உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் செல்ல விஜய் அனுமதி வாங்குவது எதற்கு: அண்ணாமலை கேள்வி

கரூர் செல்ல விஜய் அனுமதி வாங்குவது எதற்கு: அண்ணாமலை கேள்வி

கரூர்: '' தவெக தலைவர் விஜய் கரூருக்கு வருவதற்கு அனுமதி எதற்கு? வேண்டுமானாலும் வரலாமே. தலைவர்கள் தினமும் வருகின்றனர்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அரசியல் செய்யவில்லை

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்குள் எல்லோரும் எந்த இடத்துக்கும் செல்வதற்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இதனை பெரிதுபடுத்திப் பார்க்கின்றனர். அனுமதி கொடுங்கள். நாங்கள் போக வேண்டும் என்கின்றனர். தகவல் கொடுத்துவிட்டு தொண்டர்களிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம். டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தை விட்டுக்கொடுக்க முடியாது. நமது தாய்நாட்டை விட்டுக்கொடுக்க முடியாது. எங்கே வேண்டுமானாலும் எந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் எந்த பகுதிக்கும் செல்லலாம். இந்த விஷயத்தை நான் அரசியல் செய்யவில்லை. தைரியத்தோடு போகலாம். அரசியல் தலைவர்கள் போவதற்கு என்ன? ஒரு நாளுக்கு முன்னர் தகவல் சொல்லிவிட்டு போகலாம். அவர்கள் பாதுகாப்பை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். போலீசார் அவர்களையும் பாதுகாப்பார்கள். விஜய் கரூருக்கு வருவதற்கு அனுமதி எதற்கு? வேண்டுமானாலும் வரலாமே. தலைவர்கள் தினமும் வருகிறார்கள். முதல்வர் முதல் கமல் வரை வந்துள்ளனர். தேஜ எம்பிக்கள் குழுவினர் வந்துள்ளனர். கரூருக்கு எல்லோரும் வரட்டும். தனிப்பட்ட முறையில், அஞ்சலி செலுத்த வேண்டுமானாலும் வரட்டும். இந்த நேரத்தில் கரூர் மக்களை விட்டுக்கொடுக்க முடியாது.

வேண்டுகோள்

விஜய் கரூர் பயணம் குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து கவனிக்கவில்லை. கரூர்காரனாக, நான் சொல்வது மண்ணின் மைந்தனாக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வரலாம். புதிய நடைமுறை ஆரம்பிக்க வேண்டாம். கரூர் போக பயமாக இருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது எனக்கூறுவது தமிழகத்தை நாமே தாழ்த்தி கொண்டு போவது ஆகிவிடும். எனது பேச்சை திரிக்க வேண்டாம். கரூர் செல்வதற்கு காவல்துறை எதற்கு இவ்வளவு கட்டுப்பாடு விதிக்கிறார்கள் என தெரியவில்லை.

இன்னும் காலம்

அதிமுக தவெக கூட்டணி குறித்த பேச விரும்பவில்லை. யார் வருவார்கள், யார் செல்வார்கள் என தெரியாது எது நடந்தாலும் தமிழகத்துக்கு நல்லது நடக்கட்டும். எனது நிலைப்பாடு தெரியும். பொறுத்திருப்போம் 2026 தேர்தலுக்கு இன்னும் தூரம் உள்ளது. யார் எப்படி வருவார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

வெளிப்படை இல்லை

சென்னையில் திருமாவளவன் கட்சித் தொண்டர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியுமா? ஒரு இடத்தில் அவரின் தொண்டர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அவர் தான் பொறுப்பு. தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு வரும் போது அவர்களே தாக்கினால் எப்படி ? திருமாவளவன் நடந்து கொண்ட விதம் தவறு. இதை சொன்னால், எங்களையே திட்டுகிறார்கள். உண்மையைத் தான் கூறுகிறோம். கட்சி தொண்டர்கள் செய்த தவறுக்கு காவல்துறை ஏன் முட்டுக் கொடுக்கிறது எனத் தெரியவில்லை. வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். கோவையில் உறுதிமொழி எடுக்கும் முதல்வர் நடவடிக்கை எடுக்க உத்தரவு போடலாமே. கூட்டணி கட்சி தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனறால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.ஆதவ் அர்ஜூனாவை ஏன் திருமாவளவன் கட்சியை விட்டு அனுப்பினார்? இன்னும் ஏன் நட்புடன் இருக்கிறார் என தெரியவில்லை. அவர் வெளிப்படையாக நடக்க வேண்டும். வெளிப்படையாக தெரியவில்லை. அவரது ஓட்டுகள் வேறு கட்சிக்கு செல்கிறது என்ற யூகத்தில் பாஜவை விமர்சிக்கிறார். அவரது கட்சி தொண்டர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திருமாவளவனுக்கு உள்ளது. எங்களுக்கு இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Easwar Kamal
அக் 09, 2025 21:31

அண்ணாமலை நீங்கள் போனால் ஒரு 10 பேர் பின்னால் வருவானுங்க. அதனால உங்களுக்கு பந்தோபஸ்து தேவை இல்லை. அனா விஜய் போனா 1000 பேர் பின்னால் போகிறார்கள். எதற்கு இன்னும் மக்கள் இறக்க வேண்டுமா ? அதற்குத்தான் இந்த அனுமதி கேப்பது . ஆளும்கட்சி ஏதாவது சிக்காத என்று பார்க்கிறார்கள். எதற்கு வம்பு


Priyan Vadanad
அக் 09, 2025 20:56

இந்த கேள்வியை விஜயிடம் கேட்டு பதில் பெற்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு எதற்காக புலம்பவேண்டும்?


vivek
அக் 09, 2025 21:17

இப்போ உம்மிடம் யாரு கருத்து கேட்டா


Haja Kuthubdeen
அக் 09, 2025 20:55

மற்றவர்கள் வருவதற்கும் விஜய் வருவதற்கும் ரொம்பவே வித்தியாசம் உண்டு..ஏற்கனவே விஜய் வந்துதான் கட்டுக்கடங்காத கூட்டம்.அவர் வந்தால் இறந்தவர்கள் நினைவு பின் தள்ளப்பட்டு அவரை பார்க்க தள்ளுமுள்ளு நிச்சயமா நடக்கும்.பழி மீண்டும் விஜய் மீதே வரும்.அனுமதி பெற்று வந்தால் அவரை குறை சொல்ல முடியாதே....அதனால்தான் அனுமதி கேட்டு வருகிறார்...


Vasan
அக் 09, 2025 20:33

விஜய் அனுமதி கேட்பார். அரசு அனுமதிக்காது. அரசு என்னை அனுமதிக்கவில்லை, அதனால் என்னால் கரூர் போகமுடியவில்லை, ஆறுதல் கூற முடியவில்லை என்று கூறிக்கொள்ளலாம்.


Rajkumar Ramamoorthy
அக் 09, 2025 20:07

கரெக்ட், இன்னும் ஹீரோவாவே இருக்கார் .


T.sthivinayagam
அக் 09, 2025 20:04

மேலிடத்து அஸ்ன்மென்ட் சரியா செய்ற ஒரே ஆள் நீங்கள் மட்டும் தான் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 09, 2025 20:01

தேவையில்லை தான். வராமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து தாமதிக்கிறார். பழியை அடுத்தவன் மேலே போடலாம் பாரு. அதனால் தான்


முருகன்
அக் 09, 2025 19:45

பாதிக்கப்பட்டால் தமிழக அரசு மீது குறை கூறாமல் இருக்க முடியுமா உங்களால்


Mariadoss E
அக் 09, 2025 19:35

உருப்படியான கேள்வி. ஏதாவது பிரச்சினை ஆனா யார் மீதாவது மேல பலிபோட வேண்டுமில்லையா? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா


திகழ்ஓவியன்
அக் 09, 2025 19:22

41 பேர் இறந்து விட்டார்கள் ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாத தலைவன் தன உயிர் காத்துக்கொள்ள ஓடிய தலைவன் இவர் தான் , ஆமாம் இவர் மக்களை அழைத்து வோட்டு பெற கூப்பிடுவாராம் , அவருக்கு ஒரு ஆளுக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கணுமா , ஏன் எல்லா கட்சி போல 1000 பௌன்சர் ரெடி மற்ற கட்சி தொண்டர் படை , இதை ஏதும் செய்யாமல் தண்ணீர் சோறு கொடுக்காமல் 8 மணி காக்க வைத்த சைக்கோ அரசை குற்றம் சாட்டுவாரா என்ன


சமீபத்திய செய்தி