயில் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஹாதி கொலைக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசியல் குழப்பங்களுக்கு இடையே, வரும் பிப்., 12ல் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து வங்கதேசத்தில் அடுத்தடுத்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. மாணவர் அமைப்பு ஒன்றின் தலைவரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பைசல் கரீம் மசூத், ஆலம் கீர் ஷேக் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இருவரும், இந்தியாவுக்கு தப்பிச் சென்று, வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் பதுங்கி இருப்பதாக வங்கதேச போலீஸ் கூறி வருகிறது. இந்நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மசூத், தற்போது, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஹாதியை நான் கொலை செய்யவில்லை. வேண்டுமென்றே சிலர் என் மீதும், என் குடும்பத்தினர் மீது கொலை பழி சுமத்துகின்றனர். அதில் இருந்து தப்பிக்கவே துபாயில் பதுங்கி இருக்கிறேன். ஜமாத் ஏ இஸ்லாமி என்ற அமைப்பைச் சேர்ந்தவர் ஹாதி. அந்த அமைப்பை சேர்ந்தவர் களே ஹாதியை கொல்ல திட்டமிட்டு இருக்கலாம்.நான் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளர் என்பதால் தொழில்முறை காரணங்களுக்காக ஹாதியை சந்தித்தேன். அவருக்கு அரசியல் நன்கொடைகளை வழங்கினேன். எனக்கு அரசு ஒப்பந்தங்களை பெற்றுத் தருவதாக அவர் உறுதியளித்திருந்தார். ஹாதி உடனான என் உறவு வணிகரீதியிலானது மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வாயிலாக, அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார் என வங்கதேச போலீசார் வெளியிட்ட செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பது நிரூபணமாகியுள்ளது. மேலும், ஹாதியை அவர் சார்ந்த ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பே கொலை செய்திருக்கலாம் என வீடியோவில் மசூத் கூறியிருப்பது, இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

duruvasar
ஜன 01, 2026 12:02

அந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த தவற்றை செய்து இப்போது வருதப்படவைக்கிறது


Rathna
ஜன 01, 2026 11:24

மூர்க்கம் அடித்து கொண்டு சாவதற்காக பிறந்தவன். உலகம் முழுவதும் அதையே செய்கிறான். தீவிரவாதம் என்று செய்தி வந்தாலே மர்ம நபர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இங்கே அவனிடம் பிரியாணி தின்பவன் கவனமாக இருப்பது நல்லது.


Anand
ஜன 01, 2026 10:43

எப்படியோ அவன் சாக வேண்டியவன் தான், நம் நாட்டிற்கு எதிரா விஷம் கக்கும் எவரும் எந்த முறையில் கொல்லப்பட்டாலும் நல்லதே.


சந்திரன்
ஜன 01, 2026 10:30

அவனுகளுக்கு மூளை முட்டியில் உள்ளது எல்லாம் கண்டதையும் திங்கறதோட விளைவு இங்கே போலி பெயர்ல கருத்து போடும் எவனும் வரமாட்டான்


SIVA
ஜன 01, 2026 10:05

என்நன்றி கொண்டாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொண்டதமற்கு . எவன் ஒருவன் தனக்கு செய்த நன்மையை மறந்து அவனுக்கு தீமை செய்கின்றானோ அவனுக்கு மன்னிப்பு இல்லை என்பது திருவள்ளுவரின் வாக்கு ....


GMM
ஜன 01, 2026 08:58

நட்பு, உறவு பண்பட்டவர்களிடம் வைக்க வேண்டும். கிழக்கு, மேற்கு பாகிஸ்தான் பிரிவினை, அல்லது வங்கதேச பிரிவினை கட்டுபாடுகள் உடைய சுதந்திரம் கீழ் விடுவித்து இருக்க வேண்டும். இந்தியாவிற்கு எதிராக செயல்பாட்டை தடுக்கும். இந்த நூற்றாண்டில் இழந்த நில பகுதிகள் மீட்க வேண்டும்.


ManiK
ஜன 01, 2026 08:32

இந்தியாவுக்கு தப்பியதாக வந்த பொய் செய்தி தீயாய் பரவியது. ஆனால் துபாயில் இருந்து வந்த இந்த உண்மையான செய்தியை எந்த இந்தியா எதிர்ப்பு ஜால்ரா ஊடகமும் வெளியிடவே இல்லை.


பைரவன்
ஜன 01, 2026 08:12

நவாஸ் கனி அண்ணே திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி பிரியாணி கொட்டிக்கச் சென்ற அதே ஆர்வத்தோடு உங்களது தொண்டர் குழாத்தோடு வங்கதேசம் புறப்படுங்கள். உங்களது அமைதி மார்க்கத்தினர் அமைதி இன்றித் தவிக்கிறனர். உங்களது சேவை உடனடியாக அங்கே தேவை.


Krishna
ஜன 01, 2026 07:57

For WorldPeace, Let them have Brotherhood Fights and Destroy themselves


Arul. K
ஜன 01, 2026 07:13

இப்படியே எல்லாரும் ஒருத்தனை ஒருத்தன் சுட்டுக்கொண்டு செத்துவிட்டீர்களென்றால் நாடு அமைதியாகிவிடும்


புதிய வீடியோ