உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி

முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டவிசாரணை ஆணையம் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை தான் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், முதல்வருக்கு ஏன் இத்தனை பதற்றம்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடிதம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பாஜ தலைவர் நட்டா உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து இருந்தார். இக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜ எம்பி ஹேமமாலினி உள்ளிட்டோர் இடம்பெற்றனர். இதனிடையே, அனுராக் தாக்கூர், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ed86s5va&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அரசியல் ஆதாயம்

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ''மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!'' என விமர்சித்து இருந்தார்.

என்ன தகுதி

இது தொடர்பாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சியில், திமுக சாராய வியாபாரிகள் விற்ற கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோனதே. அவர்கள் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றீர்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? கொடுந்துயரத்திற்கு ஆளான வேங்கைவயல் மக்களைச் சென்று சந்தித்தீர்களா?தங்கள் விவசாய நிலங்களைப் பாதுகாக்கப் போராடிய திருவண்ணாமலை மேல்மா விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டீர்கள். அவர்கள் தலைமைச் செயலகம் வந்த போது, சந்திக்க மறுத்து காவல்துறையினரை வைத்து கைது செய்தது ஏன்? தென்மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அல்லல்பட்டபோது, அவர்களுக்கு ஆறுதலாக இல்லாமல், இண்டிக் கூட்டணி கூட்டம்தான் முக்கியம் என டில்லிக்குப் போனது ஏன்?ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி “Not reachable” மோடில் இருக்கும் உங்களுக்கு, பாஜவை விமர்சிக்கவோ, கேள்விகள் கேட்கவோ என்ன தகுதி இருக்கிறது?கட்சி தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரை ஒரு தேர்தலைக் கூட தனித்து நின்று எதிர்கொள்ளத் துப்பு இல்லாத கட்சி திமுக. உங்கள் கோழைத்தனமான வரலாறு இப்படி இருக்கையில், வீண் சினிமா வசனங்கள் ஏன்? கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் தான் விசாரணை ஆணையம் அமைத்துவிட்டீர்களே. எப்படி இருந்தாலும், இந்த விசாரணை ஆணையம் அமைத்தது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை தான் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம், “Not Reachable” முதல்வர் அவர்களே? இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

மணிமுருகன்
அக் 04, 2025 00:08

அருமை


M Ramachandran
அக் 03, 2025 23:39

உறுத்தல் காரணம். உண்மைகள் கண்ட அறிய பட்டால் பட்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருமே என்ற பதட்டம் காரணம்.


ramesh
அக் 03, 2025 20:29

முதல்வர் நிதானமாக இருப்பதால் தான் இது வரையில் விஜய் ஜெயிலுக்கு செல்லாமல் இருக்கிறார் . 1 பெண் இறந்ததற்கே அல்லு அர்ஜுன் ஜெயிலுக்குள் போனார். இங்கே 41 பேர் இறந்து இருக்கிறார்கள் . இனிமேலும் சினிமா வசனம் பேசினால் உள்ளே தான் இருப்பார்


SUBBU,MADURAI
அக் 03, 2025 21:47

அறிவாலயத்துல அடைப்பு எடுக்குற பயபுள்ளைக்கு பாருங்க எம்புட்டு அறிவு?


vivek
அக் 03, 2025 22:17

ரமேஷு மெத்த படித்த கொத்தடிமை


T.sthivinayagam
அக் 04, 2025 03:29

தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றாலே அட்டை பூச்சிகளுக்கு ஒரு உதறல் வருது


ramesh
அக் 04, 2025 20:52

என்ன சுப்பு ,விவேக் நீங்க எல்லாம் ஜோசப் விஜய், பாவாடை என்று சொல்லி திரிந்த கூட்டம் தானே .இப்போ என்ன விஜய் மீது திடீர் பாசம் .


Barakat Ali
அக் 03, 2025 20:17

அண்ணா பல்கலை விவகாரம் போல இதை அமுக்கிவிட முடியாது என்கிற பதைபதைப்பு துக்ளக்காருக்கு .....


