உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எனக்கு தெரியாமல் ஏன் செய்தீர்கள்; ஸ்டாலின் கோபம்

எனக்கு தெரியாமல் ஏன் செய்தீர்கள்; ஸ்டாலின் கோபம்

- நமது சிறப்பு நிருபர் -த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xgrh7flx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசியதன் பின்னணியில், ஸ்டாலினின் உத்தரவு எதுவுமே இல்லை. இந்த தகவல் அறிந்து, கோபம் அடைந்த ஸ்டாலின், அவசர ஆலோசனை நடத்தினார். அதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்ட நெருங்கிய வட்டத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.அப்போது, 'தி.மு.க., - அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியையே வேண்டாம் என்று கூறினேன். ஆனால், நீங்களாக ஒரு முடிவை எடுத்ததால், கட்சிக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது. இப்போது, த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் எனக்கு தெரியாமல் ஏன் பேசினீர்கள்? பழனிசாமி முதல்வராக இருந்த போதே, குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர, நான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.'தற்போது, செந்தில் பாலாஜி யார் உத்தரவில் இதை செய்தார் என்று எனக்கு தெரியும். இது போன்ற குறுக்கு யோசனையை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். பழனிசாமியை முதல்வர் ஆக்குவதும், த.வெ.க., ஆட்சியை கவிழ்ப்பதும் நம் வேலையில்லை' என, ஸ்டாலின் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.இதற்கிடையில், ஸ்டாலின் உதவியாளர் தினேஷ் உள்ளிட்டோருக்கு, திரைமறைவில் நடக்கும் பேரம் தெரிந்திருக்கிறது. அதனால் தான், 'இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி கவிழும்' என ஸ்டாலினை பேச வைத்துள்ளனர் என்கிறது கட்சி வட்டாரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 87 )

JeevaKiran
ஜூலை 09, 2026 12:26

ஏன் , இதையெல்லாம் தவேக வே செய்திருக்காதா? திமுக மீது மக்களுக்கு வெறுப்பு வரவேண்டும் என்று விசிலடிச்சான் குஞ்சுகள் நடத்திய நாடகமாகவே தோன்றுகிறது


SATHIK BASHA
ஜூலை 07, 2026 20:49

கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவன் கேனயனா? இல்லை தற்குறியா ? கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்ப 71 தவெக எம்எல்ஏக்களை வாங்க வேண்டும் அல்லது நமது தற்போதைய முதல்வர் ஸ்டைலில் 71 பேரை ராஜினாமா செய்யச் சொன்னால் தான் திமுகவுக்கு பலன் கிடைக்கும். இதெல்லாம் நடக்கிற காரியமா ? தற்குறிகளின் பொய்க் குற்றச்சாட்டை நம்புவதும், அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவதும் மிக மிகக் கேவலமாக உள்ளது.


பைரவன்
ஜூலை 05, 2026 12:56

மவனே உதவாநிதி நா அடிக்கிற மாதிரி நடிப்பேன். நீ அழுகிற மாதிரி நடி. ஏன்னா இன்னும் இந்த தமிழ் நாட்டில நம்மள நல்லவனுங்கன்னு நம்பி ஓட்டுப் போட ஒரு கூட்டம் இருக்கு.


RRY
ஜூலை 05, 2026 11:13

புடிங்க ஓடிட போவுது


Sridhar
ஜூலை 04, 2026 19:26

க்காலி ஆறு மாசத்துல ஆட்சி கவிழும்னு எப்படி டா சொன்ன? இப்போ தப்பிக்க பாக்குறயா? நீ லண்டனே போனாலும் உன்னை விடமாட்டோம்.


என்றும் இந்தியன்
ஜூலை 04, 2026 19:14

கேட்கிறவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடியுது என்பார்களாம் அந்த மாதிரி இருக்கின்றது ஸ்டாலின் கோபம். என்னவோ ஒண்ணுமே நடக்கவில்லை என்று பினாத்துவது போல இருக்கின்றது சுடலை மாயாண்டி ஜோசப் கானின் கோபம்


Ganapathi Amir
ஜூலை 04, 2026 19:06

இன்னும் ஆறு மாதத்துக்குள் தேர்தல் வரப்போகிறது ... எல்லோரும் தயாராக இருங்கள்... என்று எதுவுமே தெரியாமல்தான் பேசினாரா...? ஆட்சியை இழந்த வெறியில் எதுவும் செய்வார்கள்... மக்கள் கவனமாக இருக்க வேண்டும் ...


வாய்மையே வெல்லும்
ஜூலை 04, 2026 18:29

ஓநாய்க்கே திருடுவது எப்படி என பாடம் எடுக்கும் அறிவற்ற கூட்டம் அதர்மம் பற்றி பேசுவது சற்று நகைப்பை தருது. செவாலியே சிவாஜி நடிப்பு தோற்று விட்டது .


PATTALI
ஜூலை 04, 2026 17:46

வந்தாரை வாழவைக்கும் தமிழ் மக்களை முட்டாள்களாகவும், சுயநலவாதிகளாகவும், குடிகாரர்களாகவும், பேராசைக்காரர்களாகவும், பொறாமைபிடித்தவர்களாகவும், வன்முறையாளர்களாகவும் மாற்றிய திராவிட ஆட்சிக்கும், திராவிட கட்சிகளுக்கும், திராவிட சித்தாந்தகளுக்கும் முழுமையாக முடிவுரை எழுதுவது மட்டுமே எதிர்காலத்தில் தமிழையும், தமிழரையும், தமிழ் மண்ணையும் காப்பாற்ற இருக்கும் ஒரேவழி.


R.Subramanian
ஜூலை 04, 2026 16:00

தெரியாது என்பதை நான் அப்படியே நம்பிட்டேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை