உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன்? கைதான மென்பொறியாளர் வாக்குமூலம்

 வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன்? கைதான மென்பொறியாளர் வாக்குமூலம்

சென்னை: 'முந்தைய தி.மு.க., அரசின் மீது இருந்த வெறுப்பின் காரணமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்' என, கைதான மென்பொறியாளர் சரத் சுப்பிரமணியன் சங்கர், 37, வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த, 2023 - 2025ம் ஆ ண்டு வரை, டி.ஜி.பி., அலுவலகம், விமான நிலையம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு, 1,500 முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த, திருநெல்வேலி மாவட்டம், அம்பா சமுத்திரத்தை சேர்ந்த சரத் சுப்பிரமணியன் சங்கர் என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்: கடந்த, தி.மு.க., ஆட்சியில், அரசு நடத்திய தேர்வில் பங்கேற்று, வேலைக்கு முயற்சி செய்தேன். எனக்கு அண்ணா பல்கலையில் வேலை கிடைத்து விடும் என, நம்பினேன். எனக்கு தெரிந்த நபர் ஒருவர், பணம் கொடுத்து, அங்கு பேராசிரியராக வேலைக்கு சேர்த்து விடுவதாகக் கூறினார். இதனால், தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு ஏற்பட்டது. கடந்த, 2023ம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், மென்பொறியாளராக சேர்ந்தேன். மனைவி பிரிந்து சென்ற சோகம், அரசு வேலை கிடைக்காத விரக்தி, தி.மு.க., அரசின் மீது இருந்த வெறுப்பின் காரணமாகவும், பொழுது போக்கிற்காகவும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தேன். வே லை கிடைக்காததால், அண்ணா பல்கலைக்கு, 50க்கும் மேற்பட்ட முறை, தி.மு.க., அரசுக்கு ஆதரவாக பேசி வந்ததால், நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Chandhra Mouleeswaran MK
ஜூலை 24, 2026 20:51

அடப்பாவி ச்சும்மா வெடிக்குண்டு மிரட்டல் விடுத்தா தீர்ர்ர்ர்ர்ர்ர்ராவிடய அரசு பயப்படுமா? அதுக்குப் பதிலாக வெள்ளை ரவை எடுத்து ரவா கேழ்சரி கிண்டிக் கொடுத்திருக்கலாம் தம்புடு தமிழ் நாடு உனக்கு கோவில் கட்டிக் கும்பிட்டிருக்கும் "தப்புப் பண்ணிட்டியே கண்ணு தப்புப் பண்ணீட்டே


Sundaram Sabesan Trichy
ஜூலை 24, 2026 10:24

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை நிர்வாண நகரம் என்று ஒரு கதை எழுதினார். அந்த கதை போல இருக்கிறது இந்த வெடுகுண்டு மிரட்டல் ஆசாமி் கதை !!


புதிய வீடியோ