வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தென் மாவட்டங்களில் மழை பெரிதாக பெய்யவில்லை
மேலும் செய்திகள்
ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
06-Sep-2025
சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 142 மி.மீ மழைப்பதிவாகி உள்ளது.தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று மதியத்தில் இருந்து மாலை வரை தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திருவாரூர், கடலூர், ராணிப்பேட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டியது.தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தில் இன்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:நீடாமங்கலம் 142 ஸ்ரீமுஷ்ணம் 91 லால்பேட்டை 81 வாணியம்பாடி 78 புள்ளம்பாடி 65 ஆலங்குடி 64 காட்டுமன்னார்கோவில் 59 பனப்பாக்கம் 58அம்மூர் 55சின்னக்கல்லார் 54 அரவக்குறிச்சி 54 வாலாஜா 54 ஒகேனக்கல் வனம் 53 குப்பநத்தம் 53 சீர்காழி 52 போளூர் 51 மோகனூர் 50 தேவகோட்டை 50 சத்திரப்பட்டி 49 ராணிப்பேட்டை 48
தென் மாவட்டங்களில் மழை பெரிதாக பெய்யவில்லை
06-Sep-2025