உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி.க., காங்கிரசுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? அன்புமணி சந்தேகம்

வி.சி.க., காங்கிரசுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? அன்புமணி சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வி.சி.க., காங்கிரசுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னை, சோழிங்கநல்லூரில், அன்புமணி தலைமையில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது அன்புமணி பேசியதாவது: வன்னி அரசு ரவிக்குமார், சிந்தனை செல்வனுக்கு ஏன் ராமதாஸ் மீது திடீர் அன்பு ஏற்பட்டுள்ளது. செல்வப் பெருந்தகை ராமதாஸை சந்திப்பது, ராமதாஸை வி.சி.க.,வினர் புகழ்வது தி.மு.க.,வின் சூழ்ச்சி. ராமதாஸ் குறித்து திடீரென வி.சி.க., தலைவர் திருமாவளவன் புகழ்ந்து பேசுவது ஏன்? தி.மு.க., தான் பா.ம.க.,விற்கு ஒரே எதிரி, தி.மு.க.,விற்கு எதிராக பா.ம.க., சமூக ஊடகப் பிரிவு தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும். வி.சி.க., காங்கிரசுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? 5 வருடங்களாக ராமதாஸ், ராமதாஸாக இல்லை. அய்யா, அய்யாவாக இருந்து எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். ராமதாசிற்கு பிறகு தான் பா.ம.க.,விற்கு தலைவராக வேண்டும் என்று நான் அப்போது முடிவெடுத்து இருந்தேன். ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார். அய்யா, அய்யாவாக இருந்து எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். 3 பேர் தங்கள் சுய லாபத்திற்காக ராமதாஸை பயன்படுத்திக் கொள்கின்றனர். ராமதாசிற்கு பிறகு தான் பா.ம.க.,விற்கு தலைவராக வேண்டும் என்று நான் அப்போது முடிவெடுத்து இருந்தேன். இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஜூன் 28, 2025 19:20

உங்க அபாவுக்கே உங்க மீது பாசமில்லெ. ஏன்?


முருகன்
ஜூன் 28, 2025 19:19

உங்கள் தந்தை இல்லை என்றால் நீங்கள் இல்லை அவர் முதுகில் குத்த பார்ப்பது ஏன்


Arjun
ஜூன் 28, 2025 17:49

அன்பு மணி அரை வேக்காடு அல்ல அவர் சரியாகத்தான் சொல்லியுள்ளார். முதலாளிக்கு தோல்வி பயம் அதனால் தனது எடுபிடிகளை பேச சொல்லியிருப்பார் . அதிமுக,பிஜேபி கூட்டணி என்று சொன்னதலிருந்தே .திமுக கூட்டணிக்கு ஒரு உதறல் இருக்கதான் செய்கிறது.


Svs Yaadum oore
ஜூன் 28, 2025 17:43

திமுகக்கூட ராமதாசு கூட்டணிவைக்க போவது உறுதியாம் ....அப்படியே வைக்கட்டும் ....எவன் வேண்டாம்னு தடுத்தது ??...கூட்டணி வைத்து உள்ளடி வேலை குடைச்சல் கொடுப்பதில் கைதேர்ந்தவர்கள் ....அதுவும் இந்த ரெண்டு கட்சிகளும் கூட்டணி வைத்தால் அதுதான் உள்ளடி வேலையின் உச்சம் ....இதே தைலாபுரத்தார் சில மாதம் முன்பு விடியலை பற்றி என்ன அடிமட்டம் வரை சென்று பேசினார் என்பது தெரியும் ..


madhesh varan
ஜூன் 28, 2025 15:45

பாமக வில் நடக்கும் பிரச்சனைக்கும் திமுகவுக்கும் எந்தவிதமான சம்பந்தமில்லை னு ராமதாசு சொன்னதை போடாதது ஏன் ? அன்புமணி போன்ற அரைவேக்காடு பசங்களுக்கு புத்திமதிசொல்லவேண்டியது யாரு ? திமுகக்கூட ராமதாசு கூட்டணிவைக்க போவது உறுதி, திருமாவளவன் 6 சீட்டு வாங்கி திமுக வெற்றிக்கு உதவுவதும் உறுதி, பிஜேபி அதிமுக பரிதாபமாக தொப்பது உறுதி,


ஆரூர் ரங்
ஜூன் 28, 2025 17:11

திமுக தான் தனது ஒரே பிரதான நிரந்தர எதிரி என்று ராமதாஸ் தனது கட்சியை துவக்கியபோது சொன்னது நினைவிலுள்ளது.


Anand
ஜூன் 28, 2025 15:30

அவர்தான் கடேசி மூச்சு அது இதுனு பினாத்திக்கிட்டு இருக்கிறாரே, ஒருவேளை கடேசியாக பார்த்துவிட்டு வாருங்கள் என கூட்டாளிங்க யாராவது சொல்லி அனுப்பியிருக்கலாம்...


சமீபத்திய செய்தி