காஷ்மீருக்கு மாநில உரிமை இனியும் ஏன் தயக்கம்?
காஷ்மீரில் மாநில அந்தஸ்து வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாநில அந்தஸ்து தருவோம் என்று மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி தந்தது. காஷ்மீரை, மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேச அந்தஸ்தாக குறைப்பதை எதிர்த்து வழக்கு போடப்பட்டது.நீதிபதிகள் அந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர். அந்த விசாரணை துவங்கும் போது அரசு வழக்கறிஞர், 'அதை விசாரிக்காதீர்கள், நாங்களே மாநில அந்தஸ்தை விரைவில் தந்து விடுவோம்' என்றார். ஆனால் தீர்ப்பு வந்திருந்தால், மாநில அந்தஸ்தை யூனியன் பிரதேச அந்தஸ்தாக குறைத்தது செல்லாது என்றே சொல்லப்பட்டிருக்கும். அதற்குள் தேர்தல் நடந்து விட்டது. இனியும் மாநில அந்தஸ்தை தருவதற்கு மத்திய அரசு ஏன் தயங்குகிறது?-ப.சிதம்பரம்,முன்னாள் அமைச்சர்