Manyam
அக் 03, 2025 18:57

அண்ணாமலை உங்களை விட அனுபவத்திலும் வயதிலும் முதிர்ந்த திரு ஸ்டாலின் அவர்களை திரும்ப திரும்ப குற்றவாளி போல் கேள்வி எழுப்புவதால் என் போன்ற எந்த கட்சியும் சார்ந்திராத சாதாரண மக்கள் அவர்தான் குற்றவாளி என்று நம்ப போவதில்லை. பழி பாவத்துக்கு அஞ்சும் எவரும் பதறத்தான் செய்வார்கள். நாம் அரசை சாடுவதால் உண்மையான குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும் இயக்கம் அதற்கான நேரம், எத்தனை தொண்டர்கள் வருவார்கள் என்ற கணிப்பு, அவர்களுக்கு குறைந்தபட்ச வசதிகள் இவற்றில் கருத்தில் கொண்டு அந்த இயக்கம் முன்னரே செயல்பட்டிருக்க வேண்டும். மேலும் இவற்றை ஏற்பாடு செய்பவர்கள் நிகழ்ச்சி தாமதம் ஆகும் மற்றும் ரோடு ஷோ நடத்த போகிறோம் என்று தகுந்த கால அவகாசங்களுடன் முன்பே அரசின் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் அளித்து பாதுகாப்பை அதிக படுத்த கேட்டிருக்க வேண்டும். தவறுகள் ஒருபக்கம் இருக்க ஆளும் அரசை குற்றம் சுமத்தல் மிகவும் தவறானதாக தெரிகிறது.


Narayanan Muthu
அக் 03, 2025 19:16

அதெல்லாம் அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.விளம்பர அரசியல் செய்யும் அறிவிலிகளுக்கு எதையும் சிந்தித்து செயல்பட எங்கே தெரிய போகிறது.


Raj S
அக் 03, 2025 20:17

நீங்க எழுதி இருக்கறதுலயே தெரியுது, நீங்க திருடர்கள் முன்னேற்ற கழக அடிவருடின்னு... எந்த கட்சியும் சார்ந்திராதன்னு ஒரு முட்டு... அதுக்கு ஒத்து ஊத, உலகமகா உத்தமர் வேற...


Sakthi,sivagangai
அக் 03, 2025 20:17

முதல்வரை இப்படி இழிவு படுத்துவது நல்லதல்ல உமக்கேன் அவர் மீது இவ்வளவு காண்டு...


murugan
அக் 03, 2025 18:17

30 ஆயிரம் கோடி யார் அப்பன் வீட்டு பணம். ஆட்டை போட்டது உன் தலைமை குடும்பம். பொது வாழ்க்கையில் பேச,எந்த பதவியிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உமக்கு அண்ணாமலை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.


Narayanan Muthu
அக் 03, 2025 19:18

ஆமாம் அண்ணாமலை குறித்து பேச யாருக்கும் அருகதை இல்லைதான்.


Saai Sundharamurthy AVK
அக் 03, 2025 18:17

ஸ்டாலின் அமைத்த விசாரணை ஆணையத்தை கலைத்து விட்டு அண்ணாமலை ஐ.பி.எஸ் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். அப்போது தான் இந்த சதி வேலைகளை செய்தது யார் என்று தெரிய வரும்.


Narayanan Muthu
அக் 03, 2025 19:23

ஆணையத்திற்கு தலைமை தாங்க தகுதி உள்ளவர் யார் என்று விசாரணை ஆணையம் அமைப்போருக்கு தெரியும். இன்று உயர்நீதிமன்றம் கூட அஸ்ரா கார்க் தலைமையில்தான் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.


Madras Madra
அக் 03, 2025 17:55

பதில் சொல்லுங்க முதல்வர் அவர்களே மக்கள் மறந்தாலும் அண்ணாமலை மறப்பதில்லை உங்கள் தகிடுதத்தங்களை சரியான கேள்விகளை கேட்டுள்ளார் ஆனால் உங்களால் பதில் சொல்ல முடியாது ஏன் என்றால் உங்கள் அரசியல் நாடகங்கள் அண்ணாமலையிடம் செல்லாது


Narayanan Muthu
அக் 03, 2025 19:24

பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


கூத்தாடி வாக்கியம்
அக் 03, 2025 17:53

நல்ல வேலை விஜய் வெளியேறினார் இல்லை என்றால் இந்த கொலை கார கூட்டம் அவரை முடித்து விட்டிருக்கும் .


ramesh
அக் 03, 2025 20:31

என்னப்பூ சொல்லுறீங்க அணில்களிடம் இருந்து தப்பி ஓடினாரா விஜய்


NACHI
அக் 03, 2025 17:50

முதல்வரே அது போன வருடம்.....நாங்க சொன்னது இந்த வாரம் கருர் பிரச்னை ...தத்தி