திருமாவளவன் ஏன் கவலைப்பட வேண்டும்?
பா.ஜ., தேர்தல் அறிக்கை மக்களுக்கானதாக இருக்கும். எந்த கட்சியும் கொடுக்காத தேர்தல் அறிக்கையாக இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி, 200 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறும். எங்களுக்கு, 'விசில்' உடனே தேவையில்லை. ஏற்கனவே எங்களுடன் அ.ம.மு.க., இருக்கிறது. அக்கட்சியின் குக்கரில் விசில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஏன் கவலைப்பட வேண்டும். எங்கள் கூட்டணி முழு கூட்டணி. தி.மு.க., உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி தான் முழுமை அடையாமல் உள்ளது; உள்ளுக்குள் புழுங்கி கொண்டிருக்கிறது. என்றைக்கு வெடிக்கும் என தெரியவில்லை. பிரதமர் மோடி, தமிழகம் வந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. - தமிழிசை மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,