உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரெட் அலர்ட் எச்சரிக்கை ஏன்? வானிலை மையம் சொல்வதைக் கேளுங்க!

ரெட் அலர்ட் எச்சரிக்கை ஏன்? வானிலை மையம் சொல்வதைக் கேளுங்க!

சென்னை : சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதற்கான காரணத்தை வானிலை மையம் விளக்கி உள்ளது.வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அக்., 1 முதல் இன்று வரை பதிவான மழை அளவு 138 மி.மீ.,இயல்பாக பதிவாகும் அளவு 71 மி.மீ.,இது இயல்பை விட 94 சதவீதம் அதிகம்.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை கிழக்கு தென்கிழக்கே 280 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்கிறது. இது நாளை அதிகாலை சென்னைக்கு அருகே நெல்லூர் புதுச்சேரி இடையே கரையை கடக்கும். கரையை கடக்கும் போது 30 முதல் 35 கி.மீ., வரை பலத்த காற்று வீசும். இதனால் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகனமழை

கனமழையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும்.

கனமழை

வேலூர். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூரில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை முதல் பெய்யக்கூடும்.17 ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுச்சேரி, வேலூரில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வட தமிழக கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு பலத்த காற்று 1 18 ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.

ரெட் அலர்ட்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் உள்ளது. அது நகர்ந்து வருகிறது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால், அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் 20 செ.மீ., க்கு மேல் மழை பெய்யும் என அர்த்தமில்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிலக்கவில்லை. தரையை நோக்கி வருகிறது. காலை பொழுதுக்கும், பகல் பொழுதுக்கும் இடையில் வேறுபாடான சூழல் இருக்கும். நாளை கரை அருகே வரும்போது மழை பெய்யும் வாய்ப்பை கருத்தில் கொண்டும், ஏற்கனவே இருந்த மழை அளவை கருத்தில் கொண்டும் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாக தான் உள்ளது. ஆனால், புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ரெட் அலர்ட் என்றால் என்ன

மழை பெய்யும் அளவு அடிப்படையில் வானிலை மையம் ஒவ்வொரு நிறம் அடிப்படையில் எச்சரிக்கை செய்யும். இதன்படி, 1 செ.மீ., மேல் - லேசான மழை2 முதல் 6 செ.மீ., வரை - மிதமான மழை7 முதல் 11 செ.மீ., வரை - கனமழை ( மஞ்சள் அலர்ட்)12 முதல் 20 செ.மீ., வரை - மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்)21 செ.மீ.,க்கு மேல் - அதிகனமழை (ரெட் அலர்ட்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

KRISHNAN R
அக் 17, 2024 09:31

முன்னெச்சரிக்கை தவறில்லை. இம்முறை அரசு விழித்து கொண்டு இருந்தது. வானிலை எப்போதும் மாறலாம்


M Ramachandran
அக் 16, 2024 20:19

ராகுல் ஓரூ கோழை. இப்போது காங்கிரஸ் போர்வையில் திரியும் கும்பல் நேர்மைய்யற்ற ஒரு திருட்டு சாம்ராஜ்யத்தின் பிரிதி நிதிகள். தலைமையே சரியில்லை யென்றால் பழைய MGR நிறைய்ய படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஞாபகத்திற்கு வருகிறது.


Narayanan Sa
அக் 16, 2024 20:08

பாலசந்தந்திரன் வியாபாரிகளுக்கு கைங்கர்யம் செய்து விட்டார். எதோ விட்ட குறை தொட்ட குறை போல. ஒரே நாளில் அனைத்து சாமான்களையும் அதிக விலைக்கு விற்று விட்டார்கள். இதில் மாடல் அரசு மக்களுக்கு உண்மையான விலையில் பொருள்கள் கிடைக்கும் என்று தம்பட்டம் அடித்தார்கள்.


சம்பா
அக் 16, 2024 18:27

சலிப்பதட்டுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை