உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யார் சொல்வதை கேட்பீர்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

யார் சொல்வதை கேட்பீர்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

சென்னை: '' யார் சொல்வதை கேட்பீர்கள். யார் கருத்தை மதிப்பீர்கள்,'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: சென்னையில் மட்டும் கவனம் செலுத்தினர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மண் சரிவில் சிக்கி 7 பேர் இறந்தது பெரிய துயரம். பல மணிநேம் கழித்து பார்த்தது அதைவிட துயரம். விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி பெரிய பாதிப்புக்கு உள்ளாகும் என நினைக்கவில்லை. பேரிடர் இன்னும் அதிகமாக வரும். புவி வெப்பமயமாதல் பற்றி தெரியவில்லை. ஏன் வெப்பமாகிறது என தெரியவில்லை. பருவநிலை மாறுகிறது. அதுவாக மாறுகிறதோ. நாம் மாற்றினோமா என யாரும் சிந்திக்க யாரும் தயாராக இல்லைhttps://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d5ixp6tc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புவி வெப்பமயமாதலால், பருவமழை என்ற ஒன்று இருக்காது. பெருமழை, புயல் மழை தான் வரும். இரண்டையையும் சமாளிக்க முடியாது. பருவமழை இல்லை என்ற நிலை வந்ததால் பேரிடர் பெருகிக் கொண்டே போகும். அதை நோக்கிய நகர்வுகள் நம்மிடம் இல்லை. புவி வெப்பம், பருவநிலை மாற்றம் இல்லை என டிரம்ப் சொல்கிறார். அவரிடம் என்ன பேச முடியும்? பெருமழையும், புயலும் வந்தால் அழிவை தான் சந்திக்க வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் யாரை மதிக்கிறார்? அதானி எதற்காக வந்தார் எனக்கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர் தமிழகத்திற்கு வந்தார். யாரை பார்க்க வந்தார்? எதற்காக வந்தார்? யாரை, எங்கு சந்தித்தார்? இதை ராமதாஸ் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டீர்கள். என்னை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டீர்கள். அதனால் நான் கேட்டால் சொல்ல மாட்டீர்கள். ராமதாஸ் பெரிய தலைவர். அவருக்கு வேறு வேலை இல்லை என்கிறீர்கள். பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை என்கிறீர்கள். 73 இடம் வென்ற தலைவர் (பழனிசாமி) ஆள் இல்லை என்றால், யார் சொல்வதை கேட்பீர்கள்? யார் கருத்தை மதிப்பீர்கள்?ஜார்க்கண்ட் முதல்வர், மஹா., முதல்வர் மற்றும் கெஜ்ரிவால் மீது ரெய்டு வரும் போது, தமிழகத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரெய்டு வராதது ஏன்?அவதூறு பேசுகிறவர்கள் மீது அனைவர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? அவர்கள் மீது வழக்கு கொடுத்தால் அரசு பதிவு செய்கிறதா? ஆளுங்கட்சி சார்பில் வாடகை வாய் மூலம் பேசுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் இப்படித் தான் பேசினார்களா? காங்கிரசை அதிகம் எதிர்த்துள்ளேன். அவர்கள் வாடகைக்கு ஆள் எடுத்து திட்டவிடுகின்றனரா? சங்கி என்றால் நண்பன் என அர்த்தம். திராவிடம் என்றால், எப்படி பொருள் பார்த்தாலும் திருட்டுப் பயல் என்று தான் அர்த்தம் வருகிறது. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sivagiri
டிச 04, 2024 13:03

என்னப்பா செய்றது? - மைனர்வாள் - அப்பயே அப்படி, இன்னமும் அப்டித்தான்... முன்னாடி மூணு நாலு மைனர்வாள் - சென்னையிலேயே கலக்கிக்கிட்டுருந்தாங்க- நல்லவேளை, அப்பறமா அய்யா பார்த்தார், சென்னை தாங்காதுன்னு, மதுரைக்கும், பெங்களூருக்கும், டில்லிக்குமாக திசைக்கு ஒருத்தரா பிரித்து அனுப்பிட்டாரு..


Barakat Ali
டிச 04, 2024 12:02

தமிழகத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரெய்டு வராதது ஏன்? இப்படிக்கேட்டதால் துக்ளக்காரின் அடிமைகளுக்கு சீமான் மீது கடுங்கோபம்... கிடைக்கிற இருநூறுக்கும் வேட்டு வெச்சிருவாரோ ????


sankar
டிச 04, 2024 10:43

யார் சொல்வதை கேட்பீர்கள்- அதையெல்லாம் வெளியே சொல்லமுடியுமா தம்பி


Anand
டிச 04, 2024 10:38

வளர்ப்பு அப்படி, பெற்றோர் ஒழுக்கமாக இருக்கவேண்டும், அல்லது நல்ல சேர்க்கையாக இருக்கவேண்டும், சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்...


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 04, 2024 10:36

சரியான கேள்விகள். பதில்கள் உண்டா ஆள்வோரிடம்? அது சரி தத்திகளிடம் எப்படி பதிலை எதிர்பார்க்க முடியும்? இவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்க்கும் தத்தி மக்கள் இருக்கும் வரை இந்த நாட்டின் அவலங்களை ஒழிக்க முடியாது.


orange தமிழன்
டிச 04, 2024 09:35

சில சமயங்களில் நன்றாக பேசுகிறார்......அதில் இந்த கேள்விகளும் உண்டு......


Sampath Kumar
டிச 04, 2024 09:29

நீங்க பாவம் யாரு சொல்லுவதை கேக்குறீங்க இது நாலா தான் உங்க தொம்பிகள் உங்களை விட்டு போறாங்க போங்க அப்பு பொய் ஞகாட்சியை பாருங்க


venugopal s
டிச 04, 2024 09:20

சங்கி என்றால் நண்பர் என்று அர்த்தமாம். சீமான் விரைவில் மோடியின் காலில் விழுவதைப் பார்க்க ஆவலாக உள்ளேன்!


Muthu Kumaran
டிச 04, 2024 06:38

போட்டோ கிராபர் மற்றும் வீடியோ கிராபர் பேச்சை கேட்பார்


Kasimani Baskaran
டிச 04, 2024 06:13

ஓவராக பேசினால் இன்னும் இரண்டு லட்சுமிகளை தயார் செய்து பஞ்சாயத்துக்கு அனுப்பிவிடுவார்கள் - ஜாக்கிரதை.


சமீபத்திய செய்தி