உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடநாடு வழக்கு குறித்து பழனிசாமியிடம் ஏன் விசாரிக்கக் கூடாது: ஐகோர்ட் கேள்வி

கோடநாடு வழக்கு குறித்து பழனிசாமியிடம் ஏன் விசாரிக்கக் கூடாது: ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், தற்போது முதல்வராக இல்லாத அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் ஏன் விசாரணை நடத்தக்கூடாது,'' என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

குற்றப்பத்திரிகை

மறைந்த ஜெயலலிதா ஓய்வெடுக்க செல்லும், நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்ரல் 23ம் தேதி, ஓம் பஹதுார் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும், ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக, சோலுார்மட்டம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி., முரளி ரம்பா, அ.தி.மு.க., நிர்வாகி சஜீவன், எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர், நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மறு ஆய்வு மனு

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து, மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த வழக்கில், முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க, நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின், சசிகலா, இளவரசி கட்டுப்பாட்டில் கோடநாடு எஸ்டேட் இருந்தது. அதனால், கொள்ளையின் போது காணாமல் போன பொருட்கள் குறித்து அவர்களுக்கு தான் தெரியும். புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளாமல், முக்கிய குற்றவாளிகளை விட்டு விட்டது. எனவே, நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பட்டியலில் விடுபட்டவர்களை விசாரிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதனை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பழனிசாமி தற்போது முதல்வராக இல்லாத போது எதிர்தரப்பு சாட்சியாக ஏன் அவரிடம் விசாரணை நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 15, 2024 21:15

வேங்கைவயல் விசாரணை என்ன ஆச்சு ???? ராமஜெயம் வழக்கு என்ன ஆச்சு ????


GMM
நவ 15, 2024 20:36

ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் அவர் மரணத்திற்கு பின் சசி, இளவரசி கட்டுப்பாட்டில் எஸ்டேட் எப்படி ஆவணம் /அரசு உத்தரவு இல்லாமல் இருக்க முடியும்.? அவருக்கு வாரிசு இல்லாத காரணத்தினால், அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது அபகரிப்பு குற்றம். அனைவரிடம் விசாரிக்க நீதிமன்றம் ஏன் தயங்குகிறது. ? வழக்கை வேறு மாநிலம், அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசும் இது போன்ற முக்கிய வழக்கை முறைப்படுத்த வேண்டும். நீதிமன்றம் விட்டு மத்திய அரசு விலகி செல்வது நல்லதல்ல .


அப்பாவி
நவ 15, 2024 20:35

வாணாங்க. சுப்ரீம் கோர்ட் தடை போட்டுரும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 15, 2024 20:11

கூட்டணி இல்லை ன்னா சொல்றீங்க? இப்போ பாருங்க என்று பாஜக வின் மிரட்டல்


பேசும் தமிழன்
நவ 15, 2024 22:07

பங்காளிகளுக்குள் கூட்டணி... அது தாங்க அதிமுக மற்றும் திமுக கூட்டணி உறுதியாகி விட்டது போல் தெரிகிறது.... அதனால் தான் கொடநாடு பெயர் அடிபடுகிறது.


K.n. Dhasarathan
நவ 15, 2024 20:03

நீலகிரி நீதிமன்றம், ஒருவரை மட்டும் விசாரிக்கணும், எடப்பாடி பழனிசாமி மற்றும் நால்வரையும் விசாரிக்கக்கூடாது என்று தீர்ப்பு அளித்தது மிகவும் துரதிஷ்டமானது எப்படி இது போல ஒரு வழக்கில் மேம்போக்காக தீர்ப்பு வந்தது, அதுவும் நாடே கவனமாக பார்த்துக்கொண்டிருக்கும் வழக்கில். ஐகோர்ட் இது போல வழக்குகளை உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவாக விசாரிக்க அனைத்தும் செய்ய வேண்டும், மக்களுக்கு கோர்ட் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும், கோர்ட்டுக்கு போனாலே வழக்கை தாமதப்படுத்தும் முயற்சி என்ற பெயரை மாற்ற வேண்டும். நடக்குமா ?


Murugesan
நவ 15, 2024 19:34

உயர் நீதிமன்றத்தை மூடுங்க, அயோக்கிய திராவிட அரசியல்வாதிங்கள் ஊழல் செய்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும் வளத்தையும் கொள்ளையடிக்க காரணமாக நீதிமன்றங்கள் தமிழகத்தின் சாபக்கேடு


ஆரூர் ரங்
நவ 15, 2024 19:20

அப்படியெல்லாம் வேண்டாம் எசமான். பங்காளிய பகையாளியாக்கிடாதீங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை