உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் இருந்து கவர்னர் ரவி வெளியேறியது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்!

சட்டசபையில் இருந்து கவர்னர் ரவி வெளியேறியது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்!

சென்னை: 'அரசியல் சட்டமும் தேசிய கீதமும் தமிழக சட்டசபையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன. இதனால் கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்' என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, கவர்னர் ரவி கூட்டத்தொடரை புறக்கணித்தார்.https://www.youtube.com/embed/vzCamynVIGQஇதற்கு விளக்கம் அளித்து, கவர்னர் மாளிகை தரப்பில், 9.43 மணிக்கு எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்று போடப்பட்டது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது: அரசியல் சட்டமும், தேசிய கீதமும் தமிழக சட்டசபையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ள முதல் கடமை. கவர்னர் ரவி சட்டசபைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது.தேசிய கீதத்தை பாடுவதற்கு முதல்வர் ஸ்டாலின், சபாநாயகருக்கு கவர்னர் ரவி வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாட மறுப்பு தெரிவிக்கப்பட்து. அரசியலமைப்பு சட்டம், தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம் பாடம் மறுக்கப்பட்டது கவலைக்குரிய விஷயமாகும். இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில நிமிடங்களில் அந்த பதிவை கவர்னர் மாளிகை நீக்கியது. அதன்பிறகு, மீண்டும் சில திருத்தங்களுடன் அந்தப் பதிவு மீண்டும் எக்ஸ் தளத்தில் போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல, இந்த முறையும் கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 112 )

Venkataraman
ஜன 06, 2025 19:45

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதால் மட்டும் எல்லா தமிழர்களுக்கும் பெருமையும், வாழ்வில் வளமும் வந்து விடுமா? இப்போது பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது கருணாநிதியால் மாற்றியமைக்கப்பட்ட அரைகுறையான பாடல். அதில் தமிழை தாய் என்று குறிப்பிடாமல் அணங்கே என்றுதான் குறிப்பிடப்படுகிறது. திமுகவினர் திராவிடம் என்று குறிப்பிடுவது தமிழ்நாட்டை மட்டுமே, ஆனால் திராவிடம் என்ற சமஸ்கிருத சொல் தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களையும் குறிக்கும் பூமிப்பகுதியாகும். எனவே இந்த திராவிடம், தமிழ்த்தாய் வாழ்த்து என்பதெல்லாம் ஊரை ஏமாற்ற நடத்தும் திமுகவினரின் மோசடி வேலைகள்.


N
ஜன 06, 2025 16:55

திரு கவர்னர் அவர்களே தமிழ்நாடுமாநிலத்தின் பிரதான மொழியை தமிழ் மொழி தான் தமிழ் மொழியின் பிரதான தமிழ் பாடல் தமிழ் தாய் வாழ்த்து தான நீங்கள் வந்திருப்பதும் தமிழ் மண்தான் அந்தந்த மொழியில் அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மரபில் அவர்கள் செயல்படுவது அவருடைய தார்மீக உரிமை மற்றும் கடமை


Dharmavaan
ஜன 15, 2025 08:36

தமிழ் நாடு தனி நாடல்ல ,இந்திய தான் நாடு அதன் கீதம் மட்டுமே ஒழிக்கப்பட வேண்டும் நடுவில் புகுத்திய மரபு சட்டமாகது எனவே தமிழ் தாய் பாட்டு பிரிவினைவாத செயல்


என்றும் இந்தியன்
ஜன 06, 2025 16:24

தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொல்லி எந்த கஸ்மாலம் அதில் திராவிடம் என்ற வார்த்தையை புகுத்தியது. Original-தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு செய்தது தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடர்நல் திருநாடும்


kantharvan
ஜன 07, 2025 10:04

தேசிய கீதத்தில் இருக்குற திராவிட வார்த்தையும் தவறா ? அப்போ யாரு கஸ்மாலம் ??? தாகூரா ?? இல்லை நீயா?? நிச்சயம் தாகூர் இல்லை அப்போ வேற யாரு??


ghee
ஜன 06, 2025 15:19

இது நமது முதல்வருக்கு அழகல்ல..


SIVA
ஜன 06, 2025 15:11

திராவிட இனமே உன்னுடைய கன்னட திராவிடன் காவிரி நீர் தர மாட்டேன் என்கிறான் , மேலும் அணை கட்டுவேன் எனகிறான் , கேரளா திராவிடன் அவன் ஊரு மருத்துவ கழிவை இங்க வந்து கொடுக்கின்றான் , அந்த கேரளா திராவிட மருத்துவ கழிவை தமிழ் திராவிடனாகிய நீங்க உன் வீட்டுக்கு எடுத்து செல் , என் தமிழகம் கஷ்டப்படுகிறது .....


S.Martin Manoj
ஜன 06, 2025 14:54

பாராளுமன்றத்திற்கு என்ன மரபு உள்ளதோ அதை ஒன்றிய அரசு கடைபிடிக்கப்பட்டது அதுபோல ஒவ்வொரு மாநிலத்தின் சட்ட சபைக்கு உள்ள மரபுகளை அந்தந்த மாநிலங்கள் கடைபிடிக்கிறது இதில் என்ன தவறு


Thiru
ஜன 06, 2025 14:28

வருஷம் வருஷம் இதே வேல தான் இவருக்கு. தமிழ் நாடு விழா மரபணு இருக்கு. அத பின்பற்றுவது கிடையாது.


Subramanian N
ஜன 06, 2025 15:11

கொத்தடிமையே செய்தியை ஒழுங்காக படி


தமிழன்
ஜன 07, 2025 21:37

ஊழல் இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான் மரபு. அதை திமுக பின்பற்றுகிறதா


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
ஜன 06, 2025 14:17

ஒரு உப்பு சப்பில்லாத பதவியை வைத்துக்கொண்டு இவர் படுத்தும் பாடு அய்யயோ தாங்களடா சாமி.


veera
ஜன 06, 2025 14:04

தமிழ் தாய் வாழ்த்தை பிழை இல்லாமல் பாடினால் கொத்தடிமை களுக்கு 200 ரூபாய் இலவசம்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 06, 2025 14:53

எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?? தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை இணையத்தில் டவுன்லோட் செய்து, பல கட்சிக்காரர்களும், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் மொபைலில் சேவ் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சி, பள்ளி நிகழ்ச்சிகளில் இதைத்தான் போடுகிறார்கள். இப்போ வந்து நீங்க என்னன்னா, வாழ்த்தைப் பாடு, ஆடு ன்னு தமாஷ் பண்ணிக்கிட்டிருக்கீங்க


T.sthivinayagam
ஜன 06, 2025 13:59

இதே நிலமை நீடித்தால் 2026 அல்ல 2046லும் பாஜக வாக்கு சதவீதம் உயர்வது சிரமம்


sridhar
ஜன 06, 2025 14:49

ஏன் , தமிழகத்தில் தேச விரோதிகள் அதிகமா .


என்றும் இந்தியன்
ஜன 06, 2025 16:29

இது தமிழகமே இல்லை இது டாஸ்மாக்கினாடு "குடி" மக்கள் நிறைந்த மாநிலம். அதனால் தான் 1967 காமராஜர் ஆட்சிக்கு பிறகு முதல்வர் தெலுங்கு கன்னடம் ஸ்ரீலங்கா மலையாளி இன்று வரை. ஏன் 8.2 கோடி மக்களில் ஒரு தமிழன் இல்லை தமிழகத்தை ஆள்வதற்கு. சினிமாவிலும் இதே கதி தான் அதேபோலத்தான் இந்த சட்டசபை முதல்வர் பதவியிலும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை