உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்களின் கல்வியை கெடுப்பது ஏன்: அண்ணாமலை கேள்வி

மாணவர்களின் கல்வியை கெடுப்பது ஏன்: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்துக் கெடுக்கிறீர்கள்?'' என திமுக அரசுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tx4ytvee&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், “ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை” என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன். உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை? ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.https://x.com/annamalai_k/status/1976223605550621003


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

திகழ்ஓவியன்
அக் 09, 2025 21:39

தூயவன் ஆட்சி செய்தால் தீயவனுக்குஎரியதான் செய்யும் எரியட்டும் மேலும் எரியட்டும் இது தான் திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டே இருப்போம்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 09, 2025 21:35

உபி, பீகார்லே இந்த பிரச்சினை எல்லாம் இல்லை


Subramaniyam N
அக் 09, 2025 20:41

What Annamalai says is absolutely correct. DMK govt spends only on advertisement and self glorification.


N S
அக் 09, 2025 19:32

படிக்காத மேதைகள் நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது, இவர்கள் படித்து என்ன கிழிக்க போகிறார்கள்.


திகழ்ஓவியன்
அக் 09, 2025 19:07

ஓசி சோறு இதை நீங்க UP bihar இல் சொல்லுங்க , இந்தியாவின் எடுகேஷன் index 26 % ஆனால் தமிழ்நாட்டின் education index 56.3 % இப்ப சொல்லுங்க யாரை யார் பொல்லொவ் பண்ணனும் என்று.


பேசும் தமிழன்
அக் 09, 2025 18:57

அவர்கள் படித்து நல்ல நிலைக்கு வந்து விட்டால்..... எங்களுக்கு யார் போஸ்டர் ஓட்டுவார்கள் ??


ஜெய்ஹிந்த்புரம்
அக் 09, 2025 21:33

பீகார்லே, உபியலே இருந்து இங்க வர்றவங்க


ராஜா
அக் 09, 2025 18:55

மணி அண்ணா சொன்னது போல் தலைகீழாக மாற்ற முயற்சி செய்தாலும் அது நடக்காது


Indian
அக் 09, 2025 18:38

கேட்டு , கேட்டு புளிச்சு போச்சு ....காது வலிக்குது ..


T.sthivinayagam
அக் 09, 2025 17:56

அண்ணாமலை சார் உங்களுக்கு கொடுக்கப்பட அஸ்ன்மென்ட் ஆப்ரேஷன் விஜய் சிபிஐ தானே இது என்ன புது அஸ்ன்மென்ட்டா என தொண்டர்கள் கேட்கிறார்கள்.


vivek
அக் 09, 2025 20:03

உனக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சிவநாயகத்திடம் கேட்கிறோம்


T.sthivinayagam
அக் 09, 2025 21:59

குட்டையில் உள்ள தாமரை அமைதியாக தான் இருக்கும் ஆனால் அங்குள்ள தவளைகள் கர்வம் கொண்டு கத்திக்கொண்டே இருக்குமாம்.


M Ramachandran
அக் 09, 2025 17:43

பின்னே நாங்க எப்படி அண்ணெகுடும்பத்தோலாடை பொழைப்பை நடத்துறது. எங்க குடிப்படைய்யக எப்படி பொழப்பு நடத்தருது. எவ்வளவு செலவு சென்ஜி வந்திருக்கோம் .


முக்கிய வீடியோ