உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏன்: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏன்: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க.,வை தோற்கடிப்பதற்கும், விஜய் கிடைக்காத காரணத்தினாலும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்தது என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.சில நாட்களுக்கு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உறுதி செய்தார். முன்னதாக, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது இல்லத்தில் அமித்ஷா சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி இருந்தார்.இந்நிலையில், தனியார் டிவிக்கு குருமூர்த்தி அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னர் முடிவு செய்தது அமித்ஷாவின் திறமை. கூட்டணி அமைக்காமல் இருந்து இருந்தால், இந்த காலத்தில் கட்சி தேர்தலுக்கு தயார் செய்யப்பட்டு இருக்கும். தனியாக போட்டியிட்டால் , ஓட்டு சதவீதம் 12 சதவீதத்தில் இருந்து 24 சதவீதம் அதிகரிக்கும். ஆனால் தோற்போம். கட்சி வளரும். கட்சியை வளர்ப்பதா, தி.மு.க.,வை தோற்கடிப்பதா இது தான் பா.ஜ.,விற்கு உள்ள 'சாய்ஸ்'. ஆனால், அ.தி.மு.க., முன் உள்ள சாய்ஸ், யாருடன் சேர்ந்தால் தி.மு.க.,வை தோற்கடிப்போம் என்பது.விஜய் கிடைக்கவில்லை என்பதால் பா.ஜ., உடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும். இதனால், சட்டென்று முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது.விஜய் கிடைத்து இருந்தால் பா.ஜ.,விடம் அ.தி.மு.க., வந்திருக்காது. இதில் சந்தேகம் கிடையாது. அ.தி.மு.க.,வின் முதல் தேர்வு விஜய் ஆகத் தான் இருந்து இருக்கும். என்னிடம் ஆதாரம் கிடையாது. ஆனால், அப்படி தோன்றுகிறது.விஜய், தி.மு.க.,வை தாக்கினார். அ.தி.மு.க.,வை தாக்கவில்லை. பிறகு, அ.தி.மு.க., உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்தி வந்தது. தனிப்பட்ட முறையிலும் வந்தது. ஏதோ நடப்பதாக உணர முடிந்தது.எதுவும் இயற்கையான கூட்டணியாக அமைய முடியாது. விஜய்க்கு 80 - 90 சீட் கொடுத்து இருந்தால், அ.தி.மு.க.,வில் பல பேருக்கு வேலை இருந்து இருக்காது. விஜய்க்கு துணை முதல்வர் என முதலில் பேசினர். அவருக்கு 90 சீட்டும், துணை முதல்வர் கொடுத்து இருந்தால், வேலுமணி, தங்கமணிக்கு என்ன வேலை? இ.பி.எஸ்., அதிகாரத்திற்கு பங்கம் வந்துவிடும். பிரபலமான தலைவர், வெளியில் போனால் 10 முதல் 20 ஆயிரம் பேர் வரக்கூடிய தலைவருக்கு துணை முதல்வர் என்றால், முதல்வருக்கு என்ன அதிகாரம் இருக்கும்? இவருக்கு கூட்டத்தை கூட்ட வேண்டும். இவருக்கு கூட்டம் கூடும்.இந்த கூட்டணிக்கு இயற்கை எனக்கூறுவதற்கு எந்த அளவு வாய்ப்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு இயற்கைக்கு மாறானது எனக்கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

NAGARAJAN
ஏப் 16, 2025 14:59

திமுகவை தோற்கடிப்பது என்பது பகல் கனவு. . அமித்ஷாவின் தந்திரங்கள் இங்கு எடுபடாது. ‌ அப்புறம் இந்த குருமூர்த்தி ஒரு செல்லாக்காசு. ‌


Neelachandran
ஏப் 16, 2025 14:42

துக்ளக்கிற்கு ஆசிரியராக இருப்பவர் எல்லாம் சோ மாதிரி அரசியல் சாணக்கியன் ஆகமுடியாது.


Bhaskaran
ஏப் 16, 2025 11:39

திமுகவை தோற்கடிப்பது எளிதல்ல விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பார்.


Indian
ஏப் 16, 2025 10:57

தி மு க வெற்றி பெறுவது நம் எதிர்காலத்திற்கு நல்லது


Barakat Ali
ஏப் 16, 2025 11:41

உண்மை .....


Indian
ஏப் 16, 2025 10:57

என் வாக்கு தி மு க விற்கே


venugopal s
ஏப் 16, 2025 06:41

வேறென்ன காரணம் இருக்கிறது? தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து தமிழர்களை மொட்டை அடித்து விட வேண்டும் என்ற பாஜகவின் பதவி வெறி தான்!


Barakat Ali
ஏப் 16, 2025 11:42

அப்படியே வைத்துக்கொண்டாலும் சுரண்டப்பட்ட தமிழர்களை மேலும் எப்படிச் சுரண்ட முடியும் ????


Kasimani Baskaran
ஏப் 16, 2025 04:05

விஜய் என்ற பத்தாம் வகுப்பு கூட தோல்வியடைந்த நடிகர் ஒருவரை முன்னிறுத்தி கிரிஸ்தவர்களின் வாக்குகளை பிரிக்க முயன்ற பொழுதே தீம்க்காவின் வியூகம் பலருக்கு புரிந்திருக்கும். இந்த முறை தீம்காவுக்கு ஓட்டுப்போட்டு பலர் போடமாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதற்காக திராவிட பாஜக சிறப்பாக செய்துவிடும் என்றெல்லாம் அர்த்தம் செய்து கொள்ள வேண்டாம்.


Vijay D Ratnam
ஏப் 15, 2025 22:19

விஜய் கிருஸ்தவ வாக்குகளை அள்ளுவார் என்று செய்தி திட்டமிட்டு பரப்பபடுகிறது. அது எந்தளவுக்கு வொர்க் அவுட் ஆகும்னு சொல்ல முடியாது. பொதுவாக தமிழ்நாட்டில் இஸ்லாமிய, கிருஸ்தவ மற்றும் க்ரிப்டோ-கிருஸ்தவ வாக்குகள் என்பது தேர்தலுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் பாதிரியார்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்க்காக திமுகவுக்கு செலுத்தப்படும். அது அவ்ளோ சீக்கிரம் மாறும்னு தோணல. விஜய் வருகையால் முதல் அடி சீமான் கும்பலுக்கு விழும், அடுத்து சிறுத்தைக்குட்டிங்க வாக்குகள், தேமுதிக வாக்குகள் பெரும்பகுதி விஜய்க்கு திரும்பலாம். விஜய் கட் அவுட்டுக்கு பாலூத்துறை அறிவுஜீவிகள் வாக்குகள் கிடைக்கும். மற்றபடி அதிமுக, திமுக, பாமக, பாஜக, கம்யூனிஸ்ட்ஸ் வாக்குகள் ஓத்த ஒட்டு கூட கிடைக்காது. இஸ்லாமிய வாக்குகள் கால் சதவிகிதம் கூட கிடைக்காது. சிரஞ்சீவி பத்து வருடம் கழித்து சினிமாவுக்கு வந்தார். இவர் 2026 ஜூன் மாதம் அடுத்த படம் அறிவிச்சிடுவார்.


Pandianpillai Pandi
ஏப் 15, 2025 22:12

மறைமுக கூட்டணி தேர்தல் கமிஷன் என்று எண்ண தோன்றுகிறது. மக்கள் விரும்பாத ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்றால் தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்கவேண்டியுள்ளது. மக்கள் தங்கள் வாக்கு அதே சாவடியில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். பொது மக்கள் அனைவரும் இந்த முறை வாக்கு செலுத்த வேண்டும். . ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள்.


அப்பாவி
ஏப் 15, 2025 21:51

இதே விஜய்தான் உள்ளே புகுந்து குட்டைய குழப்பி, அதிமுக கூத்தாடி ஓட்டுக்களை சிதறடிச்சு தி.மு.க வெற்றிபெற வைக்கப்போறாரு. தோத்தாலும் அவர்தான் ஆட்டநாயகன்.


சமீபத்திய செய்தி