உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் ரஜினியுடன் கமல் சந்திப்பு ஏன்?

நடிகர் ரஜினியுடன் கமல் சந்திப்பு ஏன்?

சென்னை: ராஜ்யசபா எம்.பி.,யாக பதவியேற்க உள்ள நிலையில், நடிகர் ரஜினியை, அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் நேற்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சந்தித்து பேசினார்.கடந்த ஜூன் மாதம் நடந்த ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., ஆதரவுடன், கமல் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். வரும் 25ல், ராஜ்யசபா எம்.பி.,யாக கமல் பதவி ஏற்க இருக்கிறார்.இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு கமல் சென்றார். எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை, ரஜினியிடம் வழங்கி, அவரிடம் வாழ்த்து பெற்றார்.இதுகுறித்து கமல், 'புதிய பயணத்தை நண்பர் ரஜினியுடன் பகிர்ந்தேன், மகிழ்கிறேன்' என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